நரகத்தின் வாசல் ஹைட்ரோகார்பன் !

நரகத்தின் வாசல் ஹைட்ரோகார்பன் ☠️
------------------------------------------------------------------------------


நீங்கள் நேசமணியை பேசிக்கொண்டிருக்கும் இதே வேளையில் நாட்டை நாசமாக்கும் வேலை தொடங்கிவிட்டது என்பதை நீங்கள் அறிவீர்களா !

ஆம், மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தின் நிலம் மற்றும் கடல் பரப்பில் மொத்தம் 341 இடங்களில் Hydrocarbon கிணறுகளை அமைக்க முதற்கட்ட ஆய்வு அனுமதி வழங்கி உள்ளது.

இதற்கு மொத்தம் 4.37 லட்சம் ஹெக்டேர் பரப்பளவை கையகப்படுத்தப்பட உள்ளார்கள்.

அதில் 67 இடங்கள் ONGC க்கும் 274 இடங்கள் Vedanda வின் Carin Oil and Gas நிறுவனத்திற்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

Hydrocarbon எடுக்கும் போது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை (Environment Impact Assessment study) பதிவு செய்து அதை அறிக்கையாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு (Environmental Ministry) சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த அறிக்கையில் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லாத பட்சத்தில் நிரந்தரமாக எந்த வித தங்கு தடையின்றி Hydrocarbon எடுக்க நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் அரசால் வழங்கப்படும். மீண்டும் சொல்கிறேன் அறிக்கையில் பாதிப்பு இல்லாத பட்சத்தில் !

ஏற்கனவே ONGC தமிழகத்தில் 27 இடங்களை Hydrocarbon கிணறு அமைத்து சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு நடத்தி 464 பக்கத்தில் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை - 'Environmental Assessment Report' தயார் செய்து 2015 ஆம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் சமர்ப்பித்துள்ளது.

இதோ 464 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையின் pdf link 👇🏾

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=http://environmentclearance.nic.in/writereaddata/EIA/01012016VF79I57BEIAReport.pdf&ved=2ahUKEwiU0a2ppsbiAhWm73MBHdxlAlsQFjABegQIBhAH&usg=AOvVaw0g-UvGgS4UENA7iyaGCHtq

இக்கட்டுரை மத்திய அரசு மற்றும் நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகள், 464 பக்கங்கள் அடங்கிய ONGC யின் Environmental Impact Assessment report 2015 அறிக்கையில் உள்ள தகவல்கள் மற்றும் இதை தழுவி எழுதப்பட்ட கிழக்கு பதிப்பகத்தின் திரு.க.அய்யநாதன் அவர்கள் எழுதிய ஹைட்ரோ கார்பன் அபாயம் புத்தகத்தில் இருக்கும் அதிகாரப்பூர்வ தகவல்களை கொண்டு மட்டும் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



341 இடங்கள் மூன்று Block குகளாக பிரிக்கப்பட்டு 2 Vedanda விற்கும், 1 ONGC க்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதை இப்பொழுது முழுமையாக பார்ப்போம்.

VEDANDA - BLOCK 1

5,690.93 கோடி செலவில் விழுப்புரத்தில் 139 sq km, பாண்டிச்சேரியில் 2 Sq km மற்றும் கடல் பகுதியில் 1654 sq km கொண்ட 1,79,400 ஹெக்டேர் பரப்பளவில் 116 Hydrocarbon கிணறுகளை அமைக்க உள்ளார்கள். இது 10 to 12 வருடங்கள் இயங்கும்.

VEDANDA - BLOCK 2

7,848.635 கோடி செலவில் நாகப்பட்டினத்தில் 142 sq km, காரைக்காலில் 39 sq km மற்றும் கடல் பகுதியில் 2,393 sq km கொண்ட 2,57,400 ஹெக்டேர் பரப்பளவில் 158 Hydro carbon கிணறுகளை அமைக்க உள்ளார்கள். இது 10 to 12 வருடங்கள் இயங்கும்.

VEDANDA : 116 + 158 = 274 கிணறுகள்

ONGC - BLOCK 3

1,400 கோடி செலவில் கடலூரில் 597 sq km, நாகப்பட்டினத்தில் 33.8 sq km, கடல் பகுதியில் 698.2 sq km கொண்ட 1,32,900 ஹெக்டேர் பரப்பளவில் 40 Hydrocarbon கிணறுகளை அமைக்க உள்ளார்கள்.

புவனகிரி மற்றும் பெருங்குடி Fields Expansion

கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் 2015 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை - Environment Impact Assessment Study செய்ய 27 Hydrocarbon கிணறுகளை அமைத்தார்கள் அல்லவா அதை இப்பொழுது 3750 கோடி செலவில் 8 வருடங்கள் நீட்டிக்க உள்ளார்கள்.

ONGC : 40 + 27 = 67 கிணறுகள்

VEDANDA + ONGC

274 + 67 = 341 கிணறுகள்.



இது குறித்து 12.04.2019 அன்று THE NEW INDIAN EXPRESS ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் link 👇🏾

https://www.google.com/amp/www.newindianexpress.com/states/tamil-nadu/2019/apr/12/341-hydrocarbon-wells-to-be-drilled-in-tamil-nadu-by-vedanta-and-ongc-1963190.amp

இது குறித்து 13.05.2019 அன்று THE HINDU ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் link 👇🏾

https://www.google.com/amp/s/www.thehindu.com/news/national/tamil-nadu/vedanta-gets-nod-to-conduct-impact-assessment-for-274-hydrocarbon-wells-in-tn-puducherry/article27113607.ece/amp/

இதுவரை பார்த்தது தற்போது உள்ள நிலை இனி இத்திட்டம் இம்மண்ணிற்கு புதிதா ? என்று பார்ப்போம்.

இன்று தான் இத்திட்டம் தொடங்கியதா ?
---------------------------------------------------------------------


இத்திட்டம் இன்று தான் தொடங்கியதா என்று கேட்டால் ? நிச்சயம் கிடையாது !

1970 வது களிலேயே இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கிவிட்டது. கடந்த 50 ஆண்டுகளாக காவிரி படுக்கையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுக்கள் இருக்கும் இடங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது !

