இது நடக்க ? இதை செய்யுங்கள் !

இது நடக்க ? இதை செய்யுங்கள் !
-------------------------------------------------------------



Hydrocarbon, Methane திட்டம் ரத்து ஆக வேண்டுமா ?

அனைத்து வீடுகளிலும் இயற்கை எரிவாயு களன் அமையுங்கள் (Bio Gas Plant)

மரம் நட வேண்டுமா ?

இயற்கை விவசாயிகளிடம் இருந்து பொருட்களை வாங்குங்கள், பல்லுயிர் பெருக்கம் நடைபெற்று, பறவைகள் எச்சங்கள் மூலம் மரங்கள் பெருகி காடுகளை உருவாக்கும் (இரசாயன விவசாயத்தில் பறவைகள் அழிகிறது)

நிலத்தடி நீர் மட்டம் உயர வேண்டுமா ?

வீடுகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமையுங்கள்

மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டுமா ?

Tea, Coffee ஐ தவிர்த்து இயற்கை தேனீருக்கு மாறுங்கள்

ஆற்று நீரும், நிலத்தடி நீரும் தூய்மையாக இருக்க வேண்டுமா ?

இயற்கை சாயம் ஏற்றப்பட்ட துணியை மட்டும் உடுத்துங்கள்

நாட்டு மாட்டினங்களை பாதுகாக்க வேண்டுமா ?

நாட்டுப்பசும் பால், மோர், தயிர், நெய் எங்கிருந்தாலும் தேடி பயன்படுத்துங்கள்

உடல் ஆரோக்கியமாக இருக்க ஆசையா ?

உடலுக்கு வேலை கொடுங்கள்

மனம் ஆரோக்கியமாக இருக்க ஆசையா ?

அனைத்தையும் மறந்து குழந்தை போல் இரவு நன்றாக உறங்குங்கள்

கல் குவாரிகள் மூடப்பட வேண்டுமா ?

இயற்கை மரபு சார்ந்த மண் வீடு கட்டுங்கள்

காற்று மாசை குறைக்க வேண்டுமா ?

மின் வாகனங்களை பயன்படுத்துங்கள்

நமது மண் வளமாக வேண்டுமா ?

இயற்கை விவசாயிகளிடம் இருந்து உணவுப்பொருட்களை வாங்குங்கள்

பல்லுயிர் பெருக்கம் ஏற்பட்டு காடுகள் உருவாக வேண்டுமா ?

இயற்கை விவசாயிகளிடம் இருந்து உணவுப்பொருட்களை வாங்குங்கள்

நல்லுணவு கிடைக்க வேண்டுமா ?

இயற்கை விவசாயிகளிடம் இருந்து உணவுப் பொருட்களை பெறுங்கள்

ஆறுகள் உயிருடன் இருக்க வேண்டுமா ?

இனி பெரிய அணைகளை கட்டுவதை நிறுத்துங்கள்

நாடு தூய்மையாக இருக்க வேண்டுமா ?

உங்கள் குப்பைகளை நீங்களே அழியுங்கள்

நோய் குணமாக வேண்டுமா ?

இயற்கையில் விளைந்த உணவுப்பொருட்களை உண்ணுங்கள்

Zero budget ல் குடும்பம் நடத்த வேண்டுமா ?

உங்கள் ஊரை சுற்றி காடுகளை உருவாக்குங்கள்

நெகிழிகளை ஒழிக்க வேண்டுமா ?

இதை பயன்படுத்துவதை உடனே நிறுத்திவிட்டு துணிப்பை பயன்படுத்துங்கள்

புற்றுநோய் ஒழிய வேண்டுமா ?

இவற்றை ஒழியுங்கள், குளிர்சாதனப்பெட்டி, பேக்கரி, கடைகளில் கிடைக்கும் அசைவ உணவுகள்

குழந்தை பிறக்க வேண்டுமா ?

கொதிக்க வைத்த நீர், Ro தண்ணீர், மினரல் வாட்டர், பில்டர் தண்ணீர் பயன்படுத்துவதை உடனே நிறுத்துங்கள்

மூட்டு வலி, எலும்பு வலிகள் All joint pains, காது, முடி, நகம், பல், ஆண் பெண் Reproductive glands, கருப்பை, கருமுட்டை பை, சிறுநீரகம், சிறுநீர்பை, விதைப்பை, ஹார்மோன், தைராய்டு பிரச்சனைகள் குணமாக வேண்டுமா ?

கொதிக்க வைத்த நீர், Ro தண்ணீர், மினரல் வாட்டர், பில்டர் தண்ணீர் பயன்படுத்துவதை உடனே நிறுத்துங்கள்

ஆஸ்துமா, வீசிங் குணமாக வேண்டுமா ?

Ac ஐ பிடுங்கி எறிந்து விட்டு, காற்றோட்டமான இடத்தில் உறங்குங்கள், பச்சை தண்ணீரை குடியுங்கள், பச்சை தண்ணீரில் குளியுங்கள்

வாத நோய்கள் குணமாக வேண்டுமா ?

குக்கரை முச்சந்தியில் போட்டு உடையுங்கள்

பித்த நோய்கள் குணமாக வேண்டுமா ?

காலை சூரிய உதயத்திற்கு முன் குளிர்ந்த நீராடுங்கள்

கப நோய்கள் குணமாக வேண்டுமா ?

சிட்ரஸ் பழங்களை அதிகம் எடுங்கள்

அனைத்து மாதவிடாய் பிரச்சனை குணமாக வேண்டுமா ?

