Posts

Showing posts from August, 2020

கொரோனா இல்லா தமிழகம் !

Image
கொரோனா இல்லா தமிழகம் ! -------------------------------------------- வெளியீடு தேதி : 11.08.2020 நேரம் : 1.54 Pm கட்டுரை எண் : 58 தமிழகத்தின் ஒவ்வொரு வீடும் கொரோனா தடுப்பு மையமாக மாற இக்கட்டுரை உங்களுக்கு வழிகாட்டும். இக்கட்டுரையில் தமிழகத்தில் பல ஆயிரம் கொரோனா தொற்றாளர்களை வெறும் ஏழே நாட்களில் குணப்படுத்தி வரும் Covid 19 சித்த மருத்துவ மையங்கள் அளித்து வரும் சிகிச்சையையும். தமிழக  அரசு மற்றும் கேரள அரசு கொரோனா தடுப்பிற்காக வெளியிட்ட சித்த மருத்துவ குறிப்புகளையும். சித்த மருத்துவர்கள், கேரள பாரம்பரிய மருத்துவர் வழிகாட்டுதலையும் எனது மருத்துவ அனுபவத்தையும் இணைத்து தொகுத்துள்ளேன். அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல ஆயிரம் கோடிகளை  செலவளித்து வருகிறது. தமிழகத்தின் ஒவ்வொறு வீடும் கொரோனா தடுப்பு மையமாக மாறினால். கொரோனா பரவுவது தடுக்கப்படும். எந்த அறிகுறியும் இல்லாமல் நமக்கு தெரியாமல் கொரோனா இருந்தாலும் குணமாகும். அரசின் பாரம், செலவு அரவே குறையும். ஒவ்வொறு வீடும் கொரோனா தடுப்பு மையமாக மாற நாம் செய்ய வேண்டிய மொத்த சித்த மருத்துவ தொகுப்பு இதோ. மருத்துவ முறைகள் ! ---------------------