கொஞ்சம் மனதை லேசாக்கிகொள்ளுங்கள். தமிழகத்தில் மட்டும் இதுவரை 700க்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகள் உள்ளதாக இந்திய அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை சொல்கிறது.

இதில் தற்போது நாள் ஒன்றுக்கு 700 டன் கச்சா எண்ணெயும், 38 லட்சம் கன மீட்டர் எரிவாயுவையும் எடுத்து வருவதாக இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ONGC சொல்கிறது.

ONGC நிலத்திற்குள் நுழையும் முன் விவசாயிகளிடம் உங்களுக்கு நீர் எடுத்து தருகிறோம், மண்ணென்னை எடுத்து தருகிறோம் என பல்வேறு பொய்களை கூறியே நிலங்களை அப்பாவி விவசாயிகளிடம் இருந்து அபகரித்துள்ளது என்பது தெரிய வருகிறது.

இதனால் அப்பகுதி விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு, நீர் வளம், நில வளம் என அனைத்தும் கெடுக்கப்பட்டுள்ளது என்ற உண்மை அப்பகுதி மக்களிடம் நீங்கள் நேரடியாக பேசும் போது தெரிய வரும்.

50 வருடம் ஏற்கனவே உள்ள திட்டம் தானே இப்பொழுது மட்டும் என்ன பெரிய ஆபத்து வந்துவிட்டப் போகிறது என்று கேட்கிறீர்களா ?

இதுவரை போட்ட எண்ணெய் கிணறும் தற்போது வர உள்ள எண்ணெய் கிணறும் ஒன்றா என்றால் ? நிச்சயம் கிடையாது !

இதுவரை போடப்பட்ட கிணறுகள் அனைத்தும் Conventional method பின்பற்றும் கிணறுகள் ! இனி வர உள்ளது Unconventional method பின்பற்ற உள்ள கினறுகள். Conventional method - பழங்கால முறை, Unconventional method - புதிய தொழில்நுட்பம்.

சரி வாருங்கள் முதலில் Hydrocarbon என்றால் என்ன என்பதை பார்ப்போம்.

Hydro Carbon என்றால் என்ன ?
-----------------------------------------------------


Hydrocarbon என்பதே ஒட்டு மொத்த பெட்ரோலிய பொருட்களின் பொது இரசாயன பெயர் - Common Chemical Name !

Hydrocarbon என்றாலே Crude oil, Methane, Ethane, Propane, Butane, Petrol, Diesel, Kerosene, Napthalene, Liquid Paraffin, Petroleum jelly, Liquid petroleum gas (LPG), Lubricant oils, Paraffine wax, Asphalt, Tar, Plastic and Petrochemicals என அனைத்தும் இதனுள் அடக்கம்.

1 Carbon, 4 Hydrogen அணு இணைந்திருந்தால்

METHANE : CH4

2 Carbon, 4 Hydrogen அணு இணைந்திருந்தால்

ETHANE : C2H6

3 Carbon, 6 Hydrogen அணு இணைந்திருந்தால்

PROPANE : C3H8

4 Carbon, 10 Hydrogen அணு இணைந்திருந்தால்

BUTANE C4H10

Propane + Butane கலவை தான் சமையலுக்கு பயன்படுத்தும் LPG Gas.

12 Carbon ,23 Hydrogen அணு இணைந்திருந்தால்

DIESEL : C12H23

இப்படி ஒட்டு மொத்த கச்சா எண்ணெயின் பொது Chemical Name தான் Hydro Carbon.

எனவே Hydrocarbon திட்டம் என்றாலோ, Methane திட்டம் என்றாலோ, Shale gas திட்டம் என்றாலோ அனைத்துமே ஒன்று தான் !

Hydrocarbon என்றால் என்ன என்பதை பார்த்தோம், இப்பொழுது அதை பூமிக்கடியில் எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்று பார்ப்போம்.

Hydrocarbon கண்டறியும் முறை !
--------------------------------------------------------


பூமிக்கடியில் 60 அடி ஆழத்தில் துளையிட்டு அதில் வெடிப்பொருட்களை செலுத்தி வெடிக்க வைப்பார்கள்.

இந்த அதிர்வு பூமிக்கடியில் ஊடுருவி சென்று Shale என்னும் வண்டல் பாறையில் மோதி திரும்ப நிலத்திற்கு வந்தால் அங்கு Hydrocarbon இருப்பதை உறுதி செய்வார்கள்.

இந்த அதிர்வலை சென்று வரும் நேரத்தை வைத்து ஹைட்ரோ கார்பன் எத்தனை அடி ஆழத்தில் உள்ளது என்பதை கணக்கிடுவார்கள்.

அந்த பகுதி Hydrocarbon இருப்பு உறுதியானால், நிலத்திற்கு வேலி இட்டு விடுவார்கள். அதற்கான இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

பூமிக்கடியில் வெடிக்கப்படுவதால் விவசாயத்திற்கு நிலத்தடி நீர் வந்துகொண்டிருந்த பல ஆழ்துளை கிணறுகளில் இந்த வெடிப்பிற்கு பிறகு நீர் வருவதில்லை என புகார் செய்கிறார்கள்.

இது கடந்த 50 ஆண்டுகளாக காவிரி படுகையில் நடந்து வருகிறது.

Hydrocarbon என்றால் என்ன என்றும், இருப்பை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்றும் பார்த்தோம். இப்பொழுது தான் மிக முக்கியமான கட்டத்திற்கு வந்துள்ளோம். Hydrocarbon எப்படி எடுக்கிறார்கள் என்று பார்ப்போம் வாருங்கள்.

Hydrocarbon எடுக்கும் முறை !
----------------------------------------------------


உலகின் அழகிய இடமான நம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றழைக்கப்படும் காவிரி படுகை பச்சைப் பட்டு உடுத்தி பிரம்மாண்டமாய் காட்சியளிக்க. சல சலக்கும் நீர் பாசன சத்தத்திற்கு மத்தியில் நெல் மணிகள் அழகாய் ஆடி மனதை வருடிக்கொண்டிருக்கும் அதே வேலையில், ஒரு பக்கம் காட்சிகள் மாறத்தொடங்குகிறது !

