112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

112 நண்பர்களின் உண்ணாநோன்பு அனுபவத்தொகுப்பு 2018 😌🌹
----------------------------------------------------------------------



*நண்பர் 1* - நான் ஆரம்பிக்கும் போது நம்பிக்கை சற்று குறைவாகவே இருந்தது, மேலும் இருதினத்தில் காய்ச்சல் வேறு ஏற்ப்பட்டது, இருப்பினும் விடா முயற்சியுடன் க்டைபிடித்தேன். 6 தினங்களும் பழங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டேன் ஆதலால் பெரிய ஒரு பசியை உணரவில்லை அனால் 6ம் நாள் மிக கடுமையான பசி ஏற்ப்பட்டது அதற்கு வாழைத்தண்டு சுப் எடுத்தேன்.
எனது உடல் எடை 71 ல் இருந்து 67 ஆக குறைந்தது.
இப்பொது வழக்கத்தை விட சற்று குறைவாக சாப்பிடுகிறென்.
மொத்தத்தில் அதிக உடல் உழைப்பு இல்லாத என் போன்ற உள் அலுவலக வேலை பார்ப்பவர்க்கு, இந்த பட்டினி பயிற்சி அவசியமான ஒன்று.
உங்கள் ஆலோசனைக்கு நன்றி.

*நண்பர் 2* - எனது அனுபவப் பகிர்வு
உடலிலும் மனதிலும் பல மாற்றங்கள்.. 2.5 கிலோ எடை குறைவு, முகத்தில் பொலிவு, உடல் லேசான உணர்வு, ஆழ்ந்த தூக்கம், விரதம் இருக்கும் முன்பு இருந்த சில தொந்தரவுகள் குறைந்தன, காலையில் சோர்வற்ற விழிப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு எதிர்மறை சிந்தனை கூட வரவில்லை... குடும்பத்திலுள்ள நபர்களுக்கும் சில பரிதல்களை ஏற்படுத்தியது... அனைவரையும் ஒன்று திரட்டி தொடந்து வழிகாட்டி,ஊக்கம் அளித்த மதிக்கும் & உடன் இருந்த மற்ற 662 பேருக்கும் எனது உளமாற நன்றிகள்... தொடர்ந்து இனி வரும் வருடங்களிலும் இருக்க ஊக்கம் கிடைத்தது🙏
- பாரதி

*நண்பர் 3* - விரதத்தினால் உடல் லேசாக உணர்ந்தேன். ஒரு வாரம் இருக்க முடியுமா என்று யோசித்தேன் ஆனால் இருக்க முடிந்தது. இறுதி நாட்களில் அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறியது. உடல் லேசாக இருப்பது போல உணர்கிறேன்.மனமார்ந்த நன்றி சகோ.

*நண்பர் 4* - ஆறு நாள் உண்ணாநோன்பு எனக்கு இருந்ந போது குடல் புண் குறைந்து போல ஆசிட்டி நெஞ்சு எரிச்சல் வயிறு பொருமல் போன்ற பிரச்சினை இல்லை என்றே சொல்ல வேண்டும்
உண்ணாநோன்பு முடிந்த பின் சராசரி வாழ்க்கை முறை வரும் போது பழைய பிரச்சனைகள் வருவது போல உள்ளது

*நண்பர் 5* - Enakku rompa santhosama irunthathu muthal nal kastama irunthathu apuram palakiruchu unmayana pass tharinsathu ippa enoda utampu lesa irukku enoda vairu koranjirukku . Ippa pasi athigama illa pasicha sapitanunu thonuthu mathi thampiku enoda nantri

*நண்பர் 6* - முருகன் அருளால் எங்கள் இரண்டாம் ஆண்டு விரதம் இனிதே முடிந்தது. முதல் நாள் சற்று தலைபாரமாக இருந்தது அதன் பிறகு உற்சாகமாக இருந்தது. இன்று சற்று கண் அரிப்பு இருக்கிறது.  வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!!! எங்கள் மூவருக்கும் எடை குறைந்துள்ளது. உடலும் மனமும் உற்சாகமாக உள்ளது.

*நண்பர் 7* - இந்த வருடமும் கந்தன் கருணையால்
விரதம் இனிதே
முடிந்தது.முதல்
இரண்டு நாட்கள் தலைவலிகண்எரிச்சல் இருந்தது.மஞ்சள்பூசணிசாறு எடுத்துக் கொண்டேன்.
பழங்கள் மட்டும் சாப்பிட்டேன்.
தினமும் கோயில்சென்று
கந்த சஷ்டி கவசம் கந்தகுரு
கவசம் படிப்பது முருகன் பாடல்கள் பாடுவது என
இனிதே நிறைவுற்றது வேலும் மயிலும் துணை.

*நண்பர் 8* - திவ்யா, முருகானந்தம்
நாங்கள் இருவரும் 10 வருடங்களாக இந்த விரதத்தைக் கடைப்பிடித்து வருகிறோம். ஆழ்ந்த மன நிம்மதியைக் கொடுக்கின்றது.. 6 நாட்களும் 3 முறை சஷ்டி கவசமும் அநுபூதியும் வேல் வகுப்பு, மயில் விருத்தம் படத்ததில் 7 நாட்கள் ஓடியதே தெரியவில்லை. இந்த விரதத்தை ஆன்மீகம் மற்றும் அறிவியல் ரீதியிலும் கடைப்பிடிப்பதால், மனதிற்கு நிம்மதியிம் அமைதியும், உடலுக்கு உற்சாகமும் கிடைக்கின்றது.

*நண்பர் 9* - இனிய காலை வணக்கம் மதி, சஷ்டி விரதம் மிகவும் அருமையாக இருந்தது. 3 kg எடை குறைந்தேன், எதிர்மறை எண்ணங்கள் நீங்கியது. மனோதைரியம் அதிகரித்தது. நன்றி மதி, உங்களின் ஊக்கம் நற்பலன்களை பெற வைத்தது.

*நண்பர் 10* - மதி ஐயா வுக்கு நன்றி.ஆச்சரியம் அதிசயம் 4 Kg body weight reduced. Thanks a lot once agian sir.

*நண்பர் 11* - எடை கொஞ்சம் குறைந்தது. பெரிசா சாப்படணும்னு ஆசைப்படல. லேசா தலைவலி.. காய்ச்சல் சளி இல்லை... காலை கடன்கள் நார்மல்.. 6நாட்கள் சாப்பிடாமல் இருக்க முடியும்னு ஒரு சந்தோசம்.... இனிமேல் தினமும் 2வேளை உணவிற்கு பதில் பழங்களை எடுக்கலாமா என்ற எண்ணம்..

*நண்பர் 12* - மதி ஐயாவுக்கு நன்றி வெற்றிகரமாக இரண்டாவது சஷ்டி முடித்து விட்டேன் சென்ற வருடம் நான் மட்டும் இந்த வருடம் நான் எனது மனைவி மகன் மற்றும் நண்பர்கள் 8 பேர் ஆறு நாட்களும் அடுத்த வருடம் வரை மறக்கவே முடியாத அனுபவங்கள். சென்ற ஆண்டு அனுபவம் இருந்ததால் பசியை சமாளிப்பது எளிதாகவே இருந்தது ஆனால் கழிவுகள் வெளியேறிய விதம் அருமையான உணர்வு 3 ம் நாள் அதிகாலை சரியான சூடு பிடித்தது இது என் வாழ்வில் முதல் அனுபவம் 4ம் நாள் இரவு உடல் முழுவதும் அரிப்பு பயம் இல்லாமல் நோயிலிருந்து உடல் மேன்மை அடைவதை கண்ணாரக் கண்டேன். மேலும் ஆறுநாட்களும் பொள்ளாச்சியில் விழாதான் மதி சார் அனுப்பும் தகவல்களை அனைவருக்கும் அனுப்புவதும் அதை பின்பற்றினார்களா என்று கால் பண்ணி கேட்பதும் மாலை நண்பர்கள் அனைவரும் கோவிலுக்குச் செல்வதும் அப்பா சஷ்டியை ஒரு சிறப்பான பண்டிகையாய் கொண்டாடினோம் எனது தோழி ஹீலர் தமிழரசி அவர்களும் அவர் கணவருடன் சேர்த்து 15 பேர் சஷ்டி இருக்க வைத்து விட்டார் எங்கள் இருகுழுக்கலும் சேர்ந்து தண்டுவிரதம் சுப்பிரமணியர் கோவிலில் விட்டோம் எவ்வளவு சிறப்பு அனைத்துக்கும் மதிசாரின் நலம் குழுவே காரணம் நன்றி சார் அடுத்த வருடம் இன்னும் சிறப்பாக விழா எடுப்போம் மதிசார் பசியிலும் உங்களை கண்காணித்து கொண்டுதான் இருந்தோம்.  மதுரை பழனினனு வீட்டுலயே நீங்க இல்ல அடுத்த வருடம் நாங்கள் இன்னும் அதிகமாக ஓரீடத்தில் ஒன்றுகூடி விரதம் இருப்போம் நீங்கள் பொள்ளாச்சியில் ஒருநாள் எங்களுடன் இருக்க வேண்டும்

*நண்பர் 13* - ஐயா.  🙏🙏🙏
நான் விரதத்திர்க்கு முன்பு   83 kg  இருந்தேன்.   தற்பொழுது   79 kg. மிக்க நன்றி. முதல் இரணடு நாள்  ரொம்ப கடினமாக இருந்தது.  அதற்கு பிறகு  ஒன்றும் தெரிய வில்லை.   உடலும் மனதும்  தூய்மையா இருக்கிறது.  நனறி ஐயா

*நண்பர் 14* - ஆறுநாள் இருக்க முடியுமா? என்ற கேள்வியுடன்தான் விரதம் ஆரம்பித்தேன் முதல் நாள் ப்ரம்ம முகுர்த்த நேரத்தில் எழுந்து குளித்து என் வழக்கமான சூரிய நமஸ்காரம்,  யோகாஉடன் ஆரம்பம் ஆனது. அடுத்த இரண்டு நாட்கள் சோர்வாக இருந்தது. அனாலும் ஏதோ ஒரு சக்தி உந்துதல் கொடுத்து சுறுசுறுப்பு உண்டாக்கியது. ம3வது நாள் காலை சூரிய நமஸ்காரம் செய்யும் போது உடம்பு காற்று போல் லேசாக இருந்தது. 3சுற்று அதிகமாக செய்ய முடிய்ந்தது. அடுத்த 2நாட்கள் லேசான தலை வலி இருந்தது. 6ம்  நாள் மொத்த உடலும் சுத்தமாக, லேசாக உணர்ந்தேன். வாரம் ஒரு முழு நாள் பழங்கள் எடுத்து கொள்ள முடிவு செய்துள்ளேன். நன்றி. 🙏🌷

*நண்பர் 15* - This is my second fasting really amazing on my life. thanking mr.mathi thanks a lot.

*நண்பர் 16* - மதி Sir, உங்கள் அனைத்து தகவல் மற்றும் அறிவுரைகளுக்கும் எங்கள் மிக்க நன்றி Sir,,🙏🙏💐💐👍👍🤝🤝🎷🎺🎸🎻,,,,,,,

*நண்பர் 17* - வணக்கம் நலம் நட்பு குழுவினர் அனைவருக்கும் இது எனக்கு நான்காம் ஆண்டு நோன்பு                   1- மனம் அமைதி நிலவியது.               2-எடை குறைந்து 78-200 ல் இருந்து73-300        3-சுறுசுறுப்பாக இருந்தது.               4-முகம் பொலிவு பெற்றது.                 5-உடல் சூடு குறைந்து                6-எனது அனைத்து அன்றாட பணி களிலும் எந்த தொய்வும் இல்லை7 -நேற்று முழுவதும் தண்ணீர் இளநீர் மட்டுமே  மனம் அமைதி நிலவியது எந்த குழப்பங்கள் எதுவும் வரவில்லை உணவு பொருட்களை பற்றிய எண்ணம் எழவில்லை கோபம் குறைந்து மனதில் ஓர் உற்சாகம்.   நன்றி மதிவாணன்🙏🙏🙏                         ஜெ.விஜயகுமார் உடுமலை

*நண்பர் 18* - நோன்பு நேற்றுடன் நிறைவு. உடலுக்கும்
மனதுக்கும் அடுத்த ஷஸ்டி வறை போதுமான பலம் பெற்றுக்கொண்டேன். நன்றி மதி சார்.

