இரவு பணியின் பரிசு மரணம் ☠

இரவு பணியின் பரிசு மரணம் ☠
------------------------------------------------------------



உள்ளூர் மாடு விலை போகாது என்பார்கள்.

இரவு பணிக்கு செல்வோர் கோடி கோடியாய் வந்து கொட்டினாலும் அவர்களுக்கு வைத்தியம் பார்க்க மாட்டேன் என்று ஏற்கனவே பல முறை எனது Whats app குழுக்கள் மற்றும் முகநூலில் சொல்லி இருக்கிறேன். என்னிடம் சிகிச்சைக்கு வருவோர் அனைவரிடமும் இதை சொல்வது வழக்கம்.

அப்படி இரவு பணிக்கு செல்வோர் ஒருவர் என்னிடம் சிகிச்சைக்கு வந்து நடந்த சுவாரஸ்யமான விடையத்தை பிறகு பார்ப்போம்.

அதற்கு முன்

Hong Kong ல் இரவு பணிக்கு செல்வோரை வைத்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் திடுக்கிடும் பல அதிர்ச்சி முடிவுகள் வெளியானது.

இவை Anesthesia Academic Journal ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இச்செய்தியை முதலில் நேற்று முன்தினம் Indo Asian News Service 27.01.2019 ல் வெளியிட்டது.

அதன் பின் Press Trust Of India என்னும் News Agency அனைத்து ஆங்கில இணைய செய்தி தளத்திலும் இச்செய்தியை வெளியிட்டது.

இதோ அதன் link 👇🏽

https://m.timesofindia.com/home/science/night-shifts-may-cause-dna-damage-study/articleshow/67710439.cms

Indo Asian News Service வெளியிட்ட செய்தியின் link 👇🏽

https://in.news.yahoo.com/night-shift-damage-dna-study-095803070.html



கண் விழித்து இரவு வேலை பார்ப்பவர்களுக்கும் !

இரவு நேரம் கழித்து உறங்குபவர்களுக்கும் !

இரவு தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கும் !

ஏற்படும் பேராபத்துக்கள் !

இதை எதுவும் நான் சொல்லவில்லை சீன நாட்டில் The University of Hong Kong என்னும் பல்கலைக்கழகத்தில் Research Associate ஆக பணிபுரியும் S. W. Choi  என்னும் ஆய்வாளர் சொல்கிறார்.

இதோ ஆய்வு முடிவுகள் 👇🏽

Lack of proper sleep and night-time wakefulness can cause damage to the structure of the human DNA.

இரவு கண் விழிப்பதும், இரவு தூக்கமின்மையும் மனித மரபணு வடிவத்தையே சிதைக்கும்.

௧ - மரபணு சிதைவு (DNA damage)

௨ - புற்று நோய் (Cancer)

௩ - இருதய கோளாறுகள் (Cardiovascular disease)

௪ - நீரிழிவு (Diabetes)

௫ - வளர் சிதை மாற்றம் (Metabolic disorders)

௬ - நரம்பியல் நோய்கள் (Neurological disease)

௭ - நுரையீரல் நோய்கள் (pulmonary diseases)

௮ - மரபணு உறுதியற்ற தன்மை (Genomic instability)

௯ - செல் இறப்பு (Cell death)

இது மட்டுமா, இவர் குறிப்பிடும் முக்கிய வரிகள் இதோ 👇🏽

Although this work is very preliminary, it is clear form the results that even a single night of sleep deprivation can trigger events that may contribute to the developments of Chronic disease, said Siu-Wai Choi, of The University Of Hong Kong.

இது ஆரம்ப கட்ட ஆய்வாக இருந்தாலும், ஒரு நாள் இரவு தூக்கமின்மை கூட, நோய் காரணிகளை தூண்டிவிட்டு நாட்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதை ஆய்வு முடிவு தெளிவாகக்காட்டுகிறது என சொல்கிறார், The University of Hong Kong பல்கலைக்கழகத்தை சேர்ந்த Siu-Wai Choi என்னும் ஆய்வாளர்.