நாம் காலணி கூட அணியா நடக்கும் தெய்வமாய் வணங்கும் வயல்களில் கொஞ்சம் கூட கூச்சமே இன்றி பெரிய பெரிய இராட்சத இயந்திரங்கள் வந்து இறங்கும். பின் Hydrocarbon கிணற்றின் மையத்தை சுற்றி 5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டும்.

உயிர்களின் கதறல்கள் விண்ணை பிளக்க, அமைதியின் செரூபமான பூமாதேவி தாயோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் அதே வேளையில். அவள் உடலை பிளந்து இராட்சத இயந்திரங்கள் துளையிடத்தொடங்கும். அப்பொழுதும் அவள் அமைதியே காப்பாள். ஏன் என்றால் அவள் உன்னை காக்கும் தாயாயிற்றே !

உயிர்களின் கதறல்களை மனித மிருகங்கள் பொருட்படுத்தாமல் 49 கோடி ரூபாய் செலவில் 30 வேலை ஆட்கள் நாள் ஒன்றிற்கு 25,000 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தி 6 இராட்சத டீசல் ஜெனரேட்டர்  உதவியுடன் 82 நாட்கள் இரவும் பகலும் இயங்கி 3000 முதல் 6000 மீட்டர் வரை துளையிடுவார்கள் பின்பு அங்கிருந்து பல பக்கவாட்டு துளைகள் போடப்பட்டு ஒரு நரக கிணற்றை அமைப்பார்கள்.

பின் அமைக்கப்பட்ட கிணற்றில் France, Scotland, Germany, Bulgaria உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட Hydraulic Fracturing என்னும் FRACKING முறைப்படி Hydrocarbon எடுக்க தொடங்குவார்கள். இன்னும் பல நாடுகளில் இதை தடை செய்ய வேண்டும் என மக்கள் போராடி வருகிறார்கள்.

Hydrocarbon எடுக்கும் அத்தியாயம் தொடங்குகிறது.

6000 மீட்டர் ஆழத்தில் உள்ள ஒரு கிணற்றிற்கு 5 லட்சம் லிட்டர் நீர் பயன்படுத்தி அதில் பல்வேறு நூற்றுக்கணக்கான நச்சு இரசாயனம் மற்றும் 2,500 டன் மணலை கலந்து 6000 டன் அழுத்தத்தில் பூமிக்கடியில் Shale rocks என்று சொல்லப்படும் வண்டல் பாறையில் மீது வேகமாக மோதவிடுவார்கள்.

இந்த அதிர்வில் பாறையில் விரிசல் ஏற்பட்டு அதில் உள்ள எரிவாயு Methane மற்றும் கச்சா எண்ணெய் என அனைத்தும் உள் செலுத்தப்பட்ட மணல் கலந்த நச்சு நீருடன் கலந்து வெளியேறும். பின் இதை கலன்களில் சேகரித்து சுத்திகரிப்பு ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படும். அங்கு Methane உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்கள் தரம் பிரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படும்.

வண்டல் பாறைகள் உடையும் போது மீத்தேன் உள்ளிட்ட நச்சு வாயுக்கள் நிலத்தடி நீருடன் கலக்கும். இது அமெரிக்காவில் நடந்துள்ளது. ஒரு அம்மா வீட்டு பாத்திரங்களை கழுவும் போது தண்ணீர் தீப்பற்றி எரிந்தது.

இதில் வெளியேறும் நச்சு நீர் திறந்தவெளி HDPE lined Waste pit ற்குள் சேகரிக்கப்படும். அதுவும் இதில் சாதாரண இரசாயன கழிவு நீர் மட்டும் அல்ல கதிரியக்க தன்மை உடைய இரசாயனப் பொருட்களை கொண்ட நச்சுக்கழிவு நீரும் உள்ளது. சாதாரண சாயக்கழிவு நீரில் இருந்து நம்மை காக்காத அரசு தான் இந்த கதிரியக்க கழிவில் இருந்து நம்மை காக்க போகிறார்கள். 2011ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அமெரிக்காவின் ஒரு பகுதி மக்கள் கேட்கும் போது 268 விதமான புற்றுநோய்களை உருவாக்கும் இரசாயனங்களை நிறுவனங்கள் பூமிக்குள் செலுத்தியது அம்மக்களுக்கு தெரியவந்தது.

இதில் மீத்தேன், கச்சா எண்ணெய் மட்டும் தான் வெளியேறுமா ? இல்லை, அதிபயங்கரமான சில உயிர்கொல்லி விஷ வாயுக்களும் வெளியேறும். இதை ONGC யே தனது அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அது என்ன பின்னர் பார்ப்போம்.

கழிவுத்தொட்டிகளை சுத்தம் செய்ய சென்றவர்கள் விஷ வாயு தாக்கி பலி என்று பல செய்திகளில் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். சாதாரண கழிவு தொட்டிக்கே இந்த நிலை என்றால் 6000 மீட்டர் ஆழக் கிணற்றால் என்ன ஆகுமென சிந்தித்து பாருங்கள்.

நூற்றுக்கணக்கான இரசாயனங்கள் நீர் மற்றும் மணலுடன் கலந்து பூமிக்கடியில் செலுத்துவார்கள் என்று சொன்னேன் அல்லவா ! அதில் சில இரசாயன பெயர்களை இப்பொழுது பார்ப்போம்.

Barite, Carboxyl Methyl Cellous, Bentonite, Mud Thinner Conditioner, Resigated lignite, Non weighted spotting fluid, Weighted Spotting fluid, Ep lube, Drilling detergent, Caustic Soda, Potassium Chloride, Soda Ash, Sodium bicarbonate, Sodium, Mica ofcellethane, Cellous polymers or starch, Aluminium stearate, vegetable oil, Mud stoping Fluid, Guar gum, diesel, Alkanes, Alkenes, Sodium thiosulphate, Ammonium persulfate, Sodium persulfate, Polyacrylamide, Methanol, Ethyle glycol, Surfactants, Fluorocarbon Surfactants, Hydrochloric acid, muriatic acid, glutaraldehyde, Tetrakis hydoxymethyl phosphonium sulfate, Nitrilopropionamide, tetramethyl Ammonium chloride, Formamide, Naphthalene, Naptha, Nonyl phenols, Acetaldhyde, Citric acid, Thioglycolic acid, Potassium carbonate, Isopropanol, Butoxyethanol, Barium sulphate, Glutaraldehyde, Zinc carbonate, Sodium Polyacrylate, Ammonium, Bisulphate, Glucol blends, Light aromatic and aliphatic oil, Chlorinated Paraffins, anionic Polyacrylamide, Acrylamide copolymers, Petroleum distillates, Sodium sulfide, Sodium chloride, Calcium chloride, Perfluorooctane sulfonate, POPs Chemicals.



