கட்டுரை 39 (10.01.2018)
நெருங்கும் பேரழிவு சாகர்மாலா !
--------------------------------------------------------------
இதுவரை நாம் பார்த்த அழிவுத்திட்டங்களான Methane, Shale, Nutrino, Hydrocarbon, Gail, Ongc என இதில் இருந்து கிடைக்கக்கூடிய இயற்கைக்கு சொந்தமான வளங்களை பெருநிறுவன முதலைகள் அறுவடை செய்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்போகும் திட்டத்திற்கு பெயர்தான் சாகர்மாலா.
இந்திய வரலாற்றிலேயே மிகப்பிரம்மாண்டமாக 8,00,000 கோடி செலவில் 2003 ஆம் ஆண்டு துவங்கி வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்ட செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் இது.
இதற்கு இந்திய குடி மக்கள் ஒவ்வொருவரின் சட்டைப்பையில் இருந்து 6,400 ரூபாய், நம்மை கேட்காமலேயே எடுத்துள்ளார்கள்.
7,500 km நீளமுள்ள இந்திய கடற்கரையில் ஒரு ஊர் அளவு பிரம்மாண்டமான 20 துறைமுகங்கள், 200 துணை துறைமுகங்கள் கட்டமைக்க உள்ளார்கள்.
இந்த துறைமுகங்கள் அனைத்தும் 7000 km நீளமும், 600 meter முதல் 200 meter வரை அகலமான சாலைகள், ரயில் தண்டவாளங்கள், ஆற்று வழிகள், குழாய்கள் மற்றும் வாணூர்தி மூலமாக இணைக்க மிகப்பிரம்மாண்ட கட்டமைப்பு ஏற்படுத்த உள்ளார்கள்.
இது சாதாரண சாலை அல்ல, இராணுவ பீரங்கி வாகனம் செல்லவும், இராணுவ விமானங்கள் இந்த சாலையில் தரை இறக்கும் அளவிற்கு மிகவலிமையாக கட்டமைக்கப்பட உள்ளார்கள். இராணுவ விமானங்களை இந்த சாலையில் தரை இறக்க நமது அன்பிற்குறிய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
நமது வளங்களை கொள்ளையடிக்க வெள்ளையன் தண்டவாளம் அமைத்தான், கொள்ளையடித்தது பற்றாது என்று, இந்த ரயில் பாதைகள் தற்போதைய Goods ரயில் பாதையை விட பத்து மடங்கு அகலமாக வடிவமைக்க உள்ளார்கள். இது அனைத்திற்கும் பெயர் தான் Smart City.
ஆற்று வழித்தடங்களை துறைமுகங்களுடன் இணைக்க வேண்டும். இதற்குப் பெயர்தான் நதி நீர் இணைப்புத்திட்டம். இதை மோசடி ஆசாமியின் துணை கொண்டு செய்து வருகிறார்கள்.
இந்த துறைமுகங்களுக்கு மின் வசதி கொடுக்கத்தான் கூடன்குளம் அணு மின் நிலையம். இந்த சாகர்மாலா திட்டத்தை நிறைவேற்ற Roadway, Railway, Pipeline, Riverway, Airway, IT என பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தேவைப்படுகிறது. இது தான் Make In India.
உலகிலேயே தரமான கருங்கற்கல் கிடைக்கும் ஒரே இடம் நம் தமிழகம். இதை சுரண்டி எடுத்து ஏற்றுமதி செய்யவே மலைகளை குடையும் Neutrino திட்டம்.
பூமிக்கடியில் உள்ள பெட்ரோலியப் பொருட்கள், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், நிலக்கரி போன்ற இயற்கைக்கு சொந்தமான வளங்களை எல்லாம் எடுக்கவே Hydrocarbon, Methane, Shale, ONGC திட்டம். இதை குழாய் மூலம் துறைமுகங்களுடன் இணைக்கவே Gail pipeline திட்டம்.
இதை எல்லாம் நிறைவேற்ற இப்பகுதியில் உள்ள வேளாண் மக்களை வேளாண்மையில் இருந்து விரட்டியடிக்கவே, நீண்ட வருடமாக நீளும் காவரி நீர் பங்கீட்டுப்பிரச்சனை. காவரியில் நீர் வராததிற்கும், காவரி மேலாண்மை வாரியம் அமைக்காததிற்கும் இதுவே காரணம்.