*நண்பர் 19* - வெற்றிகரமாக எனது முதழ் உண்ணா நோன்பை முடித்து விட்டேன். பசியின் போது உடலை கட்டுப்படுத்துவதைவிட மனதை கட்டுப்படுத்துவதே சிறமமாக உணர்ந்தேன். மதி அவர்கள் ஆலோசனைகளும் முருகன் அருளும் மற்றும் குழுவாக நோன்பு இருந்ததினால் எளிமையாக இருந்தது. நோன்பிம் மகிமயை உணர்ந்ததாள் இனி மாதம் ஒருமுறை உண்ணா நோன்பும் மற்றும்  வாட்டர் பாஸ்டிங் இருக்கலாம் என முடிவு எடுத்துள்ளேன்.
நம் இயற்கையோடு இணைந்த நாட்டு மருத்துவங்களை திட்டம்  போட்டு கார்ப்ரேட் கம்பெனிகள் அழித்தாலும் மதி அவர்கள் போல தன்னார்வலர்கள் எடுத்துள்ள தற்சார்பு நிகழ்ச்சிகள் மூலமாக நம் பாரம்பரியத்தையும் இழந்த நம் கலாச்சாரத்தயும் திட்டம் போட்டு அழித்த நம் ஆரோக்கியத்தையும் தற்சார்பு மூலமாக மீட்டெடுப்போம் என அனைவரையும் கேட்டு எனது நன்றிகளை அனைவருக்கும் தெறிவிக்கென்றேன் .

*நண்பர் 20* - மிக மிக அருமை.......வாயில் உமிழ்நீர் சுரந்து பருக பருக என் ஒரு ஆனந்தம் 
ஐயா மனமார்ந்த நன்றிகள் பல கோடி ......நானும்....என்னை சார்ந்தவர்களும் கடந்த மூன்று ஆண்டுகளாக பயனிக்கிறோம்......வருடத்திற்கு வருடம் மிக பிரமாண்டமாகவே உணருகிறேம்.....நன்றி நன்றி. ஆறு நாட்கள் எங்களை வழி நடத்திய ஹீலர் மதிவாணன் அவர்களுக்கு மிக்க நன்றி

*நண்பர் 21* - நாணும் என் கணவரும்  ஆறு நாட்கள் விரதம் இருந்தோம்..மிகவும் அருமை..விரத நாட்களில் எங்களின் சந்தேகத்தை சரி செய்து வழிநடத்திய மதி அய்யாவக்கு நன்றிகள் பல.

*நண்பர் 22* - வணக்கம் தோழர் மதிவாணன் அவர்களே
இந்த விரதம் கடைபிடித்த ஆறு நாட்களும் எப்படி பசி இல்லாமல் போனது என்று ஆச்சரியமாக உள்ளது கடைசி இரண்டு நாட்கள் மட்டும் சிறுநீர் மஞ்சள் மிகுதியாக அடத்தியாக போனது மற்றபடி உடலில் எந்த ஒரு உபாதை இல்லை
மிக்க நன்றி இந்த விரதத்தை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எடுத்துக்கொள்ளலாமா
தயை கூர்ந்து கூறுங்கள் தோழரே நன்றி

*நண்பர் 23* - I am Lakshmipathi from Coimbatore. Because of this 6 days fasting.. Body lite ana feel..also weight 4 kg reduced.. Also Manasu clear ... Physical and Mental health both got improved i feel.. Thank you so much for your organizing , encouraging  and Guidance to do properly .. proud of you Mathi....

*நண்பர் 24* - வணக்கம் தோழர் மதிவாணன் அவர்களே
இந்த விரதம் கடைபிடித்த ஆறு நாட்களும் எப்படி பசி இல்லாமல் போனது என்று ஆச்சரியமாக உள்ளது கடைசி இரண்டு நாட்கள் மட்டும் சிறுநீர் மஞ்சள் மிகுதியாக அடத்தியாக போனது மற்றபடி உடலில் எந்த ஒரு உபாதை இல்லை
மிக்க நன்றி இந்த விரதத்தை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எடுத்துக்கொள்ளலாமா
தயை கூர்ந்து கூறுங்கள் தோழரே நன்றி.

*நண்பர் 25* - வணக்கம் மதி அய்யாவக்கு.. கடந்த இரண்டு ஆண்டுகள் மட்டுமே நான் சஷ்டி விரதம் இருந்து வருகிறேன்.கடந்த ஆண்டு 6 நாள் விரதம் ரொம்ப கடினமாக இருந்தது..முதல் முறையாக இருந்ததால், ஆனால் இவ்வருடம் அப்படி இல்லை..பசியெடுத்தால் தண்ணீர் மற்றும் பழங்கள், இளநீர் அருந்தினேன்.உடல் இப்போது மிகுந்த புத்துணர்வுடன் இருப்பதை உணர்கிறேன்..அருமை..🙏🙏💐

*நண்பர் 26* - சுவையை உணர்ந்தேன்.....வெந்தயகழி காலை உணவு.....இவ்விரு நாட்களாக உணவை பார்த்தவுடன் உமிழ்நீர் சுரப்பு அதிகம்.....உடலும் மனமும் ஆரேக்கியமாகயுள்ளதாகவே உணருகிறேன்.

*நண்பர் 27* - விரதம் நல்ல முறை யில்.முடிந்தது.all credits.go to mathi.உன்மையில்.இடையில். விலகிவிடுவோம் என.நினைத்தேன் ஆனால் *நலம்* குழு.தகவல்கள் முலம்     விரதம்.முடிவு.பெரும் வரை கைபிடித்து அழைத்து சென்றது போல இருந்தது மிக.அருமை

*நண்பர் 28* - I. Prema Hi Mathi, really super experience for me, I never think I can do this viradham,but I did this because you gave me confident.Thank you. Once again thank you.for next sashti enter my name now itself. I am going to start fasting twice in a month it's promise.

*நண்பர் 29* - MATHI
   Really thanks for keeping in pasting thru this group,
Really had a good experience
First time in life I m doing this !!
Thanks a lot
Wish you a great success in life 👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻

*நண்பர் 30* - விரதம் நல்ல முறை யில்.முடிந்தது.all credits.go to mathi.உன்மையில்.இடையில். விலகிவிடுவோம் என.நினைத்தேன் ஆனால் *நலம்* குழு.தகவல்கள் முலம்     விரதம்.முடிவு.பெரும் வரை கைபிடித்து அழைத்து சென்றது போல இருந்தது மிக.அருமை. என் வயிறு கொட்ட ம் பெட்டி மாதிரி வீங்கி இருந்தது மதி கூறிய பட  சீரக தண்ணீர் குடித்து  சரியாகிவிட்டது நன்றி மதி

*நண்பர் 31* - ஆரம்பிப்பதற்கு முன்
மலைப்பாக இருந்தது
பின் எளிதானது
மனவலிமை கூடியது
என்வயது 46
உடல்எடை 73 கிலோ
உயரம் 5.10
தற்போது 4 கிலோ எடை
குறைந்து 69 கிலோ
கடந்த 10 ஆண்டுகளாக
இயற்கை விவசாயம்
செய்கிறேன்
கடந்த 15 ஆண்டுகளாக
அலோபதியை தேடவில்லை
6 நாள் நோன்பு
புதிது
காய்ச்சல் வந்த போது
2 நாள் உண்ணாமல்
இருந்ததுண்டு
எனக்கு புகைபிடிக்கும்
பழக்கம் உண்டு
இன்று புகைபிடிக்காமல்
7 வது நாள்
இதோடு விட்டுவிட முடிவு
ஒருங்கினைத்து வழிநடத்தும்
ஹீலர் மதி அய்யாவிற்கு
நன்றி
விரைவில் ஹீலரை
நேரில் சந்திக்க ஆர்வம்.

*நண்பர் 32* - Since I have been doing this fasting from last 2 months it is easy for me to do this fasting . But noticed when i get up in the morning i feel so fresh and active .  And my face blackness got cleared and looks better .
Not only that the unwanted fat also gone  and not feel like eating junk foods.  Also wanted to check with Mathi how often can we do this fasting?

*நண்பர் 33* - இந்த 6 நாள் விரதத்தில் அதிக பசி உடல்வலி சோர்வு இருந்தாலும் வேலை இரவு தூக்கம் முக்கியமாக மனக் கட்டுப்பாடு அனைத்தும் மிகச்சரியாக நடந்தது.
நோன்பு வெற்றியுடன்
நிறைவு பெற்றது.
                          நன்றி,
                மதி அவர்களே .

*நண்பர் 34* - உண்ணா நோன்பு சிறப்பாக முடிந்தது. ஒரு வாழை பழம் அல்லது ஒரு கொய்யா, நீர் இவை மட்டும் கடந்த ஆறு நாட்கள் உண்டு விரதம் சிறப்புற நிறைவு பெற்றது. திருவாளர் மதியின் ஊக்கம் இன்னும் உடல் மற்றும் மனதை வலிமை படுத்தியது. மிக்க நன்றி மதி அய்யா. இவ்விரத நாட்களில் உடல் சோர்வை தவிர வேறு எந்த உபாதைகள் எனக்கு வரவில்லை. உடல் எடை 4.5 கிலோ குறைந்தது. மனதை ஒருநிலை படுத்த கற்றுக்கொண்டேன். மற்ற நாட்களில் உணவு இச்சை அதிகம் இருக்கும், தற்பொழுது கண் முன் உணவு இருந்தால் கூட சிறிது அவா கூட ஏழவில்லை. உணவு அளவு 4 இல் 1 பகுதியாக குறைந்து விட்டது. உடல் மற்றும் மனது ஒரு புத்துணர்ச்சி பெற்றது பொல் இருக்கிறது. மீண்டும் நன்றி மதி அய்யா. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.🙏🏻

*நண்பர் 35* - முதலில் உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.🙏🙏🙏
முதல் இரண்டு நாட்கள் கொஞ்சம் கடினமாகத்தான் தோன்றியது. (பசிக்காமல் TIME பார்த்து சாப்பிட்டு பழகியதால் வந்த விளைவு) எடை 1.5 கிலோ குறைந்துள்ளது. சிறுநீர் கடைசி இரண்டு நாட்கள் பழுப்பு நிறமாக போனது. (தற்சமயம் சரியாகிவிட்டது) இப்போது பசி எடுத்தால் மட்டுமே உணவு எடுக்கவேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டேன். எனது மனைவியும் என் கூட நோன்பு கடைபிடித்தது உறுதுணையாக இருந்தது. இருவரும் கடைசி வரையில் நீங்கள் சொல்லிய வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றினோம். மிக்க மகிழ்ச்சி. உடல் லேசாக உள்ளது போல் உள்ளது.
உங்களின் ஆரோக்கிய வழிகாட்டல் தொடர வாழ்த்துகிறோம் .
நன்றி மதிவாணன்.

*நண்பர் 36* - நானூம் முதலில் உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்,
முதல் நாள் முதல் எனக்கு  கடினமாகத்தான் இருந்தது. எடை 3 கிலோவுக்கு  மேல் குறைந்துள்ளது.  உடல் லேசாக உள்ளது போல் உணர்கிறேன். எனக்கு கடந்த 4 மாதங்கள் தலை குனிந்தாள் மயக்கம் வந்து கொண்டு இருந்தது, தற்போது அது குறைந்துள்ளது.
உங்களின் ஆரோக்கிய வழிகாட்டல் தொடர வாழ்த்துகிறோம் .
நன்றி மதி சார்.🙏🙏🙏

*நண்பர் 37* - எங்களுக்காக இப்படி பெருந்தொண்டாற்றிய தங்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்🙏🙏🙏
பாராட்டுகள்👏👏👏
வாழ்த்துகள்💐💐💐

*நண்பர் 38* - சஷ்டி விரதம்
ஆறு நாள் உண்ணாநோன்பு
1)ஒரு அருமை மிக்க ஓர் அனுபவம்
2)மனதை கட்டுப்பாட்டிற்குள் வைக்க ஒரு முயற்சி
3) நமது உடலை நாமே அறிய ஒரு வாய்ப்பு
4) உடல் தான் நமது முதல் நண்பன்
இதைக் கற்றுக் கொடுத்த மதிவாணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏

*நண்பர் 39* - வணக்கம் மதிவாணன் அவர்களே இந்த உண்ணா நோன்பை பற்றி எனக்கு முதலில் எதுவுமே தெரியாதுஅழகாகவும் தெளிவாகவும் நலம் குரூப்பில் சொன்னதற்காகவே நாங்கள் விரதம் இருந்தோம்முதலில் உங்களுக்கு தான் நன்றி எந்த பலனும் இல்லாமல் நீங்கள் எங்களுக்காக இப்படி ஒரு உன்னதமான பணி செய்தீர்கள் அழகாக எடுத்து கூறினீர்கள் ஒவ்வொரு சந்தேகங்களுக்கும் பதில் கூறினீர்கள் எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் கூறியது மிகவும் சந்தோஷம்முதலில் 6 நாள் நான் எப்படி இருப்பது என்று எனக்கு மிகவும் கவலையுடன் இருந்தது ஆனால் முதல் நாள் மட்டும் சிறிது  கஷ்டமாக இருந்தது பிறகு ஏழு நாள் அல்ல நீங்கள் கொடுத்த தைரியத்தில் பத்து நாட்கள் கூட இருக்கலாம் என்று மனசுக்கு தோன்றியது (நம்பிக்கை)
இப்போது எனது  உடல் குறைந்துள்ளது எனக்கு தொப்பை இருந்து  அது இப்பொழுது சுத்தமாகவே தெரியவில்லை உணவை எப்படி விடுவது என்று எனக்குள்ளே கேள்வி இருந்தது இப்பொழுது உணவை பார்த்தாலே கொஞ்சம் பயமாக உள்ளது பசித்தால் மட்டுமே உணவு சாப்பிட தோன்றுகிறது என் மனதில் எனக்குள் ஒரு சந்தோஷம் நமது உடல் ஆரோக்கியம் எனக்கு முக்கியம் என்று தெரிவித்தார்கள் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது எது நடந்தாலும் எனக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையின் தரும்இத்தனை நாளாக எங்களுக்கு எடுத்துச் சொல்ல யாரும் இல்லை என்று கவலைப்பட்டோம் ஆனால் தற்பொழுது மதிவாணன் அவர்கள் இருக்கிறார் என்று சந்தோசம். எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி எந்த ஒரு எதிர்பார்ப்பும்  இல்லாமல் எங்களுக்கு மிகச்சிறந்த கருத்துக்களை கூறிய உங்களுக்கு நன்றி நன்றி நன்றி அன்பே சிவம் ஆர் டி ஜெயப்பிரகாஷ் உடுப்பி கர்நாடக.

*நண்பர் 40* - உடலே மருத்துவர் என்று பேப்பரில் படித்திருக்கிறேன் ஆனால் முதல் முறையாக அனுபவமூலமாக உணர்ந்திருக்கிறேன். சஷ்டி விரதம் என்பது கடவுள் பார்வையில் மனித உடலை சரிசெய்வதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதற்குமான ஒரு நிகழ்வு என்பதை தங்களின் மூலம் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி மதி அவர்களே..

*நண்பர் 41* - விரத நாளில் எனக்கு உள்ளிருந்த சளியானது எவ்வித மாத்திரை, கஷாயமும் இன்றி முழுமையாக வெளியேறியத்தையும் முகம் பொலிவடைந்ததையும் உணரமுடிந்தது.
இந்த வருடம் முழுமையாக விரதத்தில் பங்கேற்க முடியாதை நினைத்து வருந்துகிறேன். அடுத்த வருடம் 6 நாளும் முழுமையாக இருப்பேன்.
ஜெய்சங்கர், கடலூர்.

*நண்பர் 42* - வணக்கம் மதிவாணன் அவர்களே முதலில் உங்களுக்கு தான் நன்றி கூற வேண்டும். எனது உடல் மாற்றங்கள்
1)எனது உடல் 3 கிலோ வரை குறைந்துள்ளது.
2)மனதில் நம்பிக்கை வந்துள்ளது.
உடல் புதிதாய் பிறந்தது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது.
3)எனக்கு தொப்பை இருந்தது, அது இப்பொழுது சுத்தமாகவே இல்லை.
4)பசித்தால் மட்டும் சிறிது உணவு உண்ணவேண்டும் என்று தோன்றுகிறது.
5) உடல் உங்கள் நண்பன் அதை நேசியுங்கள்.
இது எனக்கு மாறுபட்ட அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது. இனிமேல் நீங்கள் என்ன நல்லது கூறினாலும் அதன்படி கடைபிடிப்போம். என்று உறுதியாக கூறுகிறேன். வாழ்க வளமுடன்
ஆர் டி ஜெயபிரகாஷ் உடுப்பி கர்நாடக.
   🙏அன்பே சிவம்🙏

*நண்பர் 43* - எனது அனுபவப் பகிர்வு
உடலிலும் மனதிலும் பல மாற்றங்கள்.. 2.5 கிலோ எடை குறைவு, முகத்தில் பொலிவு, உடல் லேசான உணர்வு, ஆழ்ந்த தூக்கம், விரதம் இருக்கும் முன்பு இருந்த சில தொந்தரவுகள் குறைந்தன, காலையில் சோர்வற்ற விழிப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு எதிர்மறை சிந்தனை கூட வரவில்லை... குடும்பத்திலுள்ள நபர்களுக்கும் சில பரிதல்களை ஏற்படுத்தியது... அனைவரையும் ஒன்று திரட்டி தொடந்து வழிகாட்டி,ஊக்கம் அளித்த மதிக்கும் & உடன் இருந்த மற்ற 662 பேருக்கும் எனது உளமாற நன்றிகள்... தொடர்ந்து இனி வரும் வருடங்களிலும் இருக்க ஊக்கம் கிடைத்தது🙏
- பாரதி.

*நண்பர் 44* - மாலை வணக்கம்
க.கோபாலகிருஷ்ணன் கூடுவாஞ்சேரி .
முதலில் உங்களுக்கு நன்றி.
இந்த வாய்ப்பை ஏற்படுத்தியதற்கும்  &வழிநடத்தியதற்கும் 
1.ஆறு கிலோ உடல் எடை குறைந்துஉள்ளது
2.உடல் லேசாக உணரப்பட்டது
3.வயிறு உப்பிசம் இல்லாமல் இருந்தது
வாழைத்தண்டு  பழக்கலவை அற்புதம்

*நண்பர் 45* - Mathi bro I didn't like to break fasting. Because this six days I feel so many changes in my body mainly in digestive system. Weight as reduced 76kg to 70kg. Feeling so fress daily and more active. So I like to continue for some more days.is it OK r should break fasting bro.

*நண்பர் 46* - வணக்கம். திருமதி.தவமணி, சோமனூர். முதலில் மதி உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களைஉம் தெரிவித்துக் கொள்கிறேன்🙏🏼
இது 3 வது ஆண்டு தண்ணீர் மட்டுமே குடித்து விரதமிருப்பது. இந்த முறை முடியாததால் 4 வது நாளிலிருந்து இளநீர் மட்டும் சேர்த்துக்கொண்டேன். முதுகு வலி இருந்தது இப்போது அதை காணவில்லை. 5 kg எடை குறைந்துள்ளது. உடலும் மனமும் லேசாக தெரிகிறது. புது நம்பிக்கையும் கிடைத்துள்ளது. நன்றி😊🙏🏼

*நண்பர் 47* - ஆறுநாள் இரவில் தாயின் கருவறை தூக்கத்தை உணர்ந்தேன்
சமைத்தஉணவை உட்க்கொண்டு மசாலாபொருட்க்களுக்கு நமது நாவை பழக்கிக்கொண்டுநம்உள்ளுறுப்புகளுக்கு நாம்துரோகம் செய்வதை உணந்தேன்.

*நண்பர் 48* - மதி இந்த விரதத்தை வழி நடத்தியதற்கு மிக்க நன்றி. உடல் மனம் இலக்காக இருக்கின்றன. உடல் எடை 5 கிலோ குறைக்க உதவியாக இருந்தது. நல்ல தூக்கம் வந்தது. உடல் சீராக இருக்க உதவுகிறது.

*நண்பர் 49* - It is very powerful, very nice I feel light weight body.  But now its lost.  Weight reduce 6 kgs I feel better. For me its is not first time but previously drink milk with sugar etc but this time I didn't take milk only fruits. It is super thank u. Pls continue this type of fasting once again thanks a lot 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👏👏👏👏👌👌👌👍👍👍👍👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

*நண்பர் 50* - பரந்த மனச்சேவைக்கு நன்றி.
இரண்டு நாட்கள் பசிதலைவலியால் அவதிப்பட்டேன். அவல் எடுத்தேன். 3-6 நாட்கள் பழம் அரசாணிகாய் நீர்  எடுத்தேன். தலைவலி எப்படி போனது? Urine crystal clear. கண் பார்வை தெளிவு . உடல் பொலிவு நிறம் கூடியுள்ளது. எடை 3 கி குறைவுள்ளது.
புளி அரிசி மிளகாய் வெறுப்பாக உள்ளது. கிச்சனும் தான்.
அறியாமையால் வயிறு பசி உணவு என்று உடலை படுத்தியது புரிந்ததால் வாரம் இரண்டு நாட்கள் உடலுக்கும் மனதுக்கும் உணவில்லா ஓய்வு கொடுக்க முடிவெடுத்துவிட்டேன்.
பொறுத்தார் ஆரோக்யம் அடைவார் புரிந்தது.
வாழ்க பொறுமையுடன்.

*நண்பர் 51* - Losing 6kgs in 6 days, this may feel good... The calorie intake goes very less during this period...and body metabolism rate can be low too...  In this case consuming regular diet may put up more body mass/weight that the current body weight..  So in order to maintain the reduced body weight one should take 10 to 20% less calories that the amount of calories which is normally consumed.

*நண்பர் 52* - மதியுடன் பயணித்துக்கு என் மனமார்ந்த நன்றி🙏.என் வயிற்றின் பிரச்சினை சரியாகி விட்டது. முகம் பொலிவு டன்  இருக்கு. Fresh feel பண்ணுகிறேன்👍☺.மனம் அமைதியாக இருக்கு. 5 வது நாள் பசி உணர்வே இல்லை. 6வது நாள் 3 மணிக்கு மேல் என் உடலில் சூரசம்ஹாரம் தொடங்கி விட்டது. படபட என்றும் வியர்க்க ஆரம்பித்து விட்டது.வீட்டுக்கு வந்து படுத்து விட்டேன். சாலட் மிகவும் அருமை.😋.இடுப்பு வலி பாதி குறைந்து இருக்கு🙏.நிறைவாக உணர்கிறேன். தங்களுடைய பயணம்  தொடர வாழ்த்துக்கள். நங்களும் உங்களுடன் பயணிக்கிறோம் .மிக்க நன்றி.    _ராஜேஸ்வரி. கரூர்        🙏🙏🙏

*நண்பர் 53* - மதி அவர்களுக்கு வணக்கம். முதல் நாளில் இருந்து திருக்கல்யாணம் வரை உள்ள ஏழு நாட்கள் ஓவ்வொரு நாளும் படிப்படியாக நல்ல அனுபவங்கள் மனம். ஆசை. அடக்கி ஆள நல்ல தன் னம்பிக்கையை கொடுத்துள்ளது. நன்றி

*நண்பர் 54* - விரதம் நன்றாக முடிந்தது.ஆரம்பம் முதல் இறுதி வரை எங்களுக்கு உறுதுனையாக இருந்த மருதவாகை மற்றும் ஐயா மதிவாணன் அவர்களுக்கும என் அன்புகளந்த நன்றி.

*நண்பர் 55* - Thanks a lot mathi sir Murugan arul la lum unga guidance aalum entha nombu naala vidhamaaga mudinthadhu.. 
In my life I didn't do this much days fasting.. its a great miracle... This 6 days fast  does many wonders internally and externally..
Thanks once again mathi sir.🙏🤝

*நண்பர் 56* - வணக்கம் மணிகண்டன், நாமக்கல். ஒரு நாள் விரதம் பல முறை இருந்துள்ளேன்.தொடர்ச்சியாக 5நாட்கள் விரதம் இருந்தது இதுவே முதல்முறை. நல்லதொரு புதிய அனுபவம். இடையில் தலைவலி இருந்தது தேகம் சிறப்பாக இருக்கிறது தற்போது😜💐💐💐குழுவை வழி நடத்திச் சென்ற அண்ணணுக்கு நன்றி 👍👍

*நண்பர் 57* - வணக்கம் எனது பெயர் முருகானந்தம் 
நானும் என் மனைவியும் முதன் முதலாக ஸஸ்டி விரதம் இருந்தோம் நன்றாக முடிந்தது.
நாங்கள் மாதம் ஒரு முறை கார்த்திகை விரதம் இருப்போம் அதனால் முதனால் எங்களுக்கு எதுவும் தெரியவில்லை.
இரண்டாம் நாள் முதல் நாங்கள்.பசியின் அருமையை உணர்ந்தோம்.உணவின் மகத்துவம் புரிந்தது.
பசித்தபின் உண்ணும் உணவு அமிர்தம் என்பதை நன்கு உணர்ந்தேன்.
இது அத்தனையும் உங்களால் சாத்தியமாற்று.நாங்கள் உங்களுக்கு தலை வணங்கி நன்றி கூறுகிறோம்..