ஐ.நா.வின் சுற்றுச்சூழல் எச்சரிக்கை

POPs are recognised as the most dangerous of all man made Chemicals. மனிதன் கண்டுபிடித்ததிலேயே மிக ஆபத்தான இரசாயனம் இது என்று ஐ.நா எச்சரிக்கிறது.

கசிவோ, விபத்தோ ஏற்பட்டால் இந்த நச்சு இரசாயனங்கள் நிலத்தடி நீருடன் கலக்க வாய்ப்புகள் உள்ளது.

இதுவரை Hydrocarbon என்றால் என்ன ? அதன் இருப்பை எப்படி கண்டுபிடிப்பார்கள் ? எப்படி எடுப்பார்கள் ? இனி இதன் பாதிப்பு எத்தகையது என்று ONGC யே தனது அறிக்கையில் கூறி உள்ளது அதை பார்ப்போம் வாருங்கள்.

Hydrocarbon திட்டத்தால் நிகழும் பேராபத்துக்கள் !
-------------------------------------------------------------------

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் என்ன மாதிரியான பாதிப்புகள் எல்லாம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்று 2015 ஆம் ONGC மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு சமர்பித்த 464 பக்கங்களை கொண்ட Environment Impact Assessment report ல் உள்ளதை அப்படியே அச்சு பிசராமல் மொழிபெயர்த்து உங்களுக்கு சொல்லப்போகிறேன்.



1 - முக்கிய பகுதிகளில் இடையூறு ஏற்படலாம்
2 - மண் இறுகிப்போகலாம்
3 - நிலத்தடி நீருக்கு இடையூறு ஏற்படலாம்
4 - கழிவு நீர் கால்வாய்களுக்கு இடையூறு
5 - சிற்றோடைகளுக்கு இடையூறு
6 - Hydrocarbon கலப்படம் ஏற்படலாம்
7 - தீ பிடிக்கலாம்
8 - இனப்பெருக்கம் மற்றும் இடப்பெயர்வில் விலங்கினங்களுக்கு இடையூறு ஏற்படலாம்.
9 - ஒலி மற்றும் ஒளி மாசு ஏற்படலாம்
10 - அழிந்து வரும் பட்டியலில் உள்ள விலங்கினங்களுக்கும் ஒட்டு மொத்த பல்லுயிர் பெருக்கத்திற்கும் இடையூறு ஏற்படலாம்.
11 - நச்சு களைகளால் மண் புழுவிற்கும் விலங்கினங்களுக்கும் நோய்கள் ஏற்படலாம்.
12 - தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைவு.
13 - விவசாய பெருங்குடி மக்களின் வாழ்விடங்களுக்கு இடையூறு ஏற்படலாம்.
14 - தொல்பொருள் ஆய்வு இடங்கள் மற்றும் பாரம்பரியத்திற்கு இடையூறு ஏற்படலாம்.
15 - சுற்றுலாவிற்கு இடையூறு ஏற்படலாம்.
16 - பொது மக்களுக்கு இடையூறு ஏற்படலாம்
17 - கால்நடை மேய்வு நிலங்களுக்கு இடையூறு ஏற்படலாம்.
18 - விவசாயத்திற்கு இடையூறு ஏற்படலாம்.
19 - தோட்ட வேலைகளுக்கு இடையூறு ஏற்படலாம்.
20 - அழகியலுக்கு இடையூறு ஏற்படலாம்
21 - இனத்தத்துவ தளங்களுக்கு இடையூறு ஏற்படலாம் (பழங்காலக் கோவில்கள்)
22 - மூன்றாவது மனிதர்கள் நுழைய மறுப்பு
23 - அருகில் உள்ள தொழிற்ச்சாலைகளுடன் தொடர்பு.



இதை எதுவும் நான் சொல்லவில்லை ONGC யின் அறிக்கை சொல்கிறது. கொஞ்சம் பொறுங்கள் இன்னும் என்னவெல்லாம் சொல்லி இருக்கிறது என்று பார்ப்போம்.

காற்றின் தூய்மையில் சாத்தியமான தாக்கங்கள் !

Drilling வேலையின் போது Drilling sets ல் இருந்து வெளியேறும், Oxides of sulphur and Nitrogen னாலேயே காற்று மாசு ஏற்படுகின்றது.

Site preparation னின் போது போக்குவரத்தாலேம், bulI dozer, t railer, tractor போன்ற கனரக பெரிய வாகனங்கள் தூசு கிளம்ப வாய்ப்புகள் உள்ளது. இவை அருகில் உள்ள வீடுகளுக்கும் விவசாய நிலத்தில் உள்ள பயிர்களுக்கும் இடையூராக அமையலாம்.

அதுமட்டும் இன்றி Drill site யில் சேமித்து வைக்கப்பட்டுள்ள Volatile chemical மற்றும் diesel ல் இருந்து fugitive emissions அதாவது காற்றில் கசிவு ஏற்படலாம்.

Rig equipment களை ஒரு site ல் இருந்து மற்றொரு site களுக்கு கனரக வாகனங்களில் கொண்டு செல்லும் போது காற்று சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட வாகனமாக இருந்தால் கூட காற்று மாசு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நீரின் தூய்மையில் சாத்தியமான தாக்கங்கள் !

கிணற்றில் இருந்து வெளியேறும் waste water ல் clay, Caustic Soda, Soda Ash, Polycramide and other Chemicals இவைகள் HDPE lined waste pit ல் சேமிக்கப்படும்.

நிலத்தடி நீரில் சாத்தியமான தாக்கங்கள் !

Bull dozer போன்ற கனரக வாகனங்கள் இயங்குவதால் மண் இறுகி நிலத்தடி நீர் recharge ஆவது குறையலாம்.

Fuel, Lubricant and chemical சின் Accidental discharge ஆல் நிலத்தடி நீர் மாசு ஏற்படலாம்.

ஒலி மாசில் சாத்திய தாக்கங்கள் !