சரி வாருங்கள் ஏன் இரவு கண் விழிப்பது ஆபத்து என்று நான் சொல்கிறேன்.

பொதுவாக அனைத்து உறுப்புகளும் அனைத்து நேரத்திலும் இயங்கிக்கொண்டு இருந்தாலும், 2 மணி நேரங்களுக்கு ஒரு முறை குறிப்பிட்ட உறுப்பு அதிகமாக பிரபஞ்ச சக்தி பெற்று இயங்கும். எந்த எந்த உறுப்பு எந்த எந்த நேரத்தில் அதிகமாக இயங்குகிறது என்று அதிகாலை 3 மணி முதல் பார்ப்போம்.

உறுப்புகளின் நேரம் !




நுரையீரல்                 : 3 Am - 5 Am

பெருங்குடல்             : 5 Am - 7 Am

இரைப்பை                : 7 Am - 9 Am

மண்ணீரல்               : 9 Am - 11 Am

இருதயம்                   : 11 Am - 1 Pm

சிறுகுடல்                   : 1 Pm - 3 Pm

சிறுநீர்பை                 : 3 Pm - 5 Pm

சிறுநீரகம்                  : 5 Pm - 7 Pm

இருதய மேலுறை    : 7 Pm - 9 Pm

மூவெப்ப மண்டலம் : 9 Pm - 11 Pm

பித்தப்பை                  : 11 Pm - 1 Am

கல்லீரல்                     : 1 Am - 3 Am

இதில் மூவெப்ப மண்டலம், பித்தப்பை மற்றும் கல்லீரல் நேரத்தை யாரேனும் கவனித்தீர்களா ? இரவு 9 மணி முதல் 3 மணி வரை.

இந்த நேரங்களில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

இரவு 9 மணி முதல் 11 மணி வரை மூவெப்ப மண்டலம் இரத்தத்தை தூய்மை செய்ய உடலில் எங்கு எங்கு, எந்த அளவு வெப்பம் இருக்க வேண்டுமோ, அந்த அளவுகளை பொருத்தி வைப்பான். கழிவுகள் அதிகம் உள்ள இடத்தில் அதிகமாகவும், குறைவாக உள்ள இடத்தில் குறைவாகவும் வெப்பத்தை பொருத்தி வைப்பான் இவன்.

நீங்கள் இந்த நேரத்தில் ஓய்வில் இருந்தால் மட்டுமே வெப்பத்தை சீர் செய்யும் இந்த வேலை நடைபெறும். வேறு என்ன செய்துகொண்டிருந்தாலும், இந்த வேலை சரியாக நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

பின் மனித உடலின் பெரிய உறுப்பு என பெயர் பெற்ற புஜபலபராக்கிரமனான கல்லீரல் உடலை தன் கட்டுப்பாட்டிற்குள் எடுப்பான்.

இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை பித்தப்பை மற்றும் கல்லீரல் நேரம். இது இரத்தத்தை தூய்மைப்படுத்தும் நேரம்.

இந்த நேரத்தில் கல்லீரல் உச்சி முதல் பாதம் வரையில் உள்ள இரத்தங்களை தன்னிடம் வரவழைத்து அதில் உள்ள நச்சுக்களை முறிக்கும் வேலையை செய்வான்.

முறிக்கப்பட்ட நச்சுக்களை ஒரு மில்லியன் வடிப்பான்களை(Nephrons) தன்னகத்தே கொண்ட சிறுநீரகம் நச்சுக்களை வடித்து சிறுநீர்ப்பைக்குள் தள்ளிவிடுவான்.