பிரம்மாண்ட துறைமுகங்கள் அமைக்க 3,600 கடற்கரை மீனவ கிராமங்களை அப்புறப்படுத்தி, 25 கோடி மீனவ மக்களை அவர்களது மீன்பிடி தொழிலில் இருந்தும் விரட்டியடிக்க உள்ளார்கள்.
இதற்கு இவர்கள் வடிவமைத்த நாடகமோ ஏராளம் ஏராளம். எண்ணூர் எண்ணை கசிவு. கடற்கரை ஓர மீனவ கிராமங்களில் காவல்துறை அத்துமீறல், தமிழர்கள் மீது கச்சத்தீவு எல்லையில் இலங்கை இராணுவத் துப்பாக்கிச்சூடு. ஒகி புயல் அறிவிப்பின்மை. மீன்பிடிக்க சீன வலை. என நாடகம் நீளக்கடலை விட நீள்கிறது.
25 கோடி மக்கள் வயிற்றில் அடித்து இவர்களை இந்த தொழிலில் இருந்து அப்புறப்படுத்த 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளார்கள் ஒரு ஊரளவு பிரம்மாண்ட துறைமுகங்களில் துப்புறவு தொழிலாலியாக கூட்டி பெருக்க, கழிவறை சுத்தம் செய்ய போன்ற அடிமை கூலி வேலைகளில் நம் மக்களை பணி அமர்த்த உள்ளார்கள்.
மேலும் 4120 சதுரக் கிலோ மீட்டர் மேங்ரூவ் காடுகள் அளிக்கப்பட உள்ளது, "செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என்பார்கள் அதுபோல் இறந்தும் கடலடியில் புதையுண்டு பவலப்பாறைகள் வசிப்பிடமாய் மாறிப்போன நமது முன்னோர்களின் வாழ்விடங்களில் அமைந்திருக்கும் மீன்கள் உற்பத்தியாகக்கூடிய இடமான பவலப்பாறைகள் முழுவதும் துறைமுக கட்டமைப்பின் போது அழித்தொழிக்கப்படும்.
உலகிலேயே அதிக பவலப்பாறைகள் கொண்டது நமது கடற்கறை என்பது குறிப்பிடத்தக்கது.
கடல் ஓரங்களில் உள்ள 1208 தீவுகளை தனியார் Corporate நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்போகிறார்கள். இதற்கும் தனுஷ்கோடி, மக்கள் வாழ தகுதியற்ற இடம் என்ற இந்திய அரசு அறிவிப்பிற்கும் தொடர்பு இல்லை என சொன்னால் முட்டாள் கூட நம்பமாட்டான்.
மற்றும் உலகிலேயே எங்கும் நடக்காத கூத்தாக சில துறைமுகங்களை தனியாருக்கு ஒப்படைக்க உள்ளார்கள். இந்த துறைமுகங்கள், தீவுகள் அனைத்தும் இராணுவ மயமாக்கப்பட உள்ளது.
இப்படி, தான் நினைத்த அனைத்தையும் Corporate கைக்கூலிகளான கூமுட்டை அரசியல் வியாதிகளை வைத்து திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது உலகவல்லாதிக்கம்.
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் 2035 ல் தமிழகம் வாழத்தகுதியற்ற பாலைவன பூமியாக மாறிப்போகும் என்கிறது ஒரு ஆய்வு.
சரி இந்த பேரழிவு வராமல் தடுக்க, நாம் செய்ய வேண்டிய முதற்கட்ட பணி என்ன ?
நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான் இந்த சாகர்மாலா திட்டத்தின் அபாயத்தை Phd Scholar முதல் பாமரன் வரை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.
மக்கள் மட்டும் விழிப்படைந்துவிட்டால் எந்த சக்தியாலும் ஒன்றும் செய்ய முடியாது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அழிவுத்திட்டங்களின் அபாயத்தை எளிமையாக கொண்டு சேர்க்க எனது யோசனை !
எந்த வசதியும் இல்லாத காலத்தில் பாமரனுக்கு இரமாயணம், மகாபாரதம் எல்லாம் எப்படி சென்றடைந்தது ? தெருக்கூத்து மூலம் அது போல் தான் இதுவும்.
