Posts

Showing posts from June, 2019

நரகத்தின் வாசல் ஹைட்ரோகார்பன் !

Image
நரகத்தின் வாசல் ஹைட்ரோகார்பன் ☠️ ------------------------------------------------------------------------------ நீங்கள் நேசமணியை பேசிக்கொண்டிருக்கும் இதே வேளையில் நாட்டை நாசமாக்கும் வேலை தொடங்கிவிட்டது என்பதை நீங்கள் அறிவீர்களா ! ஆம், மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தின் நிலம் மற்றும் கடல் பரப்பில் மொத்தம் 341 இடங்களில் Hydrocarbon கிணறுகளை அமைக்க முதற்கட்ட ஆய்வு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு மொத்தம் 4.37 லட்சம் ஹெக்டேர் பரப்பளவை கையகப்படுத்தப்பட உள்ளார்கள். அதில் 67 இடங்கள் ONGC க்கும் 274 இடங்கள் Vedanda வின் Carin Oil and Gas நிறுவனத்திற்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது. Hydrocarbon எடுக்கும் போது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை (Environment Impact Assessment study) பதிவு செய்து அதை அறிக்கையாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு (Environmental Ministry) சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிக்கையில் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லாத பட்சத்தில் நிரந்தரமாக எந்த வித தங்கு தடையின்றி Hydrocarbon எடுக்க நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் அரசால் வழங்கப்படும். மீண்டு