பின் காலை சிறுநீர் செல்லும் வேளையில், விடிய விடிய இரத்தத்தை தூய்மை செய்யும் போது பிரிக்கப்பட்ட நச்சுக்கள் அனைத்தும் சிறுநீர்பை வெளியேற்றிவிடுவான். அதனால் தான், காலை போகும் முதல் சிறுநீர் பழுப்பு நிறம் மற்றும் நாற்றம் நிறைந்ததாக உள்ளது.

அது அனைத்தும் கல்லீரலால் முறிக்கப்பட்ட நச்சுக்கள். புடுங்கும் ஆணி அனைத்தும் தேவை இல்லாத ஆணி தான். எனவே இதை பிடித்து பரிசோதனை செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

பாருங்கள் உறுப்புகள் எப்படி ஒற்றுமையாக இயங்குகிறது என்று. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை உடல் உறுப்புகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.

கல்லீரல் உங்கள் இரத்தத்தை தூய்மை செய்யும் இந்த வேளையில்

நீங்கள்

இரவுப் பணியில் இருந்தாலோ !

உணவை அமுக்கிக்கொண்டு இருந்தாலோ !

கண் விழித்திருந்தாலோ !

தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தாலோ !

கைப்பேசி நோண்டிக்கொண்டிருந்தாலோ !

கதை பேசிக்கொண்டிருந்தாலோ !

ஏதேனும் யோசனை செய்து கொண்டிருந்தாலோ !

போர்வை இழுத்து தலையுடன் போத்தி, யார் யார் என்ன என்ன Status வைத்திருக்கிறார்கள் என பார்த்துக்கொண்டிருந்தாலோ !



கல்லீரல் இரத்தத்தை துய்மை செய்யும் வேலை ஸ்தம்பித்துவிடும். இந்த வேலை நடக்காது.

முட்டி முட்டி முடிந்தவரை இரத்தத்தை தூய்மை செய்ய முயற்சிப்பான், அவன் நேரத்தை நீங்கள் அபகரித்து அவனுக்கு நேரம் தர மாட்டீர்கள், பின் மீண்டும் அடுத்த நாள் அவன் நேரத்திற்காக காத்திருப்பான்.

நீங்கள் அடுத்த நாளும் கல்லீரல் நேரத்தில் தூங்குவதை தவிர அனைத்து சேட்டைகளும் செய்து கொண்டிருப்பீர்கள்.

மீண்டும் முட்டி முட்டி முடிந்தவரை இரத்தத்தை தூய்மை செய்ய முயற்சிப்பான். அவன் நேரத்தை நீங்கள் அபகரித்து அவனுக்கு நேரம் தர மாட்டீர்கள், பின் மீண்டும் அடுத்த நாள் அவன் நேரத்திற்காக காத்திருப்பான்.

மீண்டும் உங்களின் சேட்டைகள் தொடரும்.

இப்படி தொடர்ந்து நடக்கும் போது என்ன ஆகும் தெரியுமா ?

கல்லீரல் இரத்தத்தை தூய்மை செய்யும் வேலையில், நீங்கள் தூங்காமல் வேறு ஏதேனும் செய்து கொண்டிருந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறாமல் இரத்தத்திலேயே தங்கிவிடுகிறது.

ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஏதாவது ஒரு பொடி போட்டு கலந்துகொண்டே இருந்தால் அந்த நீரின் அடர்த்தி அதிகரித்து திடமாகுமா ? அல்லது திரவமாகவே இருக்குமா ?

திடமாகும் அல்லவா. அதேப்போல் தான்.

நீங்கள் இரவு தூங்காமல், கல்லீரலுக்கு அதன் நேரத்தை கொடுக்காததால், நச்சை முறிக்க நேரம் இல்லாமல், நச்சுக்கள் அனைத்தும் இரத்தத்திலேயோ தங்கி, இரத்தம் சாக்கடை போல் கெட்டியாக மாறிவிடுகிறது.