*நண்பர் 58* - மு.பூர்ணசந்திரன்.ஐயா.          இன்று புதன் கிழமை மதியம் சென்னிமலை முருகன் கோவி்லில் திருகல்யானம் பார்த்துவிட்டு விரதம் முடித்துவிட்டு நானும்எனது மனைவியும் வந்தோம்.         ஐயா முதல் இரன்டு நாட்கள் மிகவும் சோர்வாக இருந்து தலைவலி இருந்து.              மற்ற நாட்கள் சோர்வு இல்லை உடம்பும் மனதும் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிது     ஆறு நாட்கள் விரதம் இருப்பது கடினம் என பயந்தேன் ஐயா உங்களின் வழி காட்டுதலுக்கு மிக்க நன்றிஐயா.👍

*நண்பர் 59* - அபிநயா.பூ
இப்போது எனது மனமும் உடலும் தூய்மையாக உள்ளது ஐயா .குழு நண்பர்களையும் என்னையும் சிறப்பாக வழிநடத்திய எங்கள் குரு  மதி ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி💐

*நண்பர் 60* - என் வாழ் நாளிலே முதன் முதலாக சஷ்டி விரதம் இருந்தேன். இப்பொழுது என் உடம்பு என் பேச்சைக் கேட்டு நடக்க ஆரம்பித்துள்ளது. இவை அனைத்தும் நன்றாக நடந்து முடிக்க முழுக்க முழுக்க திரு. மதிவாணன் அவர்களே காரணம். நான் எனது தாய் மற்றும் உடன் பிறவா சகோதரி ஒருவரையும் சஷ்டி விரதம் கடைபிடிக்க வைத்துள்ளதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

*நண்பர் 61* - வணக்கம் நான் காயத்ரி.  எங்களது வீட்டில் நான் மற்றும் எனது கணவர் வெங்கடேஷ் சஷ்டி விரதத்தை கடைபிடித்தோம். மிகவும் அருமையான அனுபவமாக அமைந்தது. நாங்கள் எப்போதும்  ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பது  வழக்கம். அதனால் ரொம்ப சிறமம் தெரியவில்லை.  நான் நான்கு  நாட்கள் பழங்கள்,பால் மற்றும் 1,2 ஸ்வீட் சாப்பிட்டேன். 5ஆம் வெறும் பால் மற்றும் தண்ணீர் அறுத்தினேன். 6 ஆம்  நாள் வெறும் தண்ணீர். வெற்றிகரமாக முடித்து விட்டேன். இந்த நாட்களில் எனக்கு எந்த அசௌகரியமும் தெரியவில்லை ஆனால் இடையே சிறிதளவு தலைவலி மட்டும் இருந்தது. தினமும் மதிய தூக்கத்தை தான் கட்டுப்படுத்த  முடியலை. 2கி எடை குறைந்துள்ளது. இனி  தேவைக்கு மட்டும் உணவு எடுத்துக் கொள்ளலாம் என்று  நினைக்கிறேன். பசியை நாம் கட்டுப்படுத்த  முடியும் மற்றும் நாம் நினைப்பதயே நம் உடல்    கேட்கும் என்று புரிந்து  கொண்டேன்.  தங்களது வழிதாக்குதலுக்கு மிக்க  நன்றிங்க மதி ஐயா. 
I caught cold on the fourth day. Had thulasi kashayam as told by you. But still cold prevails. Otherwise I did not find any difficulty.
Thanks for your support and it was only because of we made it. Though couldn't follow 100%of what was said we accomplished it without much cheating. We learned that when we listen to what the body says we can lead a more healthy life. Thank you very much sir for your continuous motivation and support.

*நண்பர் 62* - என்னால் கடைசி மூன்று நாள் இருந்தேன். வேலை செய்யும் போது மட்டும் டயர்ட் அக இருந்தது. மற்ற படி என் உடல் நிலை நன்றாக இருந்தது. நன்றி மதி sir. டீ,காபி பழக்கம்  சிறு வயதிலேயே கிடையாது.வாரமிரு முறை காலையில் பழங்கள் மட்டுமே உண்பேன்.சிறுதானியங்களளில் கூழ்,கஞ்சி அதிகமாக சமைப்பேன்.இதனால் உண்ணா நோன்பை சமாளித்தேன்.வாழ்வில் முதல்முறை உண்ணாநோன்பு இருந்ததால்,முதல்நாள் தலைசுற்றலை உணா்ந்தேன்.பிறகு சா்க்கரையற்ற பால்,பழங்கள்,ஊறவைத்த பாதாம்,நிலக்கடலை,பாசிப்பயறு இரு நாட்கள் உண்டேன்.நான்காம் நாளிலிருந்து பால் ,தண்ணீர்,இளநீர்,மோர் எடுத்தேன்.4,5,இரு நாட்கள் மாலையில் பசித்தபோது பழங்கள்.உண்ணாநோன்பால்;
தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. முதலில், இத்தனை நபர்களின் உடல் நலத்திலும், பண்பாடு மற்றும் பாரம்பரிய மருத்துவத்தை கட்டிக்காத்து எங்களை, முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கும் உங்களின் சேவைக்கு நாங்கள் தான் முதலில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம்.
மிக்க நன்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 
சகோதரர் ஹீலர்.இரா.மதிவாணன் அவர்களே..
உங்கள் பணி தொடர மனதார வாழ்த்துகின்றோம் 👏🏻👏🏻👏🏻
வாழ்க நலமுடன்💐💐
வாழ்க வளமுடன்💐💐
நன்றி.🙏🏼

*நண்பர் 63* - குழுவாக செயல்பட்டதால் உறுதியுடன் உண்ணாநோன்பை நிறைவு செய்தேன். நன்றி மதிவாணன் ஐயா! என்னை விட வயதில் சிறியவரான தங்களை நீடு வாழ வாழ்த்துகிறேன். எடைகுறைவு,முகப்பொலிவு,பசியுணா்வு,உடல் சுறுசுறுப்பு இவற்றைப் பெற்றேன் எனக்கு 3 கிலோ எடை குறைந்துல்லது. மனக்கட்டுப்பாடு,உடலை புரிந்து கொள்வது ஏற்பட்டுள்ளது.அருமையான அனுபவம்.அருமைச்சகோதரர் மதி அவர்கள் ஆல் போல் தழைத்து,அருகு போல் வேரூன்றி நீடூழி வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்து,வாழ்த்தி வணங்குகிறேன்.நன்றி.

*நண்பர் 64* - எப்போதும் போல இந்த வருடமும் நாட்டுசற்கரை கலந்த வெண்ணீருடன் மட்டும் இருக்க முடிந்தது.... 3 இளநீர் மட்டும் இடையில் பருக நேர்ந்தது... சோர்வு பசி தாகம் இல்லை.... மனஓட்டம் குறைந்திருந்ததை உணர முடிந்தது.... குழுவிற்கு பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகுக....👍👍👍🙏

*நண்பர் 65* - நான் கடந்த 38 வருடங்களில் இப்படி ஒரு உண்ணாநோன்பை இருந்தது கிடையாது ஆனால்  6 நாட்களிளும் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. கடைசியாக 2 நாளில்  மட்டும் பசியும் இல்லை, தாகமும் இல்லை, ஆனால் உடல் பலம் இழந்துயிருந்தது. கழிவுகள் மட்டும் சரியாக வெளியேறின, வியப்பாக இருந்தது எப்படி என்று.
என் உடல் எடை  நன்றாக குறைந்து விட்டது.
இப்படி ஒரு அற்புதமான வாய்பை வழங்கிய திரு. ஹுலர் மதிவாணன்  அவர்களுக்கு எல்லாம் வள்ள 
முருகபெருமான் நல்லாசி வழங்க வேண்டுகிறேன். 
இப்படிக்கு. 
என்றும் உங்களுடன் 
ப.அருள்மணி.

*நண்பர் 66* - மதி ஐயா வணக்கம்..🙏🙏.. கந்த சஷ்டி விரதத்தைப் பற்றி ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் எங்களுக்கு விளக்கியதற்க்கு நன்றிகள் கோடி... கடந்த 30 வருடத்தில் இப்படியொரு விரத்த்தை கடைப்பிடித்து இருந்தது இல்லை.... இந்த விரத்தை என்னை முழு ஈடுபாட்டுடன் கடைபிடிக்க வைத்து, அவரும் விரதம் இருந்ததற்க்கு என் மனைவிக்கு நன்றி.. நான் இந்த 6நாளில் பசி, சுவை, உடலின் மொழி ஆகியவற்றை நன்றாக உணர்ந்தேன்... தாங்கள் கூறியபடி, உடல் கழிவுகள் வெளியேறியதை என்னால் காண முடிந்தது.. தினந்தோறும் தாங்கள் கூறிய அறிவுரைகள், நகைச்சுவை கலந்த பேச்சு , பக்தி பாடல்கள் அனைத்துமே மிக மிக அருமை👌👌👌👌.... இந்த 6நாள் கந்த சஷ்டி விரதம் இருந்த 663நண்பர்களும் நோய் நொடி இன்றி, நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ என் வாழ்த்துக்கள்.....🙏🙏🙏.. எங்களுக்கு 
தற்ச்சார்பு வகுப்பை ஏற்ப்பாடு செய்து, தங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்திய BHEL- நணபர்ளுக்கு எனது பாராட்டுக்கள் 👏👏👏👏👏... நண்பர்கள் அனைவரும் இயற்கையோடு ஒன்றினைந்த, இயற்கை வாழ்வியல் முறையை வாழ எனது வாழ்த்துக்கள்.... மதி ஐயா, தங்களது சேவைக்கு நன்றி, நன்றி....... மேலும் தங்களுக்கு தெறிந்த தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்... நன்றி ஐயா, வாழ்க வளமுடன், தொடரட்டும் உங்களது சேவை......🙏🙏🙏🙏🙏 அன்புடன், ந.பாலமுருகன், பாரத மிகுமின் நிறுவனம், திருச்சி......🕺🕺🕺🕺🕺🕺

*நண்பர் 67* - அனைவருக்கும் வணக்கம்.. ஆறுநாள் நல்ல அனுபவம் அதை கொடுத்த மதி அவர்களுக்கு நன்றிகள் பல... வாழ்க வளமுடன்.. மன அமைதி நல்ல சுறுசுறுப்பாக இருந்தது கடைசி நாள் மட்டும் டயடு தெரிந்தது.. சாப்பாடு இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை மாறி சாப்பாடு இல்லாமல் வாழ முடியும் என்ற நிலை வந்து விட்டது.. நா வாழ்க்கைல கந்த  சஷ்டி சவசம் படித்ததே இல்லை ஆனல் இந்த ஆறு நாளில் அதை படிக்கும் போது மனதில் ஒரு இனம் புரியா மகிழ்ச்சி இருந்தது.. இனி மாதம் இரு முறை விரதம் இருக்கனும் என்று முடிவு எடுத்து உள்ளளேன்.. வாய்ப்பு அளித்த மதி அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி..🙏🙏🙏🙏          ப.மலர்கொடி., ஆத்தூர்

*நண்பர் 68* - நான் வருடா வருடம் ஆறு நாட்கள் நோன்பிறுப்பேன்.காலையில் கருவேப்பிலை சேர்த்து தேங்காய் பால், பின்னர்  இளநீர் தேவையெனில் கரும்பு பால் எடுத்துக்கொள்வேன். உடலும் மனமும் லேசானது போல் இருக்கும். மனம் புத்துனர்ச்சியுடன் இருக்கும். மனதில் தேவையற்ற குழப்பங்கள் அகலும். 💐💐
மிகவும் பசித்த பின் உண்ணும்போது... அமிர்தமாக இருந்தது. இரண்டு நாட்கள் மட்டும் தான் இருந்தேன் மீதி நாட்கள் ஒருவேளை சாப்பிட்டு விட்டேன். முகம் பொலிவு பெற்றதாக நண்பர்கள் தெரிவித்தார்கள். வாரத்தில் ஒரு நாள் தண்ணீர் பழங்கள் நாட்டுகாய்கறிகள் எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளோன்...

*நண்பர் 69* - எங்களுக்கும் மதி இருக்கிறது என்பதை உணர்த்திய மதி அவர்களுக்கு நன்றி.
ஆனாலும் மதி அவர்களின் தொடர் கண்காணிப்பில் இந்த உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக முடிந்தது.
மேலும் பல ஆண்டுகள் தொடரட்டும் தங்களது வழிகாட்டுதல்.
தொடரட்டும் தங்களது சேவைகள். வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.ஓம் நமசிவாய வாழ்க.🙏💐💐🌹🌺🌷🌸

*நண்பர் 70* - Mathi sir,
Thank u for 6,days guidance
 5நாட்கள் நான் பசியை உணறவில்லை
6 வது நாள் நான் மிகவும் பசி அதிகமாக இருந்தது. இருந்தும் நான் விரதத்தை தொடர்ந்து நிறைவு செய்தேன். மற்றும் உடல் எடை 3 கிலோ குறைந்துள்ளேன். அரசாணிக்காய் ஜீசின் சுவை மிகவும் அருமை.
மிகவும் நன்றி sir

*நண்பர் 71* - நன்றி மதி அவர்களே. உண்ணா நோன்பு மேற்கொண்ட போது. முதல் மூன்று நாட்களுக்கு மாலையில் இருந்து தலைவலி இருந்தது. நான்காம் நாள் நீங்கள் கூறிய படி எதுவும் சாப்பிடாமல் இருந்ததால் தலைவலி குணமானது. நான்காம் நாளில் இருந்து பழச்சாறு மட்டுமே சாப்பிட்டேன். உடல் எடை குறைந்து உள்ளது. உடல் லேசாக இருந்தது புத்துணர்ச்சியுடன் காணப்பட்டேன்
எங்கள் அனைவர்க்கும் உடலை பற்றி கற்று க் கொடுத்ததற்கு மிகவும் நன்றி 🙏🙏🙏

*நண்பர் 72* - வணக்கம் சஷ்டி விரதம் இருந்த நபர்களில் நானும் ஒருத்தி. ஆறு நாட்களும் காலையில் ஒரு டம்ளர் பால் இரவில் ஒரு டம்ளர் பால் பசித்தால் தண்ணீர் இதுவே நான் ஆறு நாட்களும் கடைபிடித்து வந்த சஷ்டிவிரதம். பழங்கள் உண்ண தோன்றவில்லை. ஆறு நாட்களும் பசி என்பது என்ன என்று எனக்குத் தெரியவில்லை. மயக்கமோ உடல் நடுக்கமா ஏற்படவில்லை மேலும் நான் முன்பைவிட சுறுசுறுப்பாகவும் ஆழ்ந்த அமைதியாகவும் இருந்தது. முன்பைவிட இந்த வாழ்வியல் முறை பிடித்துப்போனதால் இதை தொடர விரும்புகிறேன். பசித்தால் பழங்களும் தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்தலாம் என முடிவு செய்துள்ளேன். ஒரு முப்பது நாட்கள் இவ்வாறு இருக்கலாம் என முடிவு செய்துள்ளேன். தக்க நேரத்தில் சஷ்டி விரதம் இருக்க எனக்கு உதவிய திரு மதிவாணன் அவர்களுக்கு என் நன்றிகள்.

*நண்பர் 73* - Enaku mathi udan unna viratham erupathu 3m varudam.  Muthal naal matiyam mattum kai nadukam vanthathu palachaaru eduthathum sari agivittathu. 2m naal night 11.30 maniku thukame varula vai eppavo pola erunthathu nalla karama urukai sapte agavendum pola erunthathu. Oru siruthuli viral nuni thottu sapitathum sari agi thukam vanthathu. Adutha natkalil palam kuda sapidama erunthum pasi unarvu varula.  6m naal nan oru IT park munnadi en friend kaga wait panitu erunthen. Afternoon lunch time. Anga nonveg biraiyani smell. First ellam lunch time la sapadu smell vanthale pasikum😄. Ana enna oru adisayam na 6 naal sapadu illama erunthum biraiyani smell vanthum kuda pasikala. Sapidavum thonula. Eppo vara sapida kuda maranthu pochu😄

*நண்பர் 74* - அன்ன ஆகாரமின்றி                 ஆகாய தண்ணீரை                        மட்டும்                                 இனிய கனிகளோடு        ஈசன் மகனின் கருணையால்                 உள்ளம் உவந்து உண்டு  ஊன் உறக்கம் அடக்கி எண்ணம் ஒருமைப்பட ஏற்றமிகு வாழ்வில் ஐம்புலன்கள் நெறிப்பட  ஒரு மனதோடு            ஓங்கார இசையோடு               அவ்டதம்    நீக்க                ஸ்கந்த சஷ்டி விரதத்தின் மகிமையை உணரச்செய்த       மதிவாணன் ஐயாவிற்கு              மனமார்ந்த நன்றிகள்

*நண்பர் 75* - வணக்கம். 
       எனக்கும் இது புது அனுபவம் தான். இது தான் முதல் முறை. முதல் விரதமும் கூட . என் உறவினரில் பலர் விரதம் இருந்ததால் அவர்களின் அனுபவம் உண்டு. 😊 என்ன சொல்ல. வாழ்க்கையில் சுகமான அனுபவமாக இருந்தது. 
முதல் நாள் முந்தைய நாள் சக்தியால் பெரிதாக ஒன்னு தோனல. கொஞ்சம் சோர்வு இருந்தது. சமாளிக்கக் கூடிய அளவில். இரண்டாம் நாள் நல்லா சோர்வை உணர்ந்தேன். மற்ற நாளில் சாப்பிடத் தடையில்லை. வேலையின் காரணமாக தள்ளிப்போடும் பொழுது  தெரியவில்லை. இந்த சமயத்தில் சமையல் பலு இல்லை. சாப்பிடக்கூடாத நிலையை உணர்ந்ததால் சாப்பிடாததால் தான் சோர்வாகிவிட்டேன் என மனம் கூறியது. தண்ணீர் எவ்வளவு குடித்தாலும் மனம் பசிக்கிறது என்ற நினைவில் எவ்வளவு குடித்தும் அடங்கவில்லை. கால் சமையல் கட்டிற்கே சென்றது. கண் தீனியையே தேடியது. அப்பொழுது உணர்ந்தேன் பசியின் கொடுமை எவ்வளவு  கொடுமையானது என்று.
மூன்றாவது நாள் பசியும் தெரியவில்லை.தாகமும் கம்மியாகியது. சோர்வும் குறைந்தது. 4,5,6 நாட்களில் ஒரு இளநீர் மட்டுமே. தண்ணீர் இல்லவே இல்லை.  விரதம் முடிக்க தண்டு பழ செலட் பாக்கும் பொழுது கண்,  கை இரண்டும் பசியில்லாத போதும் பரபரத்தது. ஆனால் சாப்பிடும் பொழுது சிறிதளவிற்கு மேல் முடியவில்லை. அப்பொழுது தான் பசியென்றால் என்னவென்று உணர்ந்தேன். இன்று கல்யாணம் 2.  சொந்த ஊருக்கு வந்துவிட்டேன்.  இலை முழுதும் பதார்த்தங்களும்,  உணவு வெஞ்சனவகைகளும். நிறைந்திருந்தது. செட்டிநாட்டு கல்யாணம் அனைவரும் அறிந்ததே. என்ன அதிசயம் மனம் சாப்பிட நோங்கவில்லை. பசி தெரியவில்லை. வயிற்றில் அலாரம் அடிக்கவில்லை என்பதை உணர்ந்தேன். சம்பிரதாயத்திற்கு இலையில் அமர்ந்து எழுந்தேன். இப்பொழுதுதான் உணர்கிறேன் இதுவரை பசிக்காக சாப்பிடவில்லை, மனதிற்காகவே என உணர்ந்தேன். உடல் லேசாக இருப்பதை உணர்கிறேன். அனாவசியமாக சோறு போட்டு இந்த உடலை வளர்த்து வியாதிக்கு இரத்தினக்கம்பளம் விரித்திருக்கிறேன் என்பதை. கடைசி மூன்று நாளும் சோர்வே தெரியவில்லை. மிக அருமையான அனுபவம்.
ஆரம்பத்திலிருந்து 3 நாட்கள் துளசி தண்ணீர், இளநீர். கடைசி 3 தினமும் 3 ஏ இளநீர் தான். தண்ணியுமில்லை. மொத்தத்தில் நம் முன்னோர் சொன்ன மனதிற்கு கடிவாளம் எப்படி,  எங்கெங்கு போடவேண்டுமென்பதை இந்த ஆறுநாளும் முருகனின் கருணையால் ஆத்மார்த்த பாடத்தை படித்தேன் என்பதே நிதர்சனம். தூண்டுகுச்சியாக இருந்த நமது மதி தம்பிக்கு நன்றிகள்பல.  தம்பியின் பதிவுகளை என் குழந்தைகளுக்கும் அனுப்பியதால் முருகன் அருளால் கணவர், 2 மகள்கள்,  சிறிய மாப்பிள்ளை ஆக எங்கள் வீட்டில் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்த பெருமை தம்பியையே சேரும் 🙏🙏🙏🙏

*நண்பர் 76* - ஆறுநாள் உண்ணாநோன்பு அனுபவம். என் வாழ்க்கையில் இப்படி ஒரு விரதம் இதற்கு முன்  இருந்ததில்லை... நானும் எனது கணவரும் விரதம் துவங்கினோம்... 
திரு. மதி அவர்கள் கூறிய அனைத்தையும் முடிந்த அளவுக்கு கடை பிடித்தோம்.. 
காய்ச்சல் வரவில்லை.. தலைவலி வரும்போது சீரக தண்ணீர் மிகவும் உதவியாக இருந்தது... 

முதல் நாள் மிகவும் ஆர்வமாக இருந்தது... இரண்டாம் நாள் கொஞ்சம் சாப்பாடு நியாபகம் வந்தது... என் கணவருக்கு பசி வந்தால் பத்தும் பறக்கும் என்ற பழமொழிக்கேற்ப பசிக்கும் போது உணவு இல்லை என்றால் கோபம் வரும்... பழங்கள் மட்டுமே உட்கொண்டு அவர் இந்த விரதத்தை வெற்றிகரமாக முடித்தது குடும்பத்தில் அனைவருக்கும் ஆச்சரியம்...
4 மற்றும் 5 தாம் நாள் கடினமான இருந்தது... எனக்கு இடை 4 கிலோ குறைந்தது.. இதனால் சிறிது மனச்சோர்வு ஏற்பட்டது... (நான் underweight person.... எனக்கு இடை அவ்வளவு எளிதாக கூடாது...)
இந்த குரூப்பின் பதிவுகளை படித்தால் சிறிது ஊக்கம் கிடைக்கும்... மதி அவர்கள் அனுப்பும் பதிவுகள் நகைச்சுவை கலந்து படிக்க நன்றாக இருக்கும்... 

6 வது நாள் ஒரு இளநீர் மட்டுமே எடுத்து கொண்டேன்.... கோவிலுக்கு சென்று நல்லபடியாக விரதம் முடிந்தது....

இப்போது மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது... முகம் பொலிவடைந்திருக்கிறது.... தன்னம்பிக்கை வந்திருக்கு... என்னால் முடியும் என்று நம்பிக்கை வந்திருக்கு.... 

 எனது உடலுக்கு என்னால் முடிந்த ஏதோ ஒரு நல்ல காரியம் செய்ததாக உணர்கிறேன்...  நம்மை தாங்கும் நமது உடலுக்கு  விரதம் மூலமாக நன்றி செலுத்துவதாக உணர்கிறேன்....

இந்த குழுவில் இருக்கும அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளுடன் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻

என்னுடன் சேர்ந்து இன்னும் 12 பெண்கள் விரதம் இருந்தனர்... அனைவரும் இந்த குழுவிற்கு நன்றி கூறினார்கள்.. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

மதி அவர்களே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தெய்வமே🙏🏻🙏🏻***"நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு" ***🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எங்களுக்கு வழிகாட்டி சந்தேகங்கள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பதில் அளித்ததற்காக கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நீங்களும் உங்கள் குடும்பமும் ஆரோக்கியத்துடன்   நீடூழி வாழ்க...

*நண்பர் 77* - ஐயா எனக்கு சைனஸ் மூக்கு முழுவதும் இருவேலை குளித்து மூச்சு விடமுடியாமல் அடைத்து விட்டது ,,இருந்தாலும் தொடர்ந்து தலைகுளித்தேன் அடுத்தஒருநாளில்  காலையில் சுவாசம் ம் சுகமாக ,,கிடைத்தது ,,இப்போது சிறிது தான் சிரமமாக உள்ளது ,.எந்த மருந்து ம் இதுவரை எடுக்கவில்லை,,

*நண்பர் 78* - வணக்கம்
என்னுடைய பெயர்
பவளம்ராணி
கந்த சஷ்டி விரதம்
என்னுடைய அனுபவம்
6 நாள் முதல் முன்று நாள் மஞ்சள் புஜனி ஜிஸ் மட்டும்
அடுத்த முன்று தண்ணீர் மட்டும்
உடல் எதோ மாற்றம்
நோண்பு க்கு
முன்னாடீ
இரண்டு முட்டீகால்காளிலு ம் வழி 4     ம் நாள் முட்டீ காணம போச்சி இது்எனக்கு அதிசியமா இருந்த்து முருகன் அருளால் நடந்த்து என்று தெறிந்து கொண.்டேன்

*நண்பர் 79* - சஷ்டி விரதம் அனுபவம் முருகனை மனதில் நிறுத்தி பதிவிட தொடங்குகிறேன் 
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
சஷ்டி விரதத்தை ஆரம்பிக்க செய்த உங்களுக்கு கோடான கோடி நன்றி 

*நண்பர் 80* - குழுவில் பயணித்தவர்கள் தான்  சொல்ல வேண்டும் மிக சிறப்பாக அமைந்தது பல போராட்டங்களும் உடல்ரீதியாக மனரீதியாக பலமாற்றங்கள் காய்ச்சல் தலைவலி உடம்பு சோர்வு அசதி ஏதோ  50/60வயதான ஒரு தெம்பில்லாத ஒரு உடல்நிலை நேற்று மாலை உடலிலே ரொம்ப மாற்றம் ரொம்ப சோர்வா இருந்தது ஆனால் இன்று நல்ல ஆரோக்கியமாக தோன்றுகிறது உடம்பு லேசா நல்ல சிந்தனைகள் ஆரோக்கியமான மனநிலை இதுபோல

*நண்பர் 81* - எப்போதும் நான் உணர்ந்துல்லை அந்தளவுக்கு இளமையாக உடலும் மனமும் எல்லாமேஒத்துழைப்போடு இந்த உடம்பை இயக்குகிறது என்பது ஆரோக்கியமாக தெரிகிறது 
ரொம்ப மகிழ்ச்சி நானே நம்ப முடியல ஆனால் இப்படி ஒரு விரதமிருந்து இருப்பது என்னாலே நம்ப முடியல எல்லாம் அப்பன் முருகன் அருளால் அருளோடு இந்த விரதத்தை சீரும் சிறப்பாக அமைய காரணம் முருகன் அருளால் உங்கள் பணி தொடர்ந்தது அதனால் இந்த விரதம் மிகச் சிறப்பாக முடிந்தது நன்றி வணக்கம் கோடான கோடி உங்களுக்கு வணக்கம்  🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

*நண்பர் 82* - மதி  அவா்கள்  தலமையில்  விரதம்  இருந்த   663   முருகன் அடியாா்களுக்ம்  தாங்கள்  என்னிய  என்னம்வெற்றியடை   விரதம் மேற்கொடு    முடியும்  தருனத்தில்  ஆண்டவனின்  அருள்  கிடைக்க  ஆல் மனதில்  இந்து   வாழ்த்துகிரேன்  வாழ்க   வழமுடன்..!
அனைவருக்கும் வணக்கம். கடந்த இரண்டு வருடமாக நலம் குழுவில் இந்த சஸ்டி விரதம் எப்படி இருந்தாங்கனு பார்த்து ஆச்சர்யம்பட்டேன்.  அந்த வருடத்தில் என்னால் இருக்க இயலா‌ததால் இந்த வருடம் நானும் என் கணவரும் இருந்தோம். முதலில் நான் 2 குழந்தைக்கு அம்மா. என் மகள் 1 வயது அவளுக்கு தாய் பால் கொடுத்து கொண்டு இருக்கிறேன். எப்படி என்னால் இருக்கு முடியும் என்ற தயக்கம் இருந்தது. விரதம் 2வது நாள் குழந்தைக்கு பால் வராமல் எனக்கு தலைசுற்றல் என சில தொந்தரவுகள் உணர்ந்தேன். பின் மதி சகோ அவரின் தொலைபேசி அழைப்பில் தொடர்பு கொண்டு அதற்கு தீர்வு பெற்றேன். எனக்கு அவரின் பேச்சு மிகுந்த  வலிமையை மனதளவிலும் உடலவிலும் தந்தது. பின்பு 3 ம் நாள் எனக்கு அக்கு மருத்துவ வகுப்பு இருந்தது. அங்கு வெகு நேரம் அமர்ந்து இருந்ததால் முதுகு வலி உணர்ந்தேன். அதற்கு அவரிடம் ஆலோசனை பெற்றேன். அந்த வலியும் சிறிது நேரத்தில் குறைந்தது. 4,5,6 ம் நாட்களில் உணவில்லாமல் வாழ முடியும்  என்று உணர்ந்தேன். பழங்கள் நமக்கு தரும் நன்மையை ருசித்தேன். என் குழந்தைகளை அழகாய் கவனித்து உண்ணா நோன்பு சிறப்பாக நிறைவு செய்தேன். இன்று காலை 7ம் நாள் சற்று தலைசுற்றல் இருந்தது. பின்பு கஞ்சி குடிக்க முடியாமல் வாந்தி
 வந்தது. சிறிது நேர ஓய்விற்கு பின் நான் என் சாதாரண உடல் வலிமை பெற்று இப்போது மிகுந்த உற்சாகம் மற்றும் மனதில் எண்ணத்தில் என சிலவற்றில் தெளிவாக நான் இப்போது இருப்பதை உணர்கிறேன். இந்த செயலை செய்ய எனக்கு உறுதுணையாக இருந்த மதி சகோ விற்கு மிகுந்த நன்றி. உடல் எடை 3 கிலோ குறைந்துள்ளது. உடலை மிகவும் லேசாக உணர்கிறேன். நன்றி 😊

*நண்பர் 83* - எனக்கு 4 கிலோ எடை குறைந்துள்ளது ஐயா.தேவையில்லாம சாப்டறது தொிஞ்சது. உணவின் அருமை புாிஞ்சுது. பழத்தின் சுவை உணர்ந்தேன். நன்றி ஐயா 😊 காப்பு கழட்டிவிட்டு அன்னதானமும் சாப்பிட்டு வந்துவிட்டேன்... 
இதுவரை உடனிருந்து நம்மை வழி நடத்திய திரு. மதிவாணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...😊🙏🏼😊

*நண்பர் 84* - Feeling  very  light  and  fresh, active..I could  feel  even calmness  with  thoughtless

*நண்பர் 85* - 1. முதல் நாள் கடுமையான தலைவலி, விரல் நுனியில் 21முறை அழுத்தம் கொடுக்க, தற்காலிக நிவாரணம் கிட்டியது.

2. இரண்டாம் நாள் 50% தலைவலி குறைந்தது. இலேசான கழுத்து வலி இருந்தது. (1, 2ம் நாளில்,பசித்தபோது கொய்யா, மாதுளை, இரவில் தேங்காய் துருவல்,  வாழைப்பழம்)

3.  மூன்றாம் நாள்முதல் அதிக வியர்வை. குறித்த நேரத்தில் உணவு உண்ணும் நினைவு மறைந்தது. தலைவலி நின்றது. உடல் லேசானது போல் உணர்வு. 

4. நான்காம் நாள் முகம் பொலிவுடன் இருக்கிறது என கூறினார்கள். சோம்பல் அகன்றது. (3, 4ம் நாளில் மஞ்சள் பூசனி சாறு, இளநீர், இரவில் மாதுளை)

5. ஐந்தாம் நாள் தண்ணீர், இளநீர் விரதம் துவக்கம். சிறுநீர் அடர்த்தியான நிறம். இரவில், நல்ல தூக்கம். 

6. ஆறாம் நாள் சிறுநீர் இயல்பான நிறம். 

விரதத்தின் பிந்தைய நிலை.
1. தற்போது உணவு மென்று கூழாக்கி விழுங்கும் முறையில் உண்பதால் அதிகமாக சாப்பிட தேவைப்படவில்லை.  விரைவில்  வயிறு நிறைந்த உணர்வு. உணவின் சுவை முழுமையாய் உணர்கிறேன். 
2. பிரம்ம முகூர்த்தத்தில் எழும் பழக்கம் ஒட்டிக்கொண்டது. 
3. காலை, மாலை சாம்பிராணி பழக்கத்தால், கொசு தொல்லை இல்லை. 
4. தொப்பை கரைந்து விட்டது. எடை 3கிலோ குறைந்தது. 7வருடம் வயது குறைந்த விட்டது. (7 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோ, தற்போது எடுத்த போட்டோவை ஒத்துள்ளது. பழைய புத்துணர்ச்சி, சுறுசுறுப்பு கிட்டியது) பொதுவாக 25கிலோ அரிசி மூட்டையை தூக்கிக் கொண்டு மாடி ஏறினால், மூச்சு வாங்கும். இன்று இரண்டு மூட்டை எடுத்துச் சென்றேன். எளிதாக இருந்தது. 
5. இப்போது மல நாற்றம் இல்லை. நெஞ்செரிச்சல் இல்லை. 
6. தலைவலி, கழுத்து வலி அறவே இல்லை. 
7. இனி எங்கள் வீட்டில் வாரம் ஒரு முறை காய்கறி கலவை, பழக்கலவை நிச்சயம் உண்டு. வீட்டில்  எல்லோருக்கும் சுவை பிடித்துவிட்டது. 

எனக்குத் தெரிந்தவரை, கழுகுக்கு இரண்டு வாழ்க்கை என்பார்கள். முதல் வாழ்வின் இறுதியில்   கழுகின் அலகுகளும், நகங்களும் இரையினை பிடித்து உண்ண இயலாதவாறு வளர்ந்து வளைந்து விடுமாம். பிறகு கழுகு ஒரு கற்கள் நிறைந்த மலை உச்சியில் சென்று தனது பழைய இறகுகளை பிய்த்து விட்டு, பாறையில் மோதி அலகினையும், நகங்களையும் உடைத்துக் கொள்ளுமாம். அதன் பின் அதற்கு புதிய இறகுகளும், நகங்களும், அலகும் வளருமாம். அதுவரை அது பசியை கடந்து காத்திருக்குமாம். பிறகு மீண்டும் புதிய பறவையாய் தனது ராஜ வாழ்க்கையை துவங்குமாம். அதுபோல, மதி அவர்களின் வழிகாட்டுதலால், புதிய உடற்பாங்கு, மனவுறுதி, தோற்றம் பெற்று புதிய வாழ்க்கையை துவங்கியுள்ளோம். நமது முன்னோர்கள் வகுத்தளித்த மரபினை, அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும், ஆவனப்படுத்திக் கொடுத்த குருசாமிக்கு ஒப்பான மதி  அவர்களுக்கு கோடானகோடி நன்றிகள்!!!

*நண்பர் 86* - Vanakam. Na 6 days viratham irunthathal manathelivu petren. Udal thelivu petren. Tired suthama ila. .nijama acharyama irku. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

*நண்பர் 87* - மூன்று வேளை உணவு என்பது தேவையில்லை ...உடலுக்கு உணவு தேவை என்ற மாயையிலிருந்து விழிப்பு நிலை ... காரம் ,புளிப்பு பிடிக்கவில்லை ...ஒருவேளை மட்டுமே சாப்பிட்டால் போதும் என்ற நிலை ... அருமை ...அருமை ... எம்பெருமான் முருகன் அருளால் ...
மதி அய்யா வழிகாட்டுதல்லால் உடலும் மனமும் கூறிய மொழி ... நன்றி ...நன்றி ...நன்றி ...

*நண்பர் 88* - திருத்துடிசையம்பதி எனும், 2000 வருடங்களுக்கு முற்பட்ட, மேட்டுப்பாளையம் ரோடு, வடமதுரையில் எழுந்தருள் பாலிக்கும்,  (பசியால் மயங்கிய சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இறைவனும், இறைவியும், தாமே சமைத்து, முருங்கை அமுது படைத்த) சுயம்பு மூர்த்தியாக உள்ள விருத்தீசுவர பெருமான், விசுவநாயகியம்மன் கோவிலில், இன்று அசுரவதம் இனிதே நடந்தேறியது. இறைவனை சுமக்கும் பேறும், தேன் தினை மாவு பிரசாதம் விநியோகிக்கும் பேறும் பெற்றேன். இறுதியில் வாழைத்தண்டு பிரசாதம் உண்ணும்போது அடடா, தேவமிர்தம் இதுவோ என எண்ணும்படி இருந்தது. என் வாழ்நாளில் கண்டிராத அற்புத சுவை. தொலைபேசி வீட்டிலேயே வைத்து விட்டதால், இறுதியில் வாழைத்தண்டு பிரசாதம் இரண்டு, மூன்று முறை  உண்டுவிட்டேன்.🙄🤔 இன்று மனம் மற்றும் ஆன்மா நிறைந்தது போன்ற உணர்வு. எல்லாம் மதி அவர்களின் வழிகாட்டுதலால் கிடைத்தது. மிக்க நன்றி!!!

*நண்பர் 89* - என் அனுபவம் வேறு யாருக்காவது இருந்தால் பகிருங்கள். உண்மையில் விரத நாட்கள் நான் நினைத்ததை விட சுலபமாகவே இருந்தன. முதல் நாள் தலைவலி, ஒருமுறை வாந்தி தவிர மற்ற நாட்கள் உற்சாகமாகவே சென்றன. இன்று காலையில் கஞ்சி செய்ய இயலவில்லை, இரண்டு இட்டலி சாப்பிட்டேன். இப்போது பிரச்சனை என்னவெனில் காலையில் இருந்து என்னுடைய வாய் நன்றாக இல்லை. காய்ச்சலுக்கு பிறகு இருக்கும் வாய் போல் இருக்கிறது. கொழகொழப்பாக, வறட்சியாக இருக்கிறது. தண்ணீர் தாகம் எடுத்து கொண்டே உள்ளது. எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தீரவில்லை. எதுவும் சாப்பிட பிடிக்கவில்லை.எந்த ருசியும் பிடிக்கவில்லை. வேறு யாருக்காவது இப்படி உள்ளதா. இது என்ன காரணத்தினால். தெரிந்தால் பகிருங்கள்.