பூமி துளையிடும் போது குறிப்பிடத்தகுந்த சத்தத்தால் சுற்றுவட்டார மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். Site ல் வேலை செய்யும் ஆட்களுக்கு செவி பாதிக்காமல் இருக்க Ear plugs வழங்கப்படும்.

நிலத்திற்கு ஏற்படக்கூடிய சாத்திய தாக்கங்கள் !

விவசாயத்தை அப்புறப்படுத்திவிட்டு சம தரை தளம் அமைத்து கன ரக வாகனங்கள் வருவதற்காக பூமி Hardening செய்யப்படுவதால் அவ்விடத்தில் அழகியல் தோற்றமே மாறுபடும். (இதையும் ONGC தான் சொல்கிறது, பரவாயில்லை இது அழகான இடம் என்று அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள்)



கிணற்றில் இருந்து வெளியேற்றப்படும் மண் மற்றும் நீர் அங்கு கொட்டப்படுவதால் மண்ணின் பண்புகள் மாறுபடும். மேலும் domestic waste மற்றும் Sewage from domestic toilet ஆல் அவ்விடத்தின் அமைப்பே மாறுபடும். Which may affect land Environment.

மண்ணின் தரத்தில் சாத்திய தாக்கங்கள் !

Equipments களை கனரக வாகனங்கள் மூலம் ஒரு Site ற்கு இருந்து இன்னொரு site களுக்கு கொண்டு செல்லும் போது மண்ணின் தரம் மற்றும் வடிவங்களுக்கு சீரழிவு எற்பட்டு மண் இறுகிப்போகலாம். இதனால் மண்ணின் நீர் பிடிமானத்தன்மை  பாதிக்கப்பட்டு வடிகால் கட்டமைப்புகள் மற்றும் நீர் நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் (மண்ணுடன் நீரை இணைப்பவன் உடலுடன் உயிரை இணைக்கும் கடவுளுக்கு நிகரானவன் என்று ஒரு புறநானூறு பாடல் சொல்கிறது, இவர்கள் மண்ணிடம் இருந்து நீரை பிரிக்கும் வேலையை செய்கிறார்கள்)

மண்ணில் கலப்படம் !

தளமிடும் போதும், போக்குவரத்தின் போதும், துளையிடும் போதும் இரசாயனங்கள், Lubricants கள் ஆல் மண்ணில் கலப்படம் நிகழலாம்.

வெளியேறும் இரசாயன மண் கலவை நீரை சேகரிப்பதில் அலட்சிய போக்கினால் மண்ணில் கலப்படம் ஏற்படலாம்.

உயிர்ச்சூழலில் சாத்திய தாக்கங்கள்

The study are is mainly agriculture are. The impact on vegetation will be very low (திட்டம் நடைபெற உள்ள இடம் விவசாய பூமி என்றும் அதில் பாதிப்பு ஏற்படும் என்றும் இருபெரு உண்மைகளை இவர்களே ஒப்புக்கொள்கிறார்கள்)

சமூக பொருளாதாரத்தில் சாத்திய தாக்கங்கள்

Site preparation னின் போது கனரக வாகனங்கள் Heavy loads களை ஏற்றிச்செல்வதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் அதிக சத்தம் (Noise pollution) மற்றும் தூசுக்கள் பறப்பதால் பாதிக்கப்படுவார்கள்.







Drilling process விவசாய வேலையை பாதிப்பதால், விதைப்பு இல்லா நாட்களை தேர்வு செய்து drilling process மேற்கொள்ளப்படும்.

எதிர்ப்பார்க்கப்பட்ட தீங்குகள் !

1 - Blow outs
2 - H2s exposure
3 - H2s Induced Blowouts
4 - Oil spills

BLOW OUTS




சில நேரங்களில் மனித தவறாலும், இயற்கை நிகழ்வாலும் அதி அழுத்த வேகத்துடன் வெளியேறும் வாயுக்கள் தீடிரென்று தீப்பிடித்து வெடிக்க வாய்ப்புகள் உள்ளது.

H2s EXPOSTURE


முன்பு மீத்தேன் மற்றும் கச்சா எண்ணெய்யுடன் ஒரு விச வாயு வெளியேறுகிறது என்று சொன்னேன் அல்லவா அது தான் Hydrogen Sulphide. நிறமில்லாத, அதிக எரியும் தன்மை உடைய அழுகிய முட்டை நாற்றம் உடைய வாயு தான் Hydrogen Sulphide (Highly Dangerous and Highly Flammable)

இதனால் என்ன பாதிப்புகள் வரும் என அறிக்கை பட்டியலிட்டு உள்ளது - கண் மூக்கு தொண்டை எரிச்சல், சுவாச மண்டலம் பாதிப்பு, நரம்பு மண்டலம் பாதிப்பு, இருமல், முகர்தல் உணர்வு குறைவு, மூச்சுத்திணறல், ஆஸ்துமா, கண் வீக்கம், தலைவலி, வாந்தி, பேதி, சோர்வு, தூக்கமின்மை, செரிமானக்கோளாறு, உடல் எடை குறைவு,

இவை எல்லாம் H2s காற்றில் 100PPM அளவு கலந்திருந்தால் நிகழ்வது.

300PPM த்திற்கு மேல் போனால் தீடீர் மரணம் ஏற்படும் என்று EFFECTS OF H2S ON PERSONNEL என்ற தலைப்பின் கீழ் ONGC சொல்கிறது.

H2s Induced Blowouts

Hydrogen Sulphide highly flammable hazardous gas என்பதால் இதன் மூலமாகவும் திடீரென்று தீ பிடிக்க வாய்ப்புகள் உள்ளது.

Oil spills

சோதனையின் போதும், எண்ணெய் குழாய் கசிவினாலும் கச்சா எண்ணெய் கசியலாம். (சென்னையில் கடலில் கலந்த கச்சா எண்ணெய்யை இவர்கள் எப்படி எடுத்தார்கள் என்பதை உலகே அறியும்)

மீண்டும் சொல்கிறேன் இவை எல்லாம் நான் சொல்லவில்லை ங்க. ONGC 2015 ஆம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு சமர்ப்பித்த அறிக்கை சொல்கிறது. இத்தனையும் சொல்லிவிட்டு இவை எல்லாம் சரி செய்யக்கூடிய தற்காலிக பாதிப்பே என்கிறது அந்த அறிக்கை.