கெட்டியான இந்த இரத்தத்தை இதயம் Pump செய்ய சிரமப்பட்டு வேகம் குறையும். இந்த நேரத்தில் நீங்கள் ECG எடுத்து பார்த்தால் இதயம் Low pump rate காட்டும். உடனே உங்களுக்கு இதயக்கோளாறு என்று சொல்லிவிடும் ஆங்கில மருத்துவம்.

பிரச்சனை இதயத்திலா ? அல்லவே அல்ல

Low pump rate ற்கு காரணம் கெட்டியான இரத்தம்.

கெட்டியான இரத்தத்திற்கு காரணம் நீங்கள் தூங்காமல் இருந்தது.

இப்பொழுது பிரச்சனை எங்கு என்று பாமரன் கூட அறிவான்.

இரவு தூங்காமல், இப்படி இரத்தம் கெட்டியாகி கழிவுகள் இரத்தத்திலேயே தங்கிவிடுவதால் நச்சு வெளியேறாத இந்த இரத்தம் செல்லும் இடமெல்லாம் பல்வேறு விதமான நோய்களை உருவாக்கிவிடுகிறது.

என்ன நோய் என்று கேட்கிறீர்களா ? ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் உலகில் உள்ள அனைத்து நோய்களும் என்று சொல்லலாம். ஆம் இது தான் நோய்களுக்கு மிக முக்கிய காரணம்.

நீங்கள் என்ன தான் இயற்கையில் விளைந்த உணவுகளை எடுத்தாலும். இரவு நேரம் கழித்து உறங்கினால் உங்களுக்கும் இதே நிலை தான்.

உணவில் மட்டும் அல்ல, வாழ்க்கை முறையிலும் வர வேண்டும் மாற்றம்.

சிலர் சிரித்துக்கொண்டே சொல்வார்கள் பகலில் தூங்கி சமன் செய்து விடுவேன் என்று நீங்கள் சமன் செய்யவில்லை உங்களுக்கு நீங்களே சமாதி கட்டிக்கொள்கிறீர்கள்.

இரவு தூங்கினால் மட்டுமே இரத்தம் தூய்மை பெறும் உடல் உஷ்ணம் குறையும் பகலில் தூங்கினால் நோய் தான் வரும். பகலில் அரை மணி நேரம் ஓய்வு எடுக்கலாமே தவிர தூங்க கூடாது.

பகல் தூக்கம் ஆகாது என்பார்கள்.

ஜப்பான் நாட்டின் டோக்கியோவிலுள்ள யமடா டோமாஹைட் என்ற பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வில் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்களை ஆய்வு செய்ததில் 40 நிமிடத்திற்கு மேல் பகலில் தூங்குபவர்களுக்கு நீரிழிவு, உடல் பருமன் மற்றும் பல்வேறு நோயினால் தாக்கப்பட்டதை கண்டுபிடித்துள்ளார்கள்.

இதோ அதன் link

http://daily1tips.com/doc-1st/archives/7244

சரி கட்டுரையின் ஆரம்ப பகுதியில் சுவாரஸ்யமான விடையம் ஒன்று உள்ளது என்று சொன்னேன் அல்லவா அதை பார்க்கலாம் வாருங்கள்.

எனது சிகிச்சை மையத்திற்கு 11.02.2018 அன்று 33 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் சிகிச்சைக்காக குடும்பத்துடன் 7 பேர் ஒரு வாகனத்தில் வந்து இறங்கினார்கள்.

அனைவரும் ஒரு பதட்டத்துடன் வேர்க்க விறுவிறுக்க வந்து என் முன் அமர்ந்தார்கள். வணக்கம் ங்க, மருத்துவர் எனக்கு இதயக்கோளாறு என்று சொல்லிவிட்டார் எனக்கு பயமாக உள்ளது, இதை உங்கள் மருத்துவத்தில் சரி செய்ய முடியுங்களா என்று கேட்டார் பாதிக்கப்பட்ட நபர்.