*நண்பர் 90* - உடல் எடை ஐந்து கிலோ குறைந்து.  முகம் பொலிவுடன்  இருப்பதாக இன்று திருமண நிகழ்ச்சியில்  பார்தத உறவினர்கள்  கூறினர்.  இந்த எடையை இதே போல வைத்திருக்க என்ன செய்வது என்பதையும் கூறினால் மகிழ்ச்சி

*நண்பர் 91* - I have reduced 2kg and my husband 4 kg weight. We have successfully completed sasti for 2nd time in this group. Thanks to mathi avargal for his guidence in all the way continuously.🙏🏼🙏🏼🙏🏼

*நண்பர் 92* - சிறுநீர் தொற்று நோய்  இருந்தது. இந்த ஆறு நாட்களில் ஒரு நாள் மட்டும் இருந்தது.மிகப்பெரிய relief. இனிமேலும் வராமல் இருக்க என்ன செய்யலாம்

*நண்பர் 93* - முதல் முறை 6 நாள் நோம்பு 3 கிலோ மேலே எடை குறைந்து இருக்கு.. மற்றும் என் உடம்பு எப்போவும் சூடாக இருக்கும்..எப்போது 6 நாட்கள் மிக குளுயாக உள்ளது. நன்றி. மன வலிமை இன்று இருந்தது. ஆனால் இதே மனவலிமை எப்பொழுதும் இருக்க வேண்டும் சாப்பிடும் விஷயத்தில்☺☺

*நண்பர் 94* - வணக்கம் மதிவாணன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.ஆறு நாள் விரத்த் தில் பசி,தாகம்,சோர்வு,சுறுசுறுப்பு இப்படி உடலின் மொழிகளை உணர்ந்தேன்.முதல் நாள் தொடர்ந்து ஆறு நாட்கள் இருக்க முடியுமா என ஐயம் இருந்த து. 2  1/2 கி எடை குறைந்த து. எல்லா உணவுகளும் ருசித்து பார்க்க வேண்டும் என்று முன்பு இருந்த நிலை முற்றிலும் மாறிய உணர்வு.மனதில் புதிய தன்னம்பிக்கை. இன்றைய உலகமே கார்ப்பரேட்டாக மாறிய சூழலில் விரதத்தின் ஆன்மிகம் மற்றும்  அறிவியல் எமக்கு உணர வைத்து விரதத்தின் மூலம் புற்று நோய் வரை குண படுத்தலாம் என கூறியது மிகமிக வியப்பு.நமது முன்னோர்களின்கலாச்சாரம் ,பாரம்பரியம் அழிந்து வரும் சூழலில் இவற்றை மீட்டெடுக்க நீங்கள் செய்யும் இந்த சமுக செயல்கள் மிகசிறப்பு.எங்களை போன்ற இளைஞர்களுக்கு வழிக்காட்டி.தொடரட்டும்உங்கள் சமுகப்பணி
வாழ்க வளமுடன் 
நன்றி
கார்த்திக்,திருச்சி
💐💐💐💐💐💐💐💐

*நண்பர் 95* - மதி வாழ்க வளமுடன்.6 நாள் இருக்க முடியுமா .என மலைப்பாகத்தான் இருந்தது. சர்க்கரை நோயாளி என  முத்திரை வேறு. ஆனால் எப்படியாவது நிறைவு செய்ய வேண்டும் என வைராக்கியம் நீங்கள் கொடுத்த தைரியம் ஊக்கமாக இருந்தது.5நாட்கள் காலையில் பழங்கள் மதியம் ஊற வைத்த அவல்  இரவில் அதேபோல் சாப்பிட்டு 6 நாள் தண்ணீர் நடுவில் ஒரு சிறுதுண்டு வெள்ளரிக்காய்.சாப்பிட்டு மாலை ஒரு  திருமண வரவேற்பு க்கு செல்ல வேண்டியிருந்தது.நடக்க முடியுமா என நினைத்தேன்.மனதில்  ஊக்கம் பெற்று ஒரு சிரமமும் இல்லாமல் சென்று வந்தேன்.அருமையாக ஆறு நாட்களும் நிறைவு செய்தோம்.நன்றி மதி.

*நண்பர் 96* - இரண்டு நாட்கள் மட்டும் நோன்பு கடைப் பிடித்தேன் - வேலைப்பளு வினால் தொடர முடியவில்லை. இருப்பினும் உற்சாகமாகவே இருந்தது. மேற்கொண்டு மாதத்தில் இரண்டு நாட்கள் தொடரலாம் என்று இருக்கிறேன். - ஜனார்த்தனன்.

*நண்பர் 97* - இந்த விரத்தில் நான் புரிந்து கொண்டது....
தவிர்க்க முடியாத காரணத்தால் கடைசி இரண்டு நாட்கள் மட்டுமே விரதம் இருக்க முடிந்தது.. ஆனால் அந்த இரண்டு நாட்களும் சிரமமாக தான் இருந்தது.காரணம் வேலை பளு அதிகம்... பொதுவாக ஒவ்வொரு வேளையும் நான் பசித்த பிறகு சாப்பிடுவதால் அதன் மகிமையை நன்றாக உணர்ந்தேன்.விரத்தின் போது ஒய்வு சிறந்தது என்பது நன்றாக தெரிந்தது.. சோர்வாக இருக்கும் போது தொழில் ரீதியாக சிந்திக்க முடியவில்லை... உடல் ஓய்வையே விரும்புகிறது.. அதனால் விடுமுறை நாட்களில் விரதம் இருக்க முடிவு செய்துள்ளேன்.. விரதத்தின் பயன் மற்றும் கந்த சஷ்டி கவசதின் பெருமையை உணர செய்த மதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்...🤝🙏

*நண்பர் 98* - மதி இதே போல் மாதத்தில் ஒரு நாள் தேர்ந்தெடுத்து குழுவினர் அனைவரும் விரும்பினால் உண்ணாநோன்பு இருக்கலாம்.அடியேன் விருப்பம். தங்கள் விருப்பம் என்னவோ.

*நண்பர் 99* - We have completed our fasting today only. I used to eat lot of snacks frequently. But now I am not interested in that. I don’t like the tastes of that snacks, tea kadai vadai, Bajji, bonda etc. I don’t know how it is happening. Sorry for not typing in Tamil

*நண்பர் 100* - வணக்கம். யுவராணி. வனவாசில இருக்கேன். பொதுவா வருசத்துல ஐந்து நாட்கள் உண்ணா விரதம் இருப்போம். ஆனா அப்போல்லாம் நாம சாப்பிடாம இருக்கோம் நம்ம உடம்பு அதனாலதான் சோர்வா இருக்குன்னு தேனும். இப்பதான் விரதத்தின் அர்த்தம் புரிஞ்சிருக்கு. இனிமே சஷ்டி விரதம் இருக்க முயற்சி செய்யலாம். இனிவரும் விரதங்கள் அர்த்தமுள்ளதாகவும் ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும்  இருக்கும். மதிவாணன் அவர்களுக்கு நன்றி. நன்றி 🤝🏼🤝🏼

*நண்பர் 101* - முருகனின் அருளால் விரதம் இனிதாய் நிறைவுற்றது. சஷ்டி விரதத்தை கடைபிடிக்க வழிகாட்டிய உங்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நானும் என் கணவரும் சஷ்டி விரதம் இருப்பது இதுதான் முதல் முறை ஆறு நாட்கள் போனதே தெரியவில்லை. தண்ணீர் பசித்தால் பழம் எடுத்து கொண்டேன். நன்கு உற்சாகமாக இருந்தது. சோர்வே ஏற்படவில்லை. மனம் லேசாக இருந்தது. 3 கிலோ எடை குறைந்துள்ளது.கழிவுகள் வந்து சளி வெளியேற்றம் ஆனது. இனி மாத ம் வரும் சஷ்டி நாளில் விரதம் கடைபிடிக்க உள்ளேன். மிக்க நன்றி. முக்கியமான விஷயம்
உடல் வற்றியுள்ளது. பற்றாத பேன்ட் இப்போது சரியாக உள்ளது. முதலில் சாப்பிட்ட அளவில் பாதி சாப்பிடும் போது வயிறு நிறைந்தது போன்று இருக்கிறது. 

*நண்பர் 102* - இந்த விரத நாட்கள் முழுதும் வழிகாட்டி உறுதுணையாய் நின்ற சகோதரர் மதி அவர்களுக்கு நன்றி.
என் வாழ்வில் முதல் முறையாக சஷ்டிவிரதம் இருந்தேன்.
ஆறு நாள் என நினைப்பது ஆரம்பத்தில் கடினமாக இருந்ததால் அந்தந்த வேளையை மட்டும் கவனித்து கடைபிடித்தேன்,சற்று எளிதாயிருந்தது.
நன்கு பசித்தால் பழங்கள், ஊற வைத்த நிலக்கடலை,அவல் என சிறிது சிறிதாய் நன்கு மென்று ருசித்து சாப்பிட்டேன்.
இரவு முன்பைவிட சீக்கிரம் உறங்கினேன்.
உடல் முழுதும் நல்ல வலியை உணர்ந்தேன்.
காலையில் லேசாய் அசதியிருந்தாலும் நாக்கு பசியோ,தாகமோ இன்றி இன்னொரு நாள் விரதத்திற்கு எனக்கு முன்பே தயாராகிவிட்டது.
சில நாட்கள் பெரும்பாலும் ஒன்றும் சாப்பிடாவிட்டாலும் உடல் ஒத்துழைத்தது.
6 ம் நாள் நெருங்க,நெருங்க மனது இன்னும் திடமானது.
சஷ்டியன்று முழு உண்ணாநோன்பு கடைபிடித்தேன்.
3 கிலோ எடை குறைந்திருக்கிறேன்.
இன்று காலை வழக்கமான உணவை தேடி மனமோ,உடலோ அலைபாயவில்லை,பசியிலும்,
உணவை தேர்ந்தெடுப்பதிலும் ஒரு நிதானத்தை பார்த்தேன்.
உடல் மீது ஆச்சர்யமடைந்தேன்.
விரதத்தின் போது மற்றோர் சாப்பிடும் உணவை பார்க்கும் போது,இந்த உணவின் பின்னெல்லாம் எப்படி ஓடியிருக்கிறோம்,அதை சாப்பிடும்போது கூட அதை மதிக்காமல் டிவி,செல்போன் பார்த்துக் கொண்டு எப்படி சாப்பிட்டோம் என்று நினைத்து சிரித்துக் கொண்டேன்.
மொத்தத்தில் இந்த விரதம் எதை,எப்படி,எப்பொழுது சாப்பிட வேண்டும் என உளப்பூர்வமாய் உணர்த்தியது.
இதுநாள் வரை ருசிக்கி என்னை அடிமையாக்கி வைத்திருந்த நாக்கை,"சொல்லுங்க எசமான்" என என் உத்தரவுக்காக கட்டுப்பட வைத்தது நான் நினைத்துப் பார்க்காத மாற்றம். வாழ்க வையகம்.. வளர்க தற்சார்பு இயக்கம்..

*நண்பர் 103* - எங்கள் குடும்பத்தில் 3 நபர்கள் மட்டும் பெயர் பதிவு செய்தோம்.ஆனால் பெயர் கொடுக்காமல் மேலும் 4 பேர் விரதம் இருந்தார்கள். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் என் அம்மா அப்பா இருவரும் விரதம் இருந்தார்கள்.அப்பாவுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.இருந்தாலும் கடந்த ஆறு நாட்களும் அவரும் பழங்களை மட்டுமே எடுத்துகொண்டு இருந்தார்.முருகன் அருளால், மற்றும் சகோதரர் மதியின் வழிகாட்டுதலின்படி இது சாத்தியம் ஆயிற்று .உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.இந்த ஆறு நாட்களும் எங்களுக்கு நன்றாக வழி நடத்தினீர்கள்.
என் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள்.
நன்றாக உடல் எடை குறைந்து விட்டது.
கடைசி நாளில் நீர் விரதம் மட்டும் இருந்தேன்.அப்பொழுது வாயில் கொழ கொழா என நீர் சுரந்து கொண்டு இருந்தது.சிறுநீர் அடர்த்தியாக இருந்தது.மலம் பச்சை நிறத்தில் வெளியேறியது.
முகம் பொலிவுடன் காணப்படுகிறது .
இனிவரும் காலங்களிலும் எங்களை அன்போடு வழி நடத்துங்கள் 
வணக்கம்.

*நண்பர் 104* - வணக்கம் மதி அய்யா அவர்களுக்கு     
நன்றி அனைவரையும் சஷ்டி  விரதம் இருக்க வழிகாட்டியதற்கு, நான் ஆறு நாளும் தண்ணீர் மட்டும் பருகி விரதம் கடைபிடித்தேன் ஆனால் ஐந்தாம் நாள் அதிக களைப்பாக இருந்ததால் மூன்று வாழைபழம் இரவு மட்டும் எடுத்து கொண்டேன். ஆறு நாளும் இறைஅருளாளும் மன உறுதியோடும் விரதம் நல்ல படியாக அமைந்தது.பிரதோச விரதம் இருப்பேன் ஒரே நாளில் மாலை தலை வலி வந்துவிடும் ஆனால் ஆறு நாள் விரதத்தில் எந்த உடல் உபாதையும் இல்லை ஆச்சர்யமாக இருந்தது உடல் நன்கு மெலிந்து உடல் எடை குறைந்தது.

