கட்டுரை 30 (25.09.2017)

அலோபதியும் பார்த்தீனிய செடியும் !
--------------------------------------------------------------------


அலோபதிக்கும் பார்த்தீனிய செடிக்கும் என்ன தொடர்பு என கேட்கிறீர்களா ?

இதோ

உலகில் நம்மை கண்டு பொறாமைப்படாதா நாடுகளே இல்லை எனலாம்.

நாம் நமது வீட்டை சுற்றி வளரும் மூலிகை செடிகளை கொண்டு மருத்துவத்தில் தன்நிறைவாக வாழ்ந்து கொண்டிருந்த காலம் அது.

அமெரிக்காவின் ஆலோபதி மருத்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு இது எரிச்சலை மூட்டியது.

அவர்களின் ஆங்கில மருத்து வியாபாரத்திற்கு நமது மூலிகை செடிகள் தடையாய் இருந்தது.

எனவே இந்த மூலிகை செடியை அழித்தால் ஒழிய நாம் இந்த நாட்டில் ஆலோபதி மருந்துகளை வியாபாரம் செய்ய முடியாது என்ற முடிவிற்கு வந்தார்கள்.

இந்த மூலிகை செடிகளை அழிக்க Allopathy Corporate டுகள் ஒரு திட்டம் தீட்டினார்கள்.

1956-ம் ஆண்டு இந்தியா  அமெரிக்காவிலிருந்து கோதுமையை மும்பைத் துறைமுகத்தின் வழியே இறக்குமதி செய்தது. அதில் பார்த்தீனிய விதையை கலந்துவிட்டார்கள்.

தற்போது இந்தியாவில் இந்த நச்சு பார்த்தீனிய செடி 42 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை ஆக்கிரமித்து புற்று போல் புரையோடி வளர்ந்து நிற்கிறது.

பார்த்தீனிய செடி அம்புரோசின் என்ற நச்சு வேதிப்பொருள்களை உருவாக்கி மற்ற தாவரங்களை அழிக்கிறது.

இது ஒரு இராணுவ கட்டமைப்பு கொண்ட செடியாகும். இது வளரும் இடத்தில் வேறு எந்த செடிகளையும் வளர விடாது. இதன் ஒரு செடி மட்டும் 10,000 விதைகளை உருவாக்கும்.

20 ஆண்டுகள் நீர் இல்லாவிட்டாலும் இதன் விதைகள் மண்ணில் புதைந்திருந்து, மழை வந்ததும் உயிர் பெற்று தனது இனத்தை பெருக்கும் வல்லமை பெற்றது.

இவை நமது மூலிகை செடிகளை வளரவிடாமல் தடுத்து பல அரிய மூலிகைகளை அழித்துவிட்டது.

எளிதாக நமக்கு கிடைத்த மூலிகைகளை வைத்து அனைத்து நோய்களையும் குணப்படுத்திய நாம் மூலிகைகள் கிடைக்காமல் தினறிப்போனோம்.

அலோபதிக்கு தனது மருந்து வியாபாரத்தை துவங்க காலம் கனிந்தது. அரசுகளை தன் சட்டை பைக்குள் போட்டது.

பொய் பிரச்சாரங்கள், தவறான மருத்துவ படிப்பு, சினிமாவில் ஆதரவான காட்சிகள் மற்றும் அனைத்து ஊடகத்திலும் ஆதரவான கருத்துக்களை உருவாக்கி மக்களை மயக்கியது.

பார்த்தீனியம் நமது நிலத்தை ஆக்கிரமித்து மூலிகைகளை அழித்தது போல், ஆங்கில மருந்துகள் நம் நாட்டை ஆக்கிரமித்து மக்களை அழித்து வருகிறது.

இந்த செடி நமது மூலிகைகளை அழித்தது மட்டுமல்லாமல் மனிதனுக்கு ஆஸ்துமா, சொறி, கரப்பான் போன்ற தோல் நோய்களை உருவாக்குகிறது.

விளைநிலத்தின் விளைச்சலை பாதியளவு குறைக்கிறது. அதிக அளவு கார்பன் டை ஆக்ஸைடை வெளியிட்டு சுற்றுச்சூழலை பாதிக்கிறது.

பல்லுயிர்களை அழித்து, கால்நடைகளுக்கு வயிறு, குடல் புண்கள் மற்றும் பல்வேறு நோய்களை உருவாக்குகிறது. இதை தின்ற மாட்டின் பால் நச்சு ஏறி கசக்கும்.

இத்துனை ஆபத்தான இந்த நச்சு செடியை நாம் அழிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல நீங்கள் ஆயிரம் முறை பிடுங்கி போட்டாலும் திரும்ப திரும்ப முளைத்துக்கொண்டே இருக்கும்.

இதை ஒழிப்பது தனி மனிதன் கையில் இல்லை, அரசும் மக்களும் இணைத்து சரியான திட்டம் தீட்டி இதை நம் மண்ணில் இருந்து வேரருக்கப்பட வேண்டும்.

ஆங்கில வைத்தியத்தை நம்மிடையே திணிக்க என்னென்ன வேலைகள் நடந்துள்ளது பாருங்கள்.

இனியாவது விழிப்போம்

பார்த்தீனியத்தை ஒழிப்போம்

மூலிகை செடிகளை வளர்ப்போம்.

நன்றி

வெளியிட்ட தேதி : 25.09.2017

(அடுத்த தலைப்பு : டெங்கு தோல் உரிக்கும் கட்டுரை)

இரா.மதிவாணன்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Comments

  1. நன்றி.

    நமது துத்தி செடி வளர்ந்தால் பார்த்தினியம் அங்கு வளராது. எனது வீட்டிற்க்கு அருகில் ஒரு வருடம் பார்த்தினியட்தின் தொல்லை மிக அதிகமாக இருந்தது. முடிந்த அளவு களைந்தோம்.

    அடுத்த வருடம் துத்தி வந்த பிறகு கிட்டத்தட்ட இவை சுத்தமாய் முளைக்கவே இல்லை.

    அதே போல் பார்த்தினியம் செடியை மாட்டு சாணி கலனில் கலந்து பின் மக்கச் செய்தால் விதைகள் முளைக்காது, மேலும் செடி உரமாகிவிடும் என்று யாரோ ஒருவர் பதிவை படித்திருக்கிறேன்.

    கோதுமையும் நாம் தவிர்க்க வேண்டிய உணவுதான் (தென்னகத்தில்).
    மீண்டும் நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

தற்சார்பு தடுப்பூசி !