கட்டுரை 22 (04.07.2017)
வேலை தேடாதே உருவாக்கு !
-------------------------------------------------------
தமிழா ! நீ உழைப்பது வெளிநாட்டு கம்பனிகளுக்கு. அவனிடம் இருந்து சம்பளம் பெற்று நீ வாங்கும் பொருளும் அவனுடையதாகவே உள்ளது.
இப்படி உன் நேரமும் உழைப்பும் செல்வமும் அவனுக்கே செலவளிக்கும் போது நீ எப்படி முன்னேறுவாய் ? உன் நாடும் எப்படி முன்னேறும் ? சிந்திக்கமாட்டாயா ?
நாமும் நம் நாடும் முன்னேற வேண்டும் என்றால், நம்முடைய
நேரம்
உழைப்பு
செல்வம்
இவை அனைத்தையும் நம் நாட்டிற்கு செலவளிக்க வேண்டும்.
இன்னொருவன் வாழ காலம் முழுக்க வேலை செய்யும் நீ
உனக்காகவும், உன் நாட்டிற்காகவும் என்றைக்கு வேலை செய்யப்போகிறாய் ?
வேலையை தேடி அழையாதே, நம் கண் முன் ஆயிரம் ஆயிரம் வேலைகள் கொட்டிக்கிடக்கிறது.
அதில் எனக்கு தெரிந்த சிறு துளி இதோ
மனிதன் உயிர் வாழ தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களில் இருந்து துவங்குவோம்.
* உணவு
* உடை
* உறைவிடம்
* அன்றாட பயன்படுத்தும் பொருட்கள்
* குருகுல கல்வி
* மரபு மருத்துவம்
* குப்பை மேலாண்மை
* மரபு சாரா எரிசக்தி
* குல தொழில்
* தொழில்நுட்பங்கள்
* புதிய கண்டுபிடிப்புகள்
* ஊடகம்
* தொலைதொடர்பு
* புத்தகம் மற்றும் குறுந்தகடு நிலையம்
* இவற்றிற்கான ஆலோசனை மையங்கள்
உணவு !
--------------
1 - தற்போதைய உடனடி தேவை நல்ல உணவு, இயற்கை வழி விவசாயம் செய்து, உணவுப்பொருட்களை நேரடியாக மக்களுக்கு விநியோகம் செய்யலாம்.
2 - பாரம்பரிய உணவகங்கள் துவங்கலாம்.
3 - Backeryகள் பெருகி புற்றுநோய் அதிகரித்து வருகிறது இவற்றிற்கு மாற்றாக நம் பாரம்பரிய சிற்றுண்டி உணவுகளை தயாரித்து. சிற்றுண்டி நிலையங்கள் திறக்கலாம்.
4 - குளிர்பானங்கள் குல நாசம் செய்கிறது. இதற்கு பழச்சாறுகள், காய்கனி சாறுகள். இளநீர், மோர், கூழ் மற்றும் Fruits & vegetables salad கடைகள் துவங்கலாம்.
5 - நல்ல பால் மற்றும் பால் பொருட்களுக்காக நாட்டு மாட்டினங்களை கொண்டு பண்ணை ஆரம்பிக்கலாம்.
6 - நாட்டுப்பசும் பால் மற்றும் பால் பொருட்கள் அங்காடி துவங்கலாம்.
7 - Filter, Mineral, RO, கொதிக்க வைத்த நீர் கிட்னியை கெடுத்துவிடும். இயற்கைமுறையில் நீரை சுத்திகரிக்க 3 அடுக்கு மண்பாண்டங்களை செய்து மக்களுக்கு கொடுக்கலாம்.
8 - தூய காற்றும் உணவும் பெற வீடுகளுக்கு Gardening மற்றும் வீட்டுத்தோட்டம் அமைத்து கொடுக்கலாம்.
9 - இயற்கை விளைப்பொருட்களின் அங்காடி திறக்கலாம்.
10 - நாட்டு ரக செடிகள் பழமர நாத்துக்கள் அடங்கிய Nursery துவங்கலாம்.
உடை !
------------
1 - Bt பருத்தி உடலிற்கும் நாட்டிற்கு கேடு, நாட்டு பருத்தி பயிர் செய்யலாம்.
2 - பருத்தி நூலாகும் வரை உள்ள Processing தொழிலை செய்யலாம்.
3 - இரசாயண நிறம் பயன்படுத்தும் சாயப்பட்டறைகளால் ஆறு, நிலத்தடி நீர் மாசுபடுவது மட்டும் அல்லாமல் அதை உடுத்தும் மனிதனின் தோல் வழியாக இரசாயணம் ஊடுருவி அவன் உயிருக்கே குந்தகம் விளைவிக்கிறது.
இதற்கு மாற்றாக இயற்கை நிறங்களை பயன்படுத்து துணிகளுக்கு சாயம் ஏற்றும் ஆலைகள் துவங்கலாம்.
4 - இயற்கை நிறம் ஏற்றப்பட்ட துணிகளை விற்க்கும் கடைகள் துவங்கலாம்.
5 - இயற்கை நிறங்களை தயாரிக்கும் தொழிர்ச்சாலைகளை திறக்கலாம்.
உறைவிடம் !
----------------------
1 - பலர், வாழ வீடு கட்டுகிறார்களோ இல்லையோ அடுத்தவன் பார்த்து வாய்பிளப்பதற்காகவே வீடு கட்டுகிறார்கள். இதற்கு எத்துனை இயற்கை வளங்கள் சூரையாடப்படுகிறது என்பது உங்களுக்கே தெரியும். இயற்கை வளங்களை காக்க,
Eco Friendly Building கட்டும் வேலையை செய்யலாம்.
அன்றாட பயன்படுத்தும் பொருட்கள் !
-----------------------------------------------------------------
1 - நாம் காலை பயன்படுத்தும் பற்பசை, டீ, காபி முதல் இரவு பயன்படுத்தும் கொசுவிரட்டி வரