கொரோனா சவால்களும் சித்த மருத்துவமும்

கொரோனா சவால்களும் சித்த மருத்துவமும் !
-----------------------------------------------------------


வெளியிட்ட தேதி : 22.05.2021

நேரம் : 6:15 Pm

தற்போதைய சூழலில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து எதையுமே கணிக்க முடியவில்லை ங்க

உடலில் என்ன மாற்றங்கள் நடக்கிறதென்றே தெரியவில்லை

இந்த இரண்டு வாரத்தில் எனக்கு வந்த தகவல்களை பகிர்கிறேன்

மூன்று சவால்கள்

சவால் 1

பரிசோதனையில் Covid Negative என வந்தும் காய்ச்சல் இருந்தது, பிறகு 2 நாளில் காய்ச்சல் அதிகமானதால், Ct Scan எடுத்து பார்த்ததில் covid ஆல் நுரையீரல் தீவிர பாதிப்பு இருந்துள்ளது, ஒரு சில மணி நேரத்தில் இறந்து விட்டார். சிறு வயது தான்.

சவால் 2

இன்னொருவருக்கு சாதாரண காய்ச்சல் தான் காலையில் இருந்தது. அன்று மாலையை Covid பரிசோதனையில் Positive வந்துள்ளது அப்போதே இறந்துவிட்டார். வயது 25

சவால் 3

இன்னொருவருக்கு சளி இருமல் காய்ச்சல் என எந்த அறிகுறியும் இல்லை காலை நன்றாக இருந்தவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் போது இறந்துவிட்டார்

இது போல் பல சவால்கள் உள்ளது,  இது போல் தினம் பல செய்திகள் மருத்துவ நட்பு வட்டாரத்தில் இருந்து வருகிறது

ஆதலால் நமது பாதுகாப்பிற்கு நான் சொல்ல நினைப்பது என்னவென்றால்

பொதுவாக நோய்களை ஐந்து கட்டங்களாக பிரிக்கலாம்

1. தொடக்க நிலை பாதிப்பு

2. சாதாரண நிலை பாதிப்பு

3. மத்திய நிலை பாதிப்பு

4. தீவிர நிலை பாதிப்பு

5. அதி தீவீர நிலை பாதிப்பு

அதே போல் சித்த மருத்துகளையும் நோயின் தன்மைக்கு ஏற்றவாறு ஐந்தாக பிரிக்கலாம்

1. தொடக்க நிலை மருந்து

2. சாதாரண நிலை மருந்து

3. மத்திய நிலை மருந்து

4. தீவிர நிலை மருந்து

5. அதி தீவீர நிலை மருந்து

சித்தர்கள் எப்படி வைத்தியம் பார்க்கனும் னு சொல்லி இருக்காங்க

வாங்க அந்த பாடலை பார்க்கலாம்

"வேர்பாரு தலைபாரு மிஞ்சினக்கால்
மெல்ல மெல்ல பற்ப செந்தூரம் பாரே"

பொருள்

அதாவது முதலில் மூலிகை தாவர மருந்துச் சரக்குகளால் ஆன மருந்துகளைக் கொண்டு நோயினை குணமாக்க முயற்சி செய்ய வேண்டும்

நோய் குணமாகவில்லை என்றால் பின்னர் மெல்ல மெல்ல பற்பம் செந்தூரம் போன்ற உயர் மருந்துகளை கொண்டு வைத்தியம் பாருங்கள்

என சித்தர்கள் வழிகாட்டுகிறார்கள்

நான் உங்களுக்கு சொல்ல நினைப்பதை சொல்வதற்கு முன்

சித்த மருத்துவத்தில் உங்களுக்கு எத்தனை வகை மருந்து வடிவங்கள் தெரியும்

பொடி, குடிநீர், சூரணம், இலேகியம், மாத்திரை

இது பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்கலாம்

ஆனால்

சித்த மருத்துவத்தில் எத்தனை மருந்து வடிவங்கள் உள்ளது அதன் பெயர்கள் என்ன என்று இப்போது பார்க்கலாம் வாருங்கள்