இனி இதில் உள்ள சில இரசாயனங்களால் மனிதனுக்கு என்ன பாதிப்புகள் நிகழும் என்று ஐ.நாவின் சுற்றுச்சூழல் அறிக்கை சொல்வதை பார்ப்போம்.

ஐ.நா.சுற்றுச்சூழல் அறிக்கை !
-----------------------------------------------------

Ethylene Glycol : சுவாச மண்டல பாதிப்பு மற்றும் பெண்களுக்கு கருச்சிதைவை ஏற்படுத்தி மலட்டுத்தன்மை உருவாக்கும்.

2 - Butozyethanol : நீருடன் வேகமாக கலக்கும், விலங்குகளின் இன விருக்தி பாதிப்பு, பிறப்பு குறைபாடு மற்றும் ரத்த சிவப்பணுக்களை சிதைக்கும்.

Ethoxylated 4-nonylphenol : உடல் தசைகளில் வேகமான இணையக்கூடியது, ஜீரண மண்டலம், நரம்பு மண்டலம், இனப்பெருக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, மார்பகப் புற்று நோய்.

Methanol : காற்று மற்றும் நீரை மாசுப்படுத்தும். உடலின் அமிலத்தன்மை அதிகரிக்கும்

Isopropanol : மூளை வளர்ச்சி மாற்றம், நரம்பு மண்டலம் பாதிப்பு.

Formamide : கருமுட்டை மற்றும் கருவில் குழந்தை வளர்ச்சி பாதிப்பு.

Naphthalene : மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய், கார்சனோஜனை உருவாக்கும் என சர்வதேச புற்றுநோய் (IARC) பட்டியிடப்பட்ட வேதிப்பொருள்கள் இது.

அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா, காலிபோர்னியா ஆகிய மாகாணங்களில் Hydrocarbon எரிவாயு எடுக்கும் போது வெளியேறிய கழிவு நீரை ஆய்வு செய்ததில் அதில் மிக ஆபத்தான இந்த இரசாயனம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு டைம்ஸ் நாளிதழில் தொடர்ச்சியாக கட்டுரைகள் வெளியானது. இதை எந்த சுத்திகரிப்பு முறையாலும் பிரிக்க முடியாது என்றும் கூறுகிறார்கள்.

புவி வெப்பமயமாதல் !

இதில் இருந்து வெளியேறும் மீத்தேன் புவி வெப்பத்திற்கு காரணம் என்று சொல்லப்படும் CO2 ஐ விட 21 மடங்கு அதிகமாக புவி வெப்பமையமாதலுக்கு காரணமாக அமையும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் எண்ணெய் கிணறுகளில் இருந்து சில வாயுக்கள் பெருங்குழாய்கள் மூலம் இரவும் பகலும் தொடர்ந்து எரிக்கப்பட்டே வெளியேற்றப்படும். இதனால் மேகம் கலைந்து மழை மறையும், மண்ணில் உயிர் மறையும்.

கடல் பகுதியில் பாதிப்பு !

இத்திட்டம் கடலுக்குள் 4047 sq km பரப்பளவில் செயல்படுத்த உள்ளார்கள். நிலப்பகுதியில் என்ன பாதிப்பு நிகழ்ந்ததோ அதை விட பல மடங்கு அதிக பாதிப்புகள் கடலுக்குள் நிகழும். மீன் வளம் அழியும், மீனவர்கள் அழிவார்கள்.பிச்சாவரம் அலையாத்திக்காடுகள் அழியும், இக்காடு அருகில் 0.49 km தொலைவிலேயே ஒரு Hydrocarbon கிணறு அமைய உள்ளது.

Hydrocarbon திட்டத்தால் வெளிநாடுகளில் என்ன பாதிப்பு நிகழ்ந்துள்ளது !

வெளிநாடுகளில் நிகழ்ந்த ஆபத்துக்கள் !
----------------------------------------------------------------------


அமெரிக்காவின் Oklahoma, California, Pennsylvania போன்ற இடங்களில் வழக்கத்தை விட அதிக நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

பின் ஆராயும் போது, நிலநடுக்கத்திற்கு Hydraulic Fracturing முறை தான் காரணம் என கண்டறியப்பட்டது.

ஆதாரம்

https://www.google.com/amp/s/amp.businessinsider.com/earthquakes-fracking-oklahoma-research-2018-2

https://www.sciencedaily.com/releases/2019/04/190426110601.htm

ரஷ்யாவில் Turkmenistan என்ற பாலைவனத்தில் உலக புகழ் பெற்ற ஆராய்ச்சியாளர்கள் 1971 ல் Hydrocarbon உள்ளதாக கண்டுபிடித்தார்கள், அதை எடுக்கும் முயற்சியில் இயந்திரத்துடன் பூமி உள் இறங்கி 70 மீட்டர் அகலத்தில் 230 அடி ஆழத்தில் பள்ளம் உருவாகி விட்டது. அதில் அதிகம் வாயுங்கள் வெளியேறத்தொடங்கியது. முழிப்பிதுங்கிப்போன விஞ்ஞானிகள் அதற்கு தீ வைத்து விட்டால் ஒரு நாள், இரண்டு நாள்,  ஒரு வாரம் என எரிந்து தீர்ந்துவிடும் என்று தீ வைத்தார்கள். ஒரு வாரம் கடந்தது, ஒரு மாதம் கடந்தது, ஒரு வருடம் கடந்தது, இந்த நொடி வரை கடந்த 48 ஆண்டுகளாக அந்த பள்ளத்தாக்கு தொடர்ந்து எரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு நரகத்தின் வாசல் என்று அம்மக்கள் பெயர் வைத்து விட்டார்கள்.