நானும் நாடி பிடித்த அடுத்த கணமே அவரிடம் சொன்னேன், உங்களுக்கு பிரச்சனை இதயத்தில் அல்ல கல்லீரலில் என்று.

என்ன சொல்றீங்க மருத்துவர் ECG எடுத்து பார்த்து உங்களுக்கு இதயத்தில் பிரச்சனை இருக்கிறது என்றும் ஒரு நாளைக்கு நீங்கள் 14 மாத்திரை சாப்பிட வேண்டும் என்றும் எழுதி கொடுத்துள்ளார் பாருங்கள் என்றார்.

மீண்டும் சொல்கிறேன் உங்களுக்கு இதயத்தில் பிரச்சனை இல்லை, நீங்கள் இரவு பணிக்கு செல்கிறீர்கள், சரியா என்று கேட்டேன்.

உடனே அவர் ஆச்சர்யத்துடன் ஆமாங்க, நான் ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளேன், பெரும்பாலும் இரவு தூங்க முடியாது என்றார்.

பின் நான் வழக்கமாக சொல்வதை சொன்னேன். இரவு பணி செல்வோருக்கு நான் வைத்தியம் பார்ப்பதில்லை நீங்கள் செல்லலாம் என்றேன்.

முடிந்தால் அந்த பணியை விட்டு விட்டு வாருங்கள் பிறகு பார்க்கிறேன் என்றேன். குடும்பத்துடன் ஆலோசித்து, எனக்கு குணமானால் போதும் ங்க, இனி நான் இரவு பணிக்கு செல்ல மாட்டேன் என்றார்.

சரி என்று, நீங்கள் இரவு பணிக்கு செல்வதால் இரத்தம் தூய்மை பெறாமல் கெட்டியாகி இருப்பதால் இதயம் pump செய்ய சிரமப்படுகிறது என்று சொல்லி பிரச்சனை இதயத்தில் அல்ல உங்கள் தூக்கமின்மையில் என்பதை அவருக்கு புரிய வைத்து மரபு வைத்தியம் கொடுத்து அனுப்பி வைத்தேன்.

அலோபதி கொடுத்த 14 மாத்திரைகளும் அவருக்கு தேவைப்படாததாய் இருந்ததால் அனைத்தையும் அன்றே நிறுத்திவிட்டேன்.

மூன்று வாரம் கழித்து அதே ஆங்கில மருத்துவரிடம் சென்று பரிசோதித்து பார்த்துவிட்டு மகிழ்ச்சியாக முகத்தில் ஒரு புன்முறுவலுடன் என்னிடம் வந்தார், வணக்கம் ங்க மருத்துவர் ECG எடுத்து பார்த்து விட்டு உங்கள் இதயம் நன்றாகிவிட்டது, பரவாயில்லை நான் கொடுத்த மாத்திரைகள் அனைத்தையும் சரியாக எடுத்துள்ளீர்கள் என்றாராம் அந்த ஆங்கில மருத்துவர். இதை சிரித்துக்கொண்டே என்னிடம் சொன்னார்.

பிரச்சனையைத்தான் இவர்கள் சம்மந்தமே இல்லாமல் சொல்கிறார்கள் என்று பார்த்தால் குணமானதையும் சம்மந்தமே இல்லாமல் சொல்கிறார்களே என்று மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டேன். அப்படியாவது அவர்கள் சந்தோசப்பட்டுக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டேன்.

இந்த மூன்று வாரங்கள் பாதிக்கப்பட்ட நபர் இரவு சரியாக தூங்கியதால் கல்லீரல் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தம் தூய்மை பெற்று, இதன் அடர்த்தி சீராகியதால், இதயத்தில் Pumping rate normal ஆகி உள்ளது.

