கட்டுரை 45 (22.06.2018)

பேராபத்தில் கோயம்புத்தூர் மக்கள் !
---------------------------------------------------------------------


காஞ்சிமாநதியில் உலகிலேயே சுவையான சிறுவாணி நீரை அள்ளி குடித்து வளர்ந்து மக்களே தற்போது உங்களுக்கு குடிதண்ணீரை பிரஞ்சு நாட்டு Suez (சுயஸ்) என்னும் தனியார் கம்பனி வழங்க உள்ளதை அறிவீர்களோ !
ஆம், கோயம்புத்தூர் மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமத்தை கடந்த பிப்ரவரி மாதம் 3,150 கோடிக்கு பிரஞ்சு நாட்டின் சுயஸ் Suez என்னும் தனியார் நிறுவனத்திற்கு அரசு வழங்கிவிட்டது.

ஆதாரம் இதோ : 

இந்தியாவில் மிகப்பெரிய உரிமத்தை பெற்றுவிட்டோம் என அந்நிறுவனம் தனது Website ல் மார்தட்டி சொல்லி இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

இந்தியாவிலேயே டெல்லி மாளவியா நகருக்கு பிறகு இரண்டாவதாது கோயம்புத்தூரை கண்டுபிடித்து வந்துள்ளது இந்நிறுவனம்.

இனி இந்த தனியார் நிறுவனம் கொடுக்கும் நீரைத்தான் கோயம்புத்தூர் மக்கள் குடித்தாக வேண்டும்.

தற்போது பொலிவியா Boliva நாட்டில் Cochabamba என்னும் நகரில் நடந்த சம்பவத்தை பார்த்துவிட்டு வருவோம் வாருங்கள்.

அந்நாட்டு அரசு தன் மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமத்தை முதலில் SEMAPA என்னும் தனியார் கம்பனிக்கும் பின் இதே SUEZ சுயஸ் என்னும் தனியார் கம்பனிக்கு வழங்கியது.
கார்டை சொருகினால் தண்ணீர். 

கொடுக்கும் பணத்திற்கு ஏற்றார் போல் தண்ணீர் கொடுப்பார்கள். பணம் இல்லை என்றால் ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடையாது.

இப்படி ஆனதால், மக்கள் ஆற்று நீரை பயன்படுத்த துவங்கினார்கள். இதை பொருத்துக்கொள்ள முடியாத தனியார் கம்பனி. 

ஆற்று வழிப்பாதை அமைப்பதாக கூறி அங்கு தனியார் இரானுவத்தை நிறுத்தி மக்கள் ஆற்றில் நீர் எடுப்பதை தடுத்தார்கள். (இந்நேரம் ஜக்கியின் Rally for River ஐ உங்களுக்கு ஞாபகப்படுத்த விருப்புகிறேன்)
சரி ஆற்றில் தான் எடுக்க முடியாது. 

தன் வீட்டு கிணற்றில், Bore well ல் தண்ணீர் எடுத்து பயன்படுத்தினார்கள். அதையும் தடுத்து அதற்கு கட்டணம் வசூலித்தார்கள்.
வெறுத்துப் போன மக்கள், சரி மழை நீரையாவது பயன்படுத்துவோம் என மழை நீரை சேமித்து பயன்படுத்த துவங்கினார்கள். 

ஆத்திரமடைந்த கம்பனி மழை நீரை பயன்படுத்த கூடாது என்று அதற்கும் சரமாரியாக கட்டணம் வசூலித்து.
மழை நீரை கூட விட்டு வைக்கா பாவிகள் என... Even The Rain என்று இச்சம்பவம் ஒரு படமாக உருவானது.

வெகுண்டெழுந்த மக்கள் போர் களத்தில் குதித்தனர். உள்நாட்டு போர் வெடித்தது. மக்கள் அனைவரும் ஒன்றினைந்து போராடி அந்நிறுவனத்தை நாட்டை விட்டே அடித்து விரட்டினர்.

ஆதாரம் : 

இனி சுயஸ் க்கு பணம் கொடுத்தால் தான் குடிக்க தண்ணீர். அவன் வைப்பது தான் கட்டணம். கட்டணம் செலுத்தவில்லை எனில் குடிநீர் விநியோகம் துண்டிக்கப்படும்.

தண்ணீரை சுத்தம் செய்கிறேன் என்ற பேர்வழியில் என்னவெல்லாம் செய்யப்போகிறார்கள் என்பது தெரியாது.
மீடியாக்களில் இச்செய்தி திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. இதை பற்றி நாடாளுமன்றத்திலோ, சட்டசபையிலோ, கோவை மாநகராட்சி கூட்டத்திலோ விவாதம் நடந்ததாக எந்த செய்தியும் இல்லை.

இந்தப் பிரஞ்சுக் கம்பெனி தகவல் பெறும் சட்டத்தின் கீழ் வராது. யாரும் எந்த கேள்வியும் கேட்க முடியாது.

இது கோயம்புத்தூரோடு நின்றுவிடப்போவதில்லை இனி அனைத்து பெரு நகரங்களிலும் தனியார் நிறுவனங்கள் தங்கள் தண்ணீர் தொழிலை தடையின்றி செய்வார்கள்.

அதற்காக செயற்கையாக தண்ணீர் தட்டுப்பாடு கூட உருவாக்குவார்கள். கட்டணத்தையும் அவர்களே நிர்ணயம் செய்வார்கள்.

குடிக்கும் நீருக்கும், கர்பப்பைக்கும், சிறுநீரகத்திற்கும் குழந்தைப் பேருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதை மரபு மருத்துவர்கள் அறிவார்கள்.

நம் கலாச்சாரத்தில் நீருக்கு எந்த அளவு நாம் முக்கியத்துவம் தருகிறோம் என்பதை நீங்களே அறிவீர்கள்.

நீரின்றி அமையாது உலகு - வள்ளுவர்
தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே - பழமொழி
Science - Water has Memory.
இன்னும் எத்தனை எத்தனை. நீர் உங்கள் உயிருடன் தொடர்புடைய ஒரு உயிர்ப்பொருள்.

நம் தாய் மண்ணில் உருவான சிறுவானி நீரை, இனி உங்கள் நாவில் நினைக்க, நீங்கள் பிரஞ்சு நாட்டு காரனுங்கு கப்பம் கட்ட வேண்டும்.

தன் சொந்த நாட்டு மக்களுக்கு குடிநீரை கூட விநியோகிக்க துப்பில்லாத இந்த அரசு தான், நாளை அணு விபத்து ஏற்பட்டால் நம்மை காப்பாற்ற போகிறது.

நம்புங்கோள் மக்களே !
இது தான் சுதந்திர இந்தியா
இது தான் மக்களுக்கான அரசு
பணப்பேய் பிடித்த பிணந்தின்னிகள் இந்நாட்டை ஆளும் வரை இது தொடரும்...

நன்றி

வெளியிட்ட தேதி : 22.06.2018



(அடுத்த தலைப்பு : காகத்தின் பாடம்)

இரா.மதிவாணன்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Comments

Post a Comment

Popular posts from this blog

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

கட்டுரை 8 (05.04.2016)