ஆதாரம்

https://www.smithsonianmag.com/travel/giant-hole-ground-has-been-fire-more-40-years-180951247/

Kuwait ல் ஒரு பாலைவனத்தில் நிலத்தடி நீரை உறுஞ்சி Hydrocarbon எடுக்கும் போது. நிலத்தடி நீர் காலி ஆகி கடல் நீர் உட்புகுந்து கச்சா எண்ணெய் எடுப்பது நின்று போக, அதிக அழுத்தம் கொடுக்கும் போது வேறு துளை வழியாக கடல் நீர் வெளியேறிவிட்டது. சில நாட்களில் நீர் வற்றிப்போய் அப்பகுதியே உப்புக்கள் சூழ்ந்த உப்பளம் போல் மாறிவிட்டுது. (விளையும் நம் நிலத்தில் உப்பு வந்தால் எண்வாகுமென சிந்தியுங்கள்)

ஆதாரம்

https://youtu.be/i3Y9UfLCrxQ





தீர்வு - இலவச மாற்று எரிசக்தி !
------------------------------------------------------



METHANE எரிவாயுக்களை இது போல் பூமியை பிளந்து உயிர் ஆதாரமாய் திகழக்கூடிய நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களையும் கெடுத்து, மக்களின் வாழ்வாதாரமான விவசாயத்தை கெடுத்து, பல்லுயிர்களை அழித்தால் தான் கிடைக்குமா ? என்று கேட்டால் நிச்சயம் கிடையாது.

30 ஆண்டுகளுக்கு முன் அனைவரது தோட்டங்களிலும் மாட்டுச்சாணங்களை கிணறு போல் உள்ள கலன்களில் போடுவார்கள் அது தான் Gobar gas plant. அதில் இருந்து நமக்கு கிடைத்த எரிவாயுவிற்கு பெயர் என்னனு தெரியுங்களா ?



அது தான் METHANE ! எந்த உயிர்களுக்கும் துன்பம் நேராமல் மீத்தேன் தயாரித்தோம். அதுவும் நமக்கு இலவசமாக கிடைத்தது. இதற்குப்பெயர் தான் இயற்கை எரிவாயுவே தவிர பூமியை பிளந்தெடுப்பது இயற்கை எரிவாயு அல்ல அது விச வாயுக்கள்.

இப்படியே விட்டால் இவனுகளுக்கு நாம Gas விற்க முடியாது என்று நன்கு உணர்ந்த உலக வல்லாதிக்கம் என்ன செய்தது என்று தெரியுங்களா ?

பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் என்ற வாழ்வியல் நெறியை கடைப்பிடித்து.

அழகாய் மாடுகளை வைத்து விவசாயம் செய்து தற்சார்பாய் வாழ்ந்து வந்த இந்நாட்டின் முதுகு எலும்பு விவசாயம் தான் என்றும் மாடுகள் தான் விவசாயத்திற்கு முதுகு எலும்பாக திகழ்கிறது என்பதையும் நன்கு உணர்ந்த உலகவல்லாதிக்கம், இவர்கள் என்றும் நம்மை சார்ந்தே இருக்க வேண்டும் என்று நமது முதுகு எலும்பை முறிக்க சதித்திட்டம் தீட்டினார்கள்.

நம் வீட்டு தெய்வங்களான மாடுகளை அழிக்க பசுவதைக்கூடம் கொண்டு வந்து நாள் ஒன்றிற்கு 30,000 பசுக்கள் வீதம் கொன்று குவிக்கப்பட்டது. 1910 ஆம் ஆண்டு நம் நாட்டில் 350 பசுவதைக்கூடங்கள் இயங்கி இரவும் பகலுமாக பசுக்களின் எண்ணிக்கையை குறைத்து இன்று விவசாயிகளிடம் ஒரு மாடு இருப்பதை பார்ப்பதே அரிதாகிவிட்டது.

சரி Methane எரிவாயுவை இலவசமாக வாழ்நாள் முழுவதும் உங்கள் வீடுகளில் இலவசமாக தயாரிக்க முடியும் ! எப்படி ? அதற்குப்பெயர் தான் Bio gas plant (இயற்கை எரிவாயு கலன்) உங்கள் வீடுகளில் வீணாகும் மக்கும் காய்கனி பழக்கழிவுகளை இந்த bio gas கலன்களில் போட்டால், அதில் உள்ள நுண்ணுயிர்கள் அக்கழிவை உண்டு உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் இயற்கை எரிவாயுவை தரும். நாமும் அரசும் இதற்கு மாறியே ஆக வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. இல்லாவிட்டால் நம் சந்ததிகளை சமாதியில் தான் தேட வேண்டும்.

இந்த ஒரு செல் நுண்ணுயிர் செய்யும் வேலையை நீங்களே பாருங்கள்

1 : இருந்த இடம் தெரியாமல் குப்பையை அழிக்கிறது

2 : இயற்கை எரிவாயுவை கொடுக்கிறது

3 : கழிவு நீர் சிறந்த உரங்களாக மாறுகிறது

இந்த நுண்ணுயிர் நமக்கு எங்கு இருந்து கிடைக்கிறது என்று தெரியுங்களா ? மாட்டின் சாணத்தில் இருந்து. இத்தனை வேலை செய்வதற்கும் இந்த நுண்ணுயிர்கள் உங்களிடம் பணம் கேட்காது. இவர்கள் எல்லாம் இயற்கை அன்னை நமக்கு வழங்கிய கொடைகள். இயற்கை அன்னை நமக்கு அனைத்தும் இலவசமாக கொடுக்க தயாராய் இருக்கிறாள். மனிதன் நான் நரகத்தில் தான் வீழ்வேன் என்று இப்பொழுது Hydrocarbon என்னும் நரகத்தின் விளிம்பில் வந்து நிற்கிறான்.

இந்த ஒற்றை செல் நுண்ணுயிருக்கு இருக்கும் அறிவு கூட மனிதனுக்கு இல்லை !



மேலும் Solar Panel மற்றும் காற்றாலை களை கொண்டு மின்சாரத்தை நம் வீடுகளிலேயே தயாரிக்க முடியும்.

தண்ணீரில் வண்டி ஓடினால் எப்படி இருக்கும் !

இதுவரை நம் கற்பனையில் மட்டுமே இருந்ததை கோயம்புத்தூரில் திரு.சௌந்திரராஜன் குமாரசாமி என்பவர் நிஜமாக்கி உள்ளார். என்ன அது ?

ஆம் உலகமே வியக்க, தண்ணீரில் இயங்கும் இஞ்சினை கண்டுபிடித்துள்ளார். இக்கண்டுபிடிப்பை இந்நாடு கண்டுகொள்ளாத நிலையில் தற்போது ஜப்பான் நாடு இவருக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது.