*நண்பர் 105* - வணக்கம் நான் ஏற்கனவே இரண்டு மூன்று தடவை திருச்செந்தூர் கோயிலில் சஷ்டி விரதம் இருந்திருக்கிறேன் இப்பொழுது கொஞ்சம் ulcer problem இருந்ததினால் நம்ம குழுவில் விரதம் இருக்க சொன்னபோது வேண்டாம் என்று முடிவு எடுத்திருந்தேன் கிருத்திகைக்கு மருதமலை சென்றபோது முருகன் அருளால் ஈர்க்கப்பட்டு அன்று பெயர் கொடுத்தேன் விரதத்தின் போது சற்று சோர்வாக உணர்ந்தேன் எனக்கு தலையில் இரண்டு மூன்று நீர்க்கட்டிகள் உண்டு சைனஸ்  உண்டு எனக்கு அவற்றில் இருந்து கழிவுகள் வெளியேறும் போது அந்த இடங்களில் துடிப்பை உணர்ந்தேன் மதி அவர்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் என்று நினைத்தாலும் துடிப்பு சற்று அதிகமானால் பயந்துபோய் அழைப்பேன் என்னதான் விரதம் இருந்தாலும் அவரும் அக்கணமே அழைப்பில் வந்து நிவாரணம் நல்குவார் நான் ஆச்சரியப்பட்டு போனேன் விரதம் முடிந்தது இப்போது சுறுசுறுப்பாக இருப்பதாக உணர்கிறேன் விரதம் இருந்த போதும் யார் உதவி கேட்டாலும் அக்கணமே உதவிய மதியை நினைத்தால் வியப்பாக இருக்கிறது 663 பெயரையும் விரதமிருக்க வைத்து அவர்களை வழிநடத்திய மதி பதினாறு பேறுகளும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் நன்றி.

*நண்பர் 106* - வணக்கம்.எனக்கு விரதத்திற்கு முன் வாய்புண் இருந்தது.விரதம்முடியும்போது குணமாகிருந்தது.மாதவிலக்கிலும் விரதம் இருக்கமுடியுமென தெரிந்துகொண்டேன்.வழிகாட்டிய மதிதம்பிக்கு நன்றி.

*நண்பர் 107* - This is the first time I am taking this shasti fasting... It helps us completely to realize our own body...  Mainly to differentiate between hunger and taste.. Also I understood that we can control hunger... Madhi sir's guidance is extraordinary which enabled all the 663 members to go ahead smoothly... I don't have tamil typing. Please bear with this.. Madhi sir's social thought is moulding a new society... Thank you sir... Let this be continued with the help of Madhi sir and blessings of lord Muruga as he showered this time... Thank you.. This is kalaiselvi from Chennai...

*நண்பர் 108* - வணக்கம்.. என் பெயர் இந்திரா.கோயம்புத்தூர். நான் விரதம் இருந்ததற்கு காரணம் தற்சார்பு தான் அதற்கு முதலில் என் நன்றி... நான் இதற்கு முன்   சஷ்டி விரதம் என்று இல்லை எந்த விரதமும் இருந்ததில்லை. சொல்ல போன சாப்பிடாம என்னால் இருக்கவே முடியாது..ஒரு ஆர்வத்தால் விரதம் இருக்க முடிவு செய்தேன்..ஆனால் முதல் இரண்டு நாள் எனக்கு சாப்பாடு தவிர வேறு எண்ணமே இல்லை.அவசரப்பட்டு காப்பு கட்டிடோம் அப்படி  நினைத்தேன். ஆனால் முன்றாவது நாளில் இருந்து மாற்றத்தை உணர்ந்தேன்.சாப்பிட்டாதான் ஆரோக்கியமாக இருக்க முடியும்   என்ற எண்ணம் மாறி எப்படி சாப்பிட்டால் ஆரோக்கியம் என்பது புரிந்தது.  டீ குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்.டீ குடிக்காவிட்டால் எனக்கு தலைவலி வரும் என்று நினைத்து எப்போதும் தலைவலிக்கும் போது டீ குடித்தேன். இப்போது தான் அது உண்மை இல்லை என்று உணர்ந்தேன். டீ குடிப்பதை நிறுத்தி விட்டேன்.  விரதத்திற்கு பின் உணவு பழக்கம் மாறி இருக்கிறது.இந்த ஆறுநாளில்  எனது மனதின் வலியை உணர்ந்தேன். நம் முன்னோர்கள்  நமக்கு எவ்வளவு அற்புதமான  விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள்........................................ இவை..அனைத்தையும் தாண்டி ஆறுநாள் விரதம் இருந்து... உள்ளம் உருகி , உடல் உருகி மருத மலை முருகனின் முன் நின்ற போது வார்த்தைகளால் சொல்ல முடியாத ஆனந்தம்......🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

*நண்பர் 109* - என்னால் இதெல்லாம் முடியும் என உணர வைத்ததற்கு (  அதி காலையில் எழ குளிர்ந்த நீரில் குளிக்க  தன்னம்பிக்கை வளர  மனம் கட்டுப்பட)  நன்றிகள் பல     🙏🙏🙏🙏🙏🙏   திருமதி ராஜேஷ்வரி கண்ணன்.

*நண்பர் 110* - Dear Mr.Mathivanan, First of all thank you for giving us this opportunity to take Kantha Sashti Viratham. This is the second year I am fasting with your guidance. This year my father, mother and wife also joined. I had severe headache and body pain in the second day.  I took guidance from you on second day and got relief. Likewise my wife had pain on fourth and fifth day, my mother had pain on fifth. All of us felt fresh, light, relived,   rejuvenated after the whole fasting period. Thanks for the whole experience. We are looking forward to year's fasting. Again, thanks for the whole experience. Continue your good work and best wishes. We felt

*நண்பர் 111* - என் பெயர் உஷா கோயம்புத்தூர்.  மதி அண்ணா முதலில் உங்களுக்கு நன்றி நன்றி நன்றி 🙏🏻எவ்வளவு சொன்னாலும் என் மனம் நிறைவடையாது. நான் இதுவரை உண்ணா நோம்பு இருந்தது இல்லை உண்ணா நோன்பு இருக்கிறேன் என்று யாராவது சொன்னாலும் சாமி சாப்பிட வேண்டாம்னு சொல்லுச்சா என்று கேட்பேன். ஆனால் நம் உடல் சாப்பிட வேண்டாம் என்று சொன்னது தெரியாமல்.  எனக்கு இப்போது நினைத்தால் கூட கனவு மாதிரி இருக்கிறது நானா ஆறு நாள் சாப்பிடாமல் இருந்தேன்  என்று. எனக்கு ஐந்து நாட்கள் பசியே இல்லை  கொஞ்சம் கால் வலி இருந்தது அதுவும் நீங்கள் சொன்ன நல்லெண்ணை பச்சை கற்பூரம் அதில் சரியானது.ஆறாவது நாள் தான் பசியை உணர்ந்தேன். இவ்வளவு நாளாக பசி இல்லாமல் எப்படி வேலாவேலைக்கு வயிற்றுக்கு வேலை கொடுத்து இருக்கிறேன் என்று என்னும் போது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இனி பசி வந்தால் தான் சாப்பிடுவேன். இந்த ஆறு நாள் என் வாழ்க்கையில் அற்புதமான நாள். என்னாலும் உண்ணா நோன்பு இருக்க முடியும் என்று உணர்ந்த நாள்.இந்த ஆறு நாட்களும் உங்கள் வேலைகளுக்கு நடுவில் எங்களை வழி நடத்தி எங்கள் உடல் உபாதைகளுக்கு தீர்வும் சொன்ன உங்களுக்கு மீண்டும் நன்றி நன்றி நன்றி 🙏🏻 மீண்டும் முருகனின்  அடுத்த வருடம் கந்த சஷ்டிக்காக காத்திருக்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻

*நண்பர் 112* - அன்புள்ள மதிவாணன் அவர்களுக்கு வணக்கம் கந்த சஷ்டி விரதத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்கிறேன். முதலாவதாக நான் ஒருசில வருடங்களாக சஷ்டி விரதத்தை கடைப்பிடித்து வருகிறேனீ. விரதத்தின் போது சோர்வு, உடல் வில ஏற்படும் போது அதைக் கஷ்டமாக நினைத்து பொறுத்துக் கொள்வேன். இந்த முறை உங்களுடைய வழிகாட்டுதல் இருந்ததால், சோர்வு, வலியின் உண்மையான காரணம் தெரிந்ததால் சுகமான அனுபவமாக இருந்தது, சோர்விற்கும் பசிக்கும் வித்யாசம் தெரிந்தது. உண்மையான பசியை உணர முடிந்தது. இது நான் கற்ற உடற்கல்வி ஆகும். சூரசய்ஹாரத்தன்று தாங்கள் குழுவில் பகிர்ந்திருந்த சிக்கல் சிங்காரவேலன் வீடியோ பார்த்த போது நெகிழ்ச்சியுடன் ஒரு கேவலுடன் கூடிய கண்ணீர் வெளிப்பட்டது. அந்த பரவச நிலைக்கே 6 நாட்கள் விரதமும் சமமாயிற்று. விரதத்திற்கு முன்பு எது சாப்பிட்டாலும் வயிற்றில் ஒரு heviness இருக்கும். இப்போது சாப்பிட்டு முடித்தால் ஒரு லேசான உணர்வுதான் உள்ளது. உணவின் மீது இயல்பாகவே ஒரு மனக்கட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. அனைவர் மீது மிகுந்த அன்பு உணர்வு மேலிடுகிறது. அனைவரிடமும் மிகவும் இணக்கமாக செயல்பட முடிகிறது. எனக்கு முன்பு இருந்த (வெகு நாட்களாக) இடுப்பு வலி இப்போது சுத்தமாக இல்லை. நான் தொட்டுத் தொட்டு பார்த்துக் கொள்கிறேன். துளி கூட வலி இல்லை. கண் சுற்றி இருந்த கருவளையம் பெருமளவு நீங்கி முகம்பளிச்சென உள்ளது. முகச்சுருக்கமம் குறைந்துள்ளது. சஷ்டி விரதம் தேஜஸ் கொடுக்கம் என்பதை உணர முடிகிறது. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இத்தனைக்கும் காரணமான உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அனைவருக்கும் ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என விரும்பி செயலாற்றி வரும் தங்களுக்கு இறைவன் அனைத்து நலன்களையும் வழங்குவார். வாழ்க வளமுடன் ! நன்றி.

ஆறுநாள் உண்ணாநோன்பு இருந்து தங்கள் அனுபவங்களை அழகாக 😍 தட்டச்சு செய்து அனுப்பிய அனைத்து நண்பர்களுக்கும் எனது உளமார நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ☺

உடலே மிச்சிறந்த மருத்துவர் 💪🏽☺
உண்ணாநோன்பே உயர்மருத்துவம் 🤐

நன்றி


உண்ணாநோன்பின் மகத்துவம் குறித்து உலக மருத்துவர்கள் !
---------------------------------------------------------------------------------------

1 - Cancer cells can not survive in oxygen environment - Dr.Otto Warburg

So insert more oxygen in the body by exercise.

அதிகம் ஆக்சிஜன் உள்ள உடலில் புற்றுநோய் வளராது. எனவே உடற்பயிற்ச்சி செய்து உங்கள் உடலில் அக்சிஜனை அதிகரித்துக்கொள்ளுங்கள்.

2 - Blockages in the arteries can be removed with Nitric oxide by eating raw vegetables and fruits - Dr.Ferid Murad

So eat plenty of fruits and raw vegetables to widen and remove the Blockages from arteries for proper blood supply to healthy cells.

பழங்கள் மற்றும் காய்களை சமைக்காமல் பச்சையாக உண்ணும் போது இரத்த குழாயில் உள்ள அடைப்புகள் நீங்கும்.

எனவே உணவில் அதிகம் பச்சை காய்கனிகள், பழங்கள் சேர்க்கவும்.

3 - Autophagy, Hungry body eats the damaged and cancer cells - Dr.Yoshinori Ohsumi

So fasting increases immunity and kill cancerous cells, Be fast atleast once in a week to increase immunity.

உண்ணாநோன்பு இருந்தால் உங்கள் உடல் பழுதடைந்த செல்கள் மற்றம் கேன்சர் செல்களை அழித்துவிடும்.

உண்ணா நோன்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பழுதடைந்த மற்றும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது ⚔ எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உண்ணாநோன்பு இருங்கள் 😌

நம் முன்னோர்கள் இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சொல்லிவிட்டார்கள் ☺

நம் முன்னோர் சொன்னதைத் தான், நானும் கடந்த மூன்று வருடங்களாக "கந்த சஷ்டி" விழாவின் போது எனது "ஆரோக்கியம் வளர்க்கும் ஆறுநாள்" கட்டுரையில் சொல்லி வருகிறேன்.

மீண்டும் சொல்கிறேன்

உடலே மருத்துவர் ☺
உண்ணாநோன்பே உயர் மருத்துவம் 🤐

நன்றி

வெளியான தேதி : 18.11.2018

(அடுத்த தலைப்பு : மருத்துவமனைகளாகும் பள்ளிகள்)

என்றும் அன்புடன் ☺❤

உங்கள் மதி 🌹🌹🌹

🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


Comments

  1. Hi marhi, all your post nice. Why don't you add option of whatsapp to share your msgs?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  2. Mathi, Sorry, misspelled your name due to auto correct...

    ReplyDelete
  3. காரணிகளை கருத்தில் கொண்டு, சமுதாய விமுமியங்களை உள்ளடக்கிய தங்களின் பார்வை பாராட்டுக்குறியது.

    ReplyDelete
  4. சிறந்த. தகவல் !!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

கட்டுரை 8 (05.04.2016)