Sanitary Napkin ற்கு சமாதி கட்டிவிட்டு, சாதாரண பருத்தி துணி பயன்படுத்துங்கள்

அடிமை தேசத்தில் இருந்து மீள வேண்டுமா ?

உள்நாட்டு பொருட்களை பயன்படுத்துங்கள்


உங்கள் நோய்களை குணப்படுத்தும் மூலிகை செடிகள் தானாக முளைக்க வேண்டுமா ?

ஊரில் கொஞ்சம் காலி இடமாவது விட்டு வையுங்கள்

கீரை, காய்கனிகள் இலவசமாக கிடைக்க வேண்டுமா ?

வீட்டு கட்டும் போது கொஞ்சம் காலி இடத்தை விட்டு வையுங்கள்

பனங்காடு உருவாக வேண்டுமா ?

பனை பொருட்கள் அனைத்தையும் தேடி தேடி பயன்படுத்துங்கள்

உன் நீரை உனக்கு விற்கும் SUEZ நிறுவனம் இந்நாட்டை விட்டு ஓட வேண்டுமா ?

உங்கள் வீட்டின் அரசு நீர் இணைப்பை துண்டியுங்கள்

நாடு மற்றும் வீட்டின் பொருளாதாரம் உயர வேண்டுமா ?

தற்சார்பு பொருளாதாரத்தை கையில் எடுங்கள்

நிலம் வாங்க வேண்டுமா ?

சொந்த தொழில் தொடங்குங்கள்

ஒழுக்கம் நிறைந்த நாடு உருவாக வேண்டுமா ?

ஆன்மீகத்தை வளர்த்தெடுங்கள்

நம் மண் பாதுகாக்க பட வேண்டுமா ?

மண்ணின் தொழிலை மீட்டெடுத்து அதற்கு நீங்கள் உலக முதலாளி ஆகுங்கள்

வீட்டில் நோய், கடன் இருக்க கூடாதா ?

சீரியல் பார்ப்பதை நிறுத்துங்கள்

சுயமாக சிந்திக்க முடியவில்லையா ?

Tv யை போட்டுடையுங்கள், செய்தித்தாளை கிழித்துதெரியுங்கள்

உங்கள் குழந்தை அறிவாளியாக வளர வேண்டுமா ?

பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதை நிறுத்துங்கள்

உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமா ?

குல தெய்வத்தின் பாதம் பற்றுங்கள்

அனைத்து அழிவுகளில் இருந்தும் உங்கள் ஊரும் மக்களும் காக்கப்பட வேண்டுமா ?

உங்கள் ஊர் எல்லை தெய்வங்கள், காவல் தெய்வங்கள், கிராம தேவதைகளை மீட்டெடுங்கள்

உங்கள் நோய்க்கு நிரந்தர தீர்வு வேண்டுமா ?

மரபு மருத்துவம் பாருங்கள்

மின்சாரம் காலம் முழுவதும் இலவசமாக கிடைக்க வேண்டுமா ?

சூரிய மின் சக்தி பயன்படுத்துங்கள்

அடுப்பு எரிவாயு காலம் முழுவதும் இலவசமாக கிடைக்க வேண்டுமா ?

வீட்டில் Bio Gas Plant பொருத்துங்கள்

இதெல்லாம் செய்ய நேரம் வேண்டுமா ?

முகநூல், வாட்சாப் நேரத்தை குறையுங்கள்

காலம் முழுவதும் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, நிம்மதியாக வாழ வேண்டுமா ?

இயற்கையுடன் இணைந்து இருங்கள்

வீடும், நாடும் வளமாக வேண்டுமா ?

தற்சார்பு வாழ்வியலை மீட்டெடுங்கள்

அந்த அரசு வந்தால் நல்லது செய்யும்

இந்த அரசு வந்தால் நல்லது செய்யும்

என்று 60 ஆண்டுகளை ஓட்டிவிட்டோம்

ஆனால் அவர்கள் செய்தது என்னமோ நம்மைத்தான்.

கடமை தவறாமல் நீங்களும் ஒவ்வொறு ஐந்தாண்டும் கையில் மை பூசுகிறீர்கள்.

ஆனால் அவர்கள் உங்கள் முகத்தில் பூசியதென்னவோ கரியை தான்.

இந்நாட்டில் நடக்கும் அனைத்து தவறுகளுக்கும் நீங்கள் தான் காரணம்.

அனைத்தும் உங்கள் கையில் தான் உள்ளது என்பதை எப்பொழுது உணரப்போகிறீர்கள் ?

நாடு ஒழுக்க வழிப்பாதையில் பயணிக்க ஆன்மீகம் ஒன்றே சிறந்த வழி !

அழிவுத்திட்டங்களில் இருந்து நாட்டையும் !
நோய்களில் இருந்து மக்களையும் காக்க !
தற்சார்பு வாழ்வியல் ஒன்றே சிறந்த வழி !

இவ்வுலகில் உன்னை தவிர, உனக்கு வேறு யாரும் நல்லது செய்து விட முடியாது !

உலகு மாற ! நீ மாறு !

நான் மாறத்தொடங்கி விட்டேன், நீங்கள் ?

நன்றி

இரா.மதிவாணன்

💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

Comments

  1. அருமை.ஆனால் மக்கள் வெளிநாட்டு மோகத்தில் இருக்கும் போது நாம் என்ன செய்ய.....

    ReplyDelete
    Replies
    1. நாட்டு பற்று அதிகரிக்கும். எல்லாம் மாறும் ங்க.

      Delete

Post a Comment

Popular posts from this blog

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

கட்டுரை 8 (05.04.2016)