இது எதுவுமே தெரியாத ஆங்கில மருத்துவம் ஒரு Machine ஐ நம்பி அவருக்கு இதயத்தில் பிரச்சனை என்று சொல்லிவிட்டது. இதேப்போல் தான் இவர்களின் அனைத்து நோய் கண்டறிதல் முறையும் உள்ளது என்பது கேலிக்குரிய விடையம்.

ஒரு நோயை குணமாக்க வேண்டும் என்றால் அதன் மூல காரணத்தை கண்டுபிடிப்பதே ஒரு மருத்துவரின் வெற்றிக்கான முதல் படி.

தவறாக கணித்து முதல் படியிலேயே சறுக்கி விளையாடுகிறது ஆங்கில மருத்துவம். நோய் கண்டறிதலே தவறாக உள்ள பட்சத்தில் நோய்களை எப்படி இவர்கள் குணப்படுத்துவார்கள் ?

உண்மையில் பிரச்சனை ஒரு இடத்தில் இருக்க, Machine ஐ நம்பி, வேறு இடத்தில் வைத்தியம் பார்த்து மேலும் பிரச்சனைகளை அதிகப்படுத்தும் வேலையை மட்டுமே செய்கிறது ஆங்கில மருத்துவம். அனுபவப்பட்டோர் இதை நன்கு அறிவர்.

ஒரு மனிதனுக்கு மூச்சு காற்று எந்த அளவிற்கு முக்கியமோ அதே போல் தான் தூக்கமும் முக்கியம். எனவே தான் எனது சிகிச்சை படிவத்தில் இரவு உணவு உண்ணும் நேரம் மற்றும் இரவு தூங்கும் நேரம் கேட்டிருப்பேன்.

இரவு கண் விழித்து வேலை பார்த்து சாம்பாதிப்பது என்பது கண்ணை விற்று கண்ணாடி வாங்கும் செயல்.

பெட்டி பெட்டியாய் பணம், ஒரு மருத்துவரிடம் நீங்கள் கொடுத்தால் உங்கள் உயிரை அவரால் காப்பாற்றி விட முடியுமா ? முடியவே முடியாது.

உதாரணம் பல கோடி சொத்து இருந்தும் 75 நாள் ஒரு உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையில் தங்கி வைத்தியம் பார்த்த ஒரு அம்மாவின் உயிரை யாராலும் காப்பாற்ற முடியவில்லை என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

இழந்த பிறகு தான் தெரியும்
ஆரோக்கியத்தின் அருமை.

ஒரு இருபது வருடங்களுக்கு முன் எல்லோரும் எத்தனை மணிக்கு உறங்கச்சென்றார்கள் ?

நினைத்தாலே பட்டாம்பூச்சி சிறகடித்து மனதில் மகிழ்ச்சி பிறக்கும் அளவிற்கு அழகான நாட்கள் அவைகள், இரவு நேரத்தில் உணவு எடுத்து 8 மணிக்கெல்லாம் ஊரே அடங்கிவிடும். குடும்பமே ஒரே இடத்தில் ஒன்றாகத்தான் உறங்குவார்கள். காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தங்களது பணியை தொடங்குவார்கள்.

அப்பொழுது அனைவரும் ஆரோக்கியத்தில் திளைத்து இருந்தார்கள். ஆரோக்கியத்தின் அதிபதியாய் இருந்தார்கள்.

ஆனால் இப்பொழுது அனைவரும் எத்தனை மணிக்கு உறங்கச் செல்கிறார்கள் ? இதோ என்னிடம் சிகிச்சை பெற்றோர் குறிப்பிட்ட நேரத்தையே உதாரணமாக காட்டுகிறேன். சிகிச்சையாளர் பூர்த்தி செய்த படிவத்தின் படத்தை இதில் இணைத்துள்ளேன் நீங்களே பாருங்கள்.

இப்பொழுதெல்லாம் உணவு எடுப்பதே 10 மணியாக உள்ளது. சிலர் அதற்கும் மேல். உறங்க செல்வது பெரும்பாலும் 12 மணியாக உள்ளது. சிலர் அதற்கும் மேல்.