சித்த மருத்துவத்தில் மொத்தம் 32 மருந்து வடிவங்கள் உண்டு

இதோ அதன் பெயர்கள்

1. சுரசம் 🔱

2. சாறு 🔱

3. குடிநீர் 🔱

4. கற்கம் 🔱

5. உட்களி 🔱

6. அடை 🔱

7. சூரணம் 🔱

8. பிட்டு 🔱

9. வடகம் 🔱

10. வெண்ணெய் 🔱

11. மணப்பாகு 🔱

12. நெய் 🔱

13. ரசாயனம் 🔱

14. இளகம் 🔱

15. தைலம் 🔱

16. மாத்திரை 🔱

17. கடுகு 🔱

18. பக்குவம் 🔱

19. தேனூரல் 🔱

20. தீநீர் 🔱

21. மெழுகு 🔱

22. குழம்பு 🔱

23. பதங்கம் 🔱

24. செந்தூரம் 🔱

25. பற்பம் 🔱

26. கட்டு 🔱

27. உருக்கு 🔱

28. களங்கு 🔱

29. சுண்ணம் 🔱

30. கற்பம் 🔱

31. சத்து 🔱

32. குரு குளிகை 🔱

இவை அனைத்தும் சித்த மருத்துவத்தில் மருந்து வடிவங்களின் பெயர்கள்

இதோ நான் உங்களுக்கு சொல்ல நினைப்பது

சமூக வலைதளங்களில் மருத்துவர்கள் கூறும் தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு உங்களுக்கு நீங்களே சுய வைத்தியம் செய்யாதீர்கள்.

காரணம்

மேலே நான் கூறிய மூன்று சவால்களை சந்தித்து வருகின்றோம்

நோய் மற்றும் மருந்துகளின் ஐந்து நிலைகளை பார்த்தோம் அல்லவா

மருத்துவ குறிப்புகள் சொல்லும் மருத்துவர்கள் அனைவரும் பொது வெளியில் பொதுவான மருந்தை தான் சொல்வார்கள்

மருத்துவர்களின் குறிப்புகளை பார்க்கும் நீங்கள்

மருத்துவர்களின் கட்டுரையை படிக்கும் நீங்கள்

எந்த நிலை பாதிப்பில் உள்ளீர்கள் என்பது தகவல் வெளியிட்ட மருத்துவருக்கு தெரியாது

மருத்துவர்கள் பொதுவெளியில் கூறும் மருத்துவமுறைகள் அனைத்தும்

முதல் இரண்டு நிலை மருந்தைத்தான் சொல்வார்கள்

இந்த மருந்துகள் மட்டுமே அனைவருக்கும் அனைத்து இடங்களிலும் கிடைக்கும்

ஒரு வேளை

உங்கள் நோய் தீவிர பாதிப்பில் இருந்து

மருத்துவரை சந்திக்காமல்

இந்த குறிப்புகளை மட்டும் பின்பற்றி

தொடக்க நிலை மருந்து எடுத்து வந்தால்

உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது

அதற்காக இந்த மருந்துகளை புறக்கணிக்க சொல்லவில்லை

முன் எச்சரிக்கைக்காக மருந்தை எடுத்துவிட்டு

சித்த மருத்துவரை சந்தியுங்கள் என சொல்கிறேன்

எனது உயிர் காக்கும் சித்த மருந்துகள் கட்டுரையில்

3 நாள் பொறுத்திருந்து பிறகு மருத்துவரை சந்தியுங்கள் என சொல்லி இருப்பேன்

தற்போது நிலவும் சூழலை பார்க்கும் போது கொரோனா அறிகுறி ஒன்று இருந்தாலும் இனி ஒரு நிமிடம் கூட தாமதிக்க கூடாது என தெரிய வருகிறது

எனவே தங்களுக்கு எந்த கொரோனா symptoms இருந்தாலும்

தற்போது என்னுடைய அறிவுரை என்னவென்றால்

உடனடியாக அருகில் உள்ள சித்த மருத்துவரை சந்திக்கவும்

உங்கள் நோயின் பாதிப்பிற்கு ஏற்ப

சித்த மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்

நீங்கள் தீவிர பாதிப்பில் இருந்து

வீட்டில் தொடக்க நிலை சித்த மருந்தை எடுத்து உடலில் பின்னடைவு ஏற்பட்டால்

தவறு உங்கள் மீது தானே தவிர

அந்த மருத்துவம் மீது கிடையாது

வைத்தியம் நோய்க்கு அல்ல

வைத்தியம் நோயாளிக்கு தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள்

உலகின் உயர்ந்த மருத்துவம் சித்த மருத்துவம்

இம்மருத்துவத்தை சித்த மருத்துவர்கள் துணை கொண்டு சரியான முறையில் எடுத்துக்கொள்ளுங்கள்

எனவே சாதாரண காய்ச்சல் தானே என அலட்சியமாக இருக்காதீர்கள்

அலட்சியம் உயிர் பறிக்கும்

எச்சரிக்கை தேவை

இப்பதிவை பகிர்ந்திடுங்கள்

உயிர்களை காத்திடுங்கள்

பயம் தேவை இல்லை அனைத்து நிலை பாதிப்பிற்கும் சித்தர்கள் மருந்துகளை சொல்லி உள்ளார்கள்

சரியான வைத்தியம் பாருங்கள் என்று தான் சொல்கிறேன்

நன்றி

இரா.மதிவாணன்

🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽


Comments

  1. Very good informations and vere rare informations. Thanks for sharing

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

கட்டுரை 8 (05.04.2016)