கட்டுரை 46 (23.09.2018)

காகத்தின் பாடம் !
----------------------------------


இன்று மாலை வெளியில் தொடர்ந்து காகம் கத்தும் சத்தம் கேட்டுக்கெண்டே இருந்தது. வெளியில் சென்று பார்த்தால் குட்டி காகக்குஞ்சு கட்டிடத்திற்கு சீலிங் போட பயன்படுத்தப்படும் பலகை மேல் பறக்க முயற்சி செய்து கொண்டிருந்து.

அதன் அருகில் இரண்டு காகங்கள் சுற்றி சுற்றி பறந்து கத்திக்கொண்டே இருந்தது. அதை பறக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தது. நான் இதை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

அழகாக இருக்கிறதே என்று Phone ல் video எடுக்க சென்றால் என்னை 3d படம் போல் அருகில் பறந்து வந்து கொத்த வந்தது. நான் உள்ளே சென்றுவிட்டேன். பின் சாளரம் வழியாக பார்க்க ஆரம்பித்தேன் (இடைஞ்சலாக இருக்க கூடாது என்று, கொஞ்சம் பயமும் தான் 😂)

பின் சாலையில் இரண்டு நாய் நடந்து சென்றது, அப்படியே மேல் இருந்து கீழ் பறந்து வந்து கொத்திய கொத்தில் ஓட்டம் பிடித்த இரண்டு நாய்களும் திருப்பிப் பார்க்காமல் ஓடிவிட்டது 😂

பின் ஒருவர் குழந்தையை எடுத்து சாலையில் சென்றார் அவர்களையும் கொத்த சென்றது. ஓடிவிட்டார்கள். வேறு காகங்கள் அருகில் வந்தது அதையும் மேலும் கீழுமாக பறந்து பறந்து விரட்டி அடித்து. அழகான 3d காட்சிகள் 😍

பின் அங்கு சுற்றி இங்கு சுற்றி எனது clinic ல் படிக்கட்டில் ஒவ்வொறு படியாக பறந்து பறந்து ஏறி வந்தது. நான் அருகில் சென்றால் பெற்றோர் காகத்தின் சத்தம் என் காதை கிழித்ததோடு அல்லாமல் என்னை சீண்ட வந்தது.

பின் சாளரம் வழியே video எடுக்க துவங்கினேன். எனது clinic ல் இருந்து அருகில் உள்ள கட்டிடத்திற்கு தாவி பறந்து சென்று நின்றது. மெதுவாக கதவை திறந்து video எடுத்தேன் மீண்டும் 3d வடிவில் சீண்ட வந்தது (பின் கடைசியில் பார்த்தால் phone ல் video mode on செய்யவில்லை photo வில் இருந்திருக்கிறது 😬 பின் வீட்டில் video காட்டு என்று சொல்லும் போது திட்டு வாங்கினேன் அது வேறு விடையம் 😂)

காகத்தின் சத்தம் காதை கிழிக்க ரசித்து பார்த்துக்கொண்டு இருந்தேன். பின் எங்கள் வீட்டின் மெயின் கதவு முன் வந்து அமைதியாக நின்றுவிட்டது அந்த குட்டி குஞ்சு 😘 அப்பொழுது பார்த்து சரியாக வேலை முடித்து விட்டு என் அம்மா வீடு வந்தார்கள்.

அக்கம் பக்கத்துகாரர்கள் அருகில் செல்லாதீர்கள் கொத்திவிடும் என எச்சரித்தார்கள். குஞ்சும் நகருவதாக இல்லை. அம்மாவும் நின்று நின்று பார்த்தார்கள். அப்பொழுது நான் எனது clinic மாடியில் இருந்து இறங்க முயற்சித்தேன்.

நான் இறங்குவதை பெரிய காகம் மனிதர்களை போல் எட்டி எட்டி பார்த்தது. இறங்குவது தெரிந்ததும் கூச்சல் போட்டு சீண்ட வந்தது. என்னை வியப்படையச்செய்தது.

என்ன நடந்தாலும் பரவாயில்லை என குட்டி காக குஞ்சின் அருகில் சென்று காகத்தின் சத்தம் காதை கிழிக்க அருகில் உள்ள கட்டிடத்தில் தூக்கி விட்டேன். பின் பெரிய காகங்கள் அதன் அருகில் சென்று பார்த்துக்கொண்டது. (இந்த காணொளி இருக்கிறது பதிவு செய்கிறேன்)

காகத்தின் பாடம்

தன் அடுத்த தலைமுறையை காக்க இரண்டு பெரிய காகம் நாயிடமும், என்னிடமும், சாலையில் சென்ற மனிதர்களிடமும், பக்கத்தில் வந்து வேறு காகத்திடமும் சண்டையிட்டு விரட்டியது.

இந்த காகத்திற்கு இருக்கும் அறிவு ஏன் மனிதர்களுக்கு இல்லை ?

நம் அடுத்த தலைமுறை கண் முன்னே அழிந்துகொண்டிருக்க நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோமே !

அடுத்த தலைமுறை

இரசாயன விவசாயம் மூலம் அழிகிறது.
விதை இல்லா காய்கனி பழங்கள் மூலம் அழிகிறது.
Hybrid உணவு மூலம் அழிகிறது.
Macaley கல்வி மூலம் அழிகிறது.
பாக்கெட்டில் அடைத்த நச்சு உணவு மூலம் அழிகிறது.
பேக்கரி உணவுப்பண்டம் மூலம் அழிகிறது.
கலப்பட, போலி உணவு மூலம் அழிகிறது.
மீடியாவின் மூளைச்சலவை மூலம் அழிகிறது.
தவறான படங்கள் மூலம் அழிகிறது.
சின்னத்திரை அசிங்க நிகழ்ச்சிகள் மூலம் அழிகிறது.
சீரியல் மூலம் அழிகிறது.
Android phone மூலம் அழிகிறது.
தேவையில்லாத விளையாட்டு மூலம் அழிகிறது.
தவறான மருத்துவம் மூலம் அழிகிறது.
இயற்கையை அழிக்கும் அழிவுத்திட்டங்கள் மூலம் அழிகிறது.

இன்னும் எத்தனை எத்தனை அழிவுகள்

காகம் தன் குஞ்சை அனைத்து ஆபத்தில் இருந்து காத்தது போல், நாம் நம் அடுத்த தலைமுறையை அனைத்து ஆபத்துகளில் இருந்து காப்போமா 😥?

காகத்தின் பாடம் கற்போம்
அடுத்த தலைமுறையை காப்போம்

நன்றி

வெளியிட்ட தேதி : 23.09.2018



(அடுத்த தலைப்பு : உங்கள் கட்டுப்பாட்டில் ஒரு உள் உறுப்பு)

இரா.மதிவாணன்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Comments

  1. அருமை.கண்டிப்பாக பாடம் கற்போம்

    ReplyDelete
  2. முற்றிலும் உண்மையான கருத்து நன்றி

    ReplyDelete
  3. Super. Unagalathu article nandraga ullathu, neegala matha ithalil elutha viruppam eruthal plz call 9865272777

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

கட்டுரை 8 (05.04.2016)