சாகர்மாலா போன்ற அழிவுத்திட்டங்களை அழிக்கும் திட்டத்தின் பெயர்
தெரு விழித்திரை / Street Aware Screen !
------------------------------------------------------------------------
தெருவிற்கு ஒரு விழிப்படைந்த இளைஞன் நிச்சயம் இருப்பான், நாம் நம் தெருவில் உள்ள மக்கள் அனைவரும் இணைந்து Projector, Screen, Speaker & Mike இதை சொந்தமாகவோ வாடகைக்கோ வாங்க வேண்டும்.
சாகர்மாலா போன்ற பேரழிவுத்திட்டத்தின் அபாயத்தை குறித்து விளக்கும் பல காணொளிகள் உள்ளது, அதை மாலை நேரங்களில் மக்களுக்கு போட்டுக்காட்ட வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்தும், இன்னும் பல குறும்படங்களை உருவாக்கி போட்டுக்காட்ட வேண்டும்.
இந்த தெரு விழித்திரை நிகழ்ச்சி தமிழகம் முழுக்க உள்ள அனைத்து தெருக்களிலும் நடைபெற வேண்டும்.
இதை பார்க்க பார்க்க மக்கள் இதை பற்றி சிந்திக்க துவங்குவார்கள், பேசத்துவங்குவார்கள், நாளை எதிர்க்க வேண்டிய நிலை வந்தால் மக்கள் அனைவரும் ஒருமித்த குரல் கொடுக்க இது நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.
இது தெருவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திரை என்பதால் "தெரு விழித்திரை" என பெயர்.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி எங்கள் தமிழ் குடி, இம்மண்ணில் வாழும் வரை எந்த கொம்பனாலும் இந்த மண்ணை ஒன்றும் செய்ய முடியாது.
Alex Collier என்னும் ஆராய்சியாளர் உலகில் முதல் முதலாக பேசப்பட்ட மொழி "தமிழ்" என்கிறார்.
UNESCO சொல்கிறது "TAMILIANS ARE REFERRED TO BE THE LAST SURVIVING CLASSICAL CIVILIZATION IN THE WORLD"
இவ்வுலகில் கடைசியாக வாழும் தொல் இனம் "தமிழினம்" என்கிறார்கள்.
நம்முடன் வாழ்ந்த சமகால தொல் இனங்கள் அனைத்தும் அழிந்துவிட்டது. நாம் மட்டும் இவ்வுலகில் நிலைத்திருக்க காரணம் ஒன்றுதான். அது நம்முடைய போர்குணம்.
இந்த நாசக்கார சாகர்மாலா திட்டத்தை மட்டும் நாம் தடுக்காமல் விட்டால், தமிழகம் அடுத்த சோமாலியாவாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.
முன் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் இணைத்துப் பார்த்தால், அது அத்தனையும் இத்திட்டத்திற்காகத்தான் என்பது உங்களுக்கு தெரியவரும்.
இத்திட்டம் வராமல் தடுப்பது, இம்மண்ணில் விளைந்த அரிசிப் பருக்கையை உண்ணும் ஒவ்வொருவரது கடமை. இக்கடமையை நாம் செய்யத்தவறினால், தன் சொந்த மண்ணையும், இனத்தையும் காக்காத பெரும்பாவத்திற்குள்ளாகி, ஈனப்பிறவிகள் என வரலாற்றில் இடம் பிடிக்கும் அவல நிலை ஏற்பட வாய்புள்ளது.
உடனே இந்நாசக்கார சாகர்மாலா என்னும் அழிவுத்திட்டம் ஏற்படுத்தப்போகும் பேராபத்தை மக்களுக்கு உணர்த்த "தெரு விழித்திரை / Street Aware Screen" என்னும் திட்டத்தை நாம் செயல்படுத்துவோம்.
இயற்கையை இறைவனாக வழங்கிய நாங்கள், எங்கள் கண்முன்னே இயற்கை வளங்கள் கொள்ளை போவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.
நன்றி
வெளியிட்ட தேதி : 10.01.2018
(அடுத்த தலைப்பு : வைத்தியம் தேவை)
இரா.மதிவாணன்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Comments
Post a Comment