இச்சமூகத்தை பீடித்திருக்கும் 90 % சதவீதமான நோய்களுக்கு, இரவு நேரம் கழித்து உறங்குவது தான் முக்கிய காரணம் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?

இரவு உணவு எடுக்க சரியான நேரம் : 7Pm

இரவு உறங்க சரியான நேரம் : 9Pm

மிக அதிகபட்சம் 10 மணி வரை நீளலாம். Dead End Time 10Pm. இதற்கு மேல் தூக்கம் வராவிட்டாலும் ஒரு வினாடி கூட கண் விழித்திருக்க கூடாது, கண் மூடி படுத்து விட வேண்டும்.

இரவு எளிய உணவை மட்டுமே எடுக்க வேண்டும். இரவு 8 மணிக்கு மேல் உணவு எடுப்பது உங்கள் கல்லீரலை கசாப்பு கடைக்கு அனுப்புவதற்கு சமம். தூங்கும் முன் வயிற்றில் எதுவும் இருக்கக்கூடாது.

வயிற்றை நிறைத்து உறங்குபவரா நீங்கள் ? இப்பழக்கத்தை உடனே மாற்றிக்கொள்ளுங்கள் அல்லது மறைக்கப்படுவீர்கள் இயற்கையால்.

இரவு நீங்கள் கண் விழிக்கும் ஒவ்வொரு வினாடியும், உங்களின் இறுதி நாள் குறிக்கப்பட்டு வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தூக்கத்தில் கனவு வந்தால் அது கெட்ட தூக்கம். கனவு இல்லை என்றால் தான் அது நல்ல ஆழ்ந்த தூக்கம். பெரும்பாலானோருக்கு ஆழ்ந்த தூக்கம் வருவதில்லை.


காரணம் மூன்று

1 - தேனீர்
2 - மனதிற்கு அதிக வேலை
3 - உடல் உழைப்பு இன்மை

இம்மூன்றையும் சரி செய்தால் உங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வரும். அதாவது டீயை தவிர்த்து மனதின் வேலையை குறைத்து உடலின் வேலை அதிகப்படுத்தினால் ஆழ்ந்த தூக்கம் வரும்.

இப்படி ஆழ்ந்த தூக்கம் தூங்கினால், காலையில் உடல் பட்டாம்பூச்சி சிறகு போல் லேசாக இருந்து, புத்துணர்வுடன் உங்களை எழுப்பிவிடும், இல்லை என்றால் நீங்கள் சிரமப்பட்டு கனமான சோம்பல் உடலை தூக்க வேண்டியதாய் இருக்கும்.

இரவு 9 மணிக்கு மேல் கண் விழித்தால் உடல் கோளாறுகள் ஏற்படும் என்று உலகவல்லாதிக்க தீய சக்திக்கு நன்கு தெரிந்ததால் தான், இரவு 9 மணிக்கு மேல் மக்களை கவரும் வகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நாடகங்கள் ஒளி பரப்பப்படுகிறது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?

இரவு 9 மணிக்கு மேல் கண் விழித்தால் உடல் கோளாறுகள் ஏற்படும் என்று நன்கு தெரிந்ததால் தான் நம் நாட்டு இளைஞர்களை உலகவல்லாதிக்க நிறுவனங்கள் இரவு வேளையில் பணிக்கு அமர்த்துகிறார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?

நம்மிடம் இருந்த அறிவுப் பேழையை உலகவல்லாதிக்க தீய சக்தி திருடிச்சென்று இப்பொழுது, அதை நம் மீதே ஆயுதமாக பயன்படுத்தி வருகிறான்.

இதேப்போல் இன்னும் இன்னும் பல சதித்திட்டங்கள் அழகாக அரங்கேற்றம் பெற்று வருகின்றன.

