கட்டுரை 47 (25.09.2018)

உங்கள் கட்டுப்பாட்டில் ஒரு உள் உறுப்பு  !
---------------------------------------------------------------------------



உங்கள் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஒரே ஒரு உள்உறுப்பு எதுனு சொல்லுங்க பார்ப்போம் ?

நீங்கள் நினைத்தால் அதை கெடுக்க முடியும்.

நீங்கள் நினைத்தால் அதை நன்றாக வைத்துக்கொள்ள முடியும்.

அந்த உறுப்பை கெடுத்தால் அனைத்தும் உறுப்புகளும் கெட்டொழியும்.

அந்த உறுப்பை நன்றாக வைத்துக்கொண்டால் அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியத்தில் திளைக்கும்.

என்னங்க தெரிந்ததா ? என்ன உறுப்பு அது ?

அதுதாங்க... நம்ம இரைப்பை !

மனிதனின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஒரே ஒரு உள்உறுப்பு.

நீங்கள் நினைத்தால் இரைப்பைக்கு நல்ல உணவை கொடுத்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.
நீங்கள் நினைத்தால் கெடுதலான உணவை கொடுத்து கெடுக்க முடியும்.

ஆகவே மனிதனின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஒரே ஒரு உள் உறுப்பு தான இது !

இரைப்பையினுள்ளே
எதை எப்பொழுது எப்படி போட வேண்டுமோ
அதை அப்பொழுது அப்படி போட்டால்
அனைத்தும் நன்றாக இருக்கும்.

ஒரு கவள உணவு இரைப்பையினுள் அனுப்புவதற்கு முன்னே ஒரு நிமிடம் நிதானமாய் சிந்தித்து பாருங்கள்.

அது நல்லுணவு என்றால் எடுத்துக்கொள்ளுங்கள்
கெட்ட உணவு என்றால் தவிர்த்துவிடுங்கள்.

நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் ஒரு கவள உணவை வாயில் எடுத்துப்போடும் உங்கள் கை தான் காரணம்.

நீங்கள் நோயாளி ஆவதற்கும் ஒரு கவள உணவை வாயில் எடுத்துப்போடும் உங்கள் கை தான் காரணம்.

எனவே ஆரோக்கியம் உங்கள் கையில்

நன்றி

வெளியிட்ட தேதி : 25.09.2018

(அடுத்த தலைப்பு : சபரிமலைக்கு ஏன் பெண்கள் செல்லக்கூடாது)

இரா.மதிவாணன்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

Comments

  1. Fact Fact.

    இந்த உண்மை தெரிந்தால், புரிந்தால் பல மருத்துவ செலவு மற்றும் அவஸ்தைகளை (குடும்பத்தாருக்கு கொடுக்கும் தொல்லையையும் சேர்த்து) தவிர்க்கலாம்.

    மீண்டும் நன்றி மதி.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

கட்டுரை 8 (05.04.2016)