இது போல் இயற்கைக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாமலும், இலவசமாகவும் நம்மால் இயற்கை எரிவாயுவை தயாரிக்க முடியும் என்ற நிலையில் எதற்கு அனைத்து உயிர்களையும் அழிக்கும் Hydrocarbon ?

பின் பசுமை புரட்சி என்ற பெயரில் Urea போன்று இரசாயனங்களை கொண்டு வந்து மானியம் என்ற பெயரில் நம் மீது திணித்தார்கள்.

கடந்த சில நூறு ஆண்டுகளாக நடைபெறும் அனைத்து விடையங்களுக்கும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையது என்பதை நீங்கள் சிந்தித்தால் தெரிய வரும்.

முடிவுரை !

உலகிலேயே அதிக உணவு உற்பத்தி செய்யும் இடங்களில் ஒன்றான காவிரி படுகை எத்தகையது என்று உங்களுக்கு தெரியுமா ?



உலகமே வியக்கும் அளவிற்கு நீர் மேலாண்மை அமைப்பையும் மண் வளத்தையும் கொண்டது நம் காவிரி படுகை. ஆறு உற்பத்தியாகும் இடத்தின் அருகில் இருக்கும் வயல் முதல் கடல் ஆற்று நீர் கலக்கும் இடத்தில் உள்ள வயல் வரை அனைத்தும் சங்கிலிக் கால்வாய்களால் இணைக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் நீர் வரும் போது தனது இரண்டு பக்கமும் உள்ள வயல்களை இரு கரம் விரித்து தாய் ஓடி வந்து தன் குழந்தையை அணைப்பது போல், நீர் கால்வாய்களில் பாய்ந்து இரண்டு பக்கமும் வயல்களை நிரப்பிக்கொண்டே வரும். வயலில் குறிப்பிட்ட அளவு நீர் வந்தவுடன் அந்நீர் அடுத்த வயல்களுக்கு பாயத்தொடங்கும். அந்த வயல் நிறைந்தவுடன் நீர் அடுத்த வயலுக்கு பாயும். இது போல் ஆற்றின் இரண்டு படுகையிலும் ஒர் வயல் நிரம்ப அடுத்த வயல் நிரம்ப என கடல் வரை உள்ள அனைத்து வயல்களுக்கும் நீர் பாயும். கடலுக்கு அருகில் இருக்கும் இடங்களை தான் கடைமடை என்கிறோம்.

மிகச்சிறந்த இந்த கட்டமைப்பு அனைத்தும் இன்றோ நேற்றோ நடந்துவிடவில்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் பாட்டடன் பூட்டன் தன் உதிரத்தை வேர்வையாய் இம்மண்ணில் சிந்தி இரவும் பகலும் அயராது உழைத்து உழைத்து செதுக்கிய சிற்பம் தான் நாம் இப்பொழுது அழகாய் காணும் காவிரி படுகை.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர் தொடர்ந்து வேளாண்மை செய்ததால் இம்மண்ணின் வளமோ இன்று வரை அளப்பரிய பேராற்றல் உடையதாக திகழ்கிறது. வெளிநாடு வாழ் நபர் ஒருவர் நம் நாட்டிற்கு வந்து தக்காளி செடி சூரிய ஒளியில் வெட்ட வெளியில் விளைவதை கண்டு ஆச்சர்யப்பட்டு, ஒரு தக்காளியை பறித்து உண்டபடியே இங்கு உள்ளவரிடம் சொன்னாராம்.

எங்கள் நாடுகளில் கூண்டிற்குள் தான் விவசாயம் செய்கிறோம். பெரிய கூண்டுகளை அமைத்து அங்கு செயற்கையான மண், நீர், வெப்பம், ஈரப்பதம், உரம் என அனைத்தும் அமைத்து போராடி தான் உணவை விளைவிக்கிறோம்.

ஆனால் இங்கு உணவுப் பொருள் மீது நேரடியாக சூரிய ஒளி பட்டு விளையும் அற்புத பூமியில் வாழ்கிறீர்கள்! நீங்கள் அனைவரும் இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்ட மக்கள் என்று வியந்து சொன்னாராம்.

இன்னும் பல அரிய தொழில்நுட்பத்தை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்துள்ளார்கள். இங்கு விளையாத பொருள் ஏதும் உண்டோ ! மண்ணும் விளையும் பொண்ணும் விளையும் சக்தி வாய்ந்த மண் இது.

ஆம் எந்த இரசாயன உதவியின்றி சத்தான மாட்டுச்சாணத்தையும், சிறந்த பூச்சி விரட்டியான கோமியத்தையும் பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு 54 quental அளவிற்கு சத்தான அரிசி விளைவித்தான் தமிழன். இக்காட்சிகளை பழந்தமிழ் இலங்கியங்கள் நான்கு வரிகளில் அழகாக பதிவு செய்துள்ளது. இதோ

மாடு கட்டி போரடித்தால்
மாளாது செந்நெல் என்று
யானை கட்டி போரடிக்கும்
அழகான தென் மதுரை


இப்படி வழி வழியாக லட்சம் பேர் உழைத்து பாடுபட்டு உருவாக்கி, யானை கட்டி போரடிக்கும் அளவிற்கு அதிக நெல் விளைந்த இதே புண்ணிய பூமியைதான் இன்று வளர்ச்சி என்ற ஐந்து வார்த்தைக்கு நமது அரசு பலி கொடுக்கப்போகிறது. இவர்கள் குறிப்பிடும் அந்த வளர்ச்சி, வளர்ச்சி என்ற வார்த்தைக்கு தெரிந்தால் தன்னைத்தானே சிதைத்துக்கொள்ளும்.

நீரையும் நிலத்தையும் இணைப்போர் உயிரையும் உடலையும் இணைக்கும் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று பதிவு செய்கிறது ஒரு புறநானுற்றுப்பாடல்

நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே
- புறநானூறு

இப்புலவர் இப்பொழுது இருந்திருந்தால் என்ன எழுதியிருப்பார் என்ற சிந்தனையோடு இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

கட்டுரை எண் : 55

வெளியிட்ட தேதி : 02.06.2019

நன்றி

இரா.மதிவாணன்

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Comments

Post a Comment

Popular posts from this blog

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

கட்டுரை 8 (05.04.2016)