இளைய சமூகமே, சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதை நீ அறியாமல் உன் உயிரை விற்று இரவு பணிக்கு செல்கிறாய் என்பதை எப்பொழுது உணரப்போகிறாய் ?

இரவு கண் விழித்திருப்பவரா நீங்கள் ?
நீங்கள் காண்பது கடைசி காட்சியாக கூட இருக்கலாம் கவனம் !

இரவு விழிக்கும் கண் !

நாளை விழிக்காமல் போகலாம் !

உயிர் வாழ உறங்கிடு !

நன்றி

கட்டுரை எண் : 52

வெளியான தேதி : 30.01.2019

நீங்கள் எனது அனைத்து கட்டுரைகளையும் rrmathi.blogspot.com என்ற Blog ல் படிக்கலாம்.






இரா.மதிவாணன்

😴😴😴😴😴😴😴😴😴😴😴😴
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Comments

  1. Instead of threatening night shift people who have no means for earNing, please suggest them alternate solution

    ReplyDelete
    Replies
    1. இதில் பிரச்சனை உள்ளது என்று தெரிந்ததால் தானே இப்பொழுது உங்களால் இந்த கேள்வியை கேட்க முடிந்தது ? இரவு பணியை மாற்றுவது ஒன்றே சிறந்த வழி.

      Delete
  2. Dear Mathi Sir

    Request to provide your no

    Need to consult for some health issues

    ReplyDelete
  3. It's okay sir, I will sleep within 9 - 10 PM. Could you tell me whats the best time to wake up?

    ReplyDelete
    Replies
    1. சூரிய உதயத்திற்கு முன் எழுவது சிறப்பு ங்க.

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Sir I read your article about night duty. I'm a ritreed police officer. Most of our duty is night rounds. How to manage our health and what is your advice to police men?. I have many complications in my health. I want to consult with you and appointment. Please give your contact number and address. My email address is
    balu.sivagami@gmail.com. I'm egarly waiting for your reply. Thanks 😊

    ReplyDelete
    Replies
    1. இந்த எண்ணில் நீங்கள் தொடர்புகொள்ளலாம்

      9750100011

      நன்றி ங்க

      Delete
  6. please give your mobile number sir

    ReplyDelete
  7. Sir Good Day, I have a small doubt, as you said, for organs that is working after 7AM to 9PM does it work even when we are awake.... ? is that fine to sleep after 11 ?? i do mid day shift mostly i work from 11 am to 9 PM even though i have Neuro problems like nerves bulging out and pains, Varicose, osteoarthritis, Carpel tunnel Syndrome in left hand, thyroid, Neck pain near scapular regions. is these all related to work stress or food habits. Please Advise if you got time...
    Regards
    Vidhya

    ReplyDelete
    Replies
    1. ஆம் வேலை செய்யும் ங்க ஆனால் இரவு தூக்கம் மிக அதிகபட்சம் 10 மணிக்குள்ளாக உறங்கச்சென்று விட வேண்டும். அதற்கு மேல் தாமதமானால் விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும்.

      Delete
  8. Hello sir, better leave your contact details or hospital details. It will help many

    ReplyDelete
  9. IF YOU'RE THE DOCTOR.
    Please provide your contact details so we can consult you sir.



    It seems to us that you're just a Random Blogger gathering information from various articles and claims to be a doctor with a well made up story.

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய சிகிச்சை மையத்தின் எண்

      Ammakannu Acu Clinic

      9750100011

      நன்றி ங்க

      Delete
  10. நன்றி அண்ணா.. மிகவும் சிறப்பாக எடுத்து சொல்லி உள்ளீர்கள்.. நான் Bsc.,it முடித்துவிட்டு Night shift job போலாம் என்று இருந்தான்.. இந்த கட்டுரை படித்த பிறகு.. பகலில் தான் வேலைக்கு போவேன் மிக்க நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

கட்டுரை 8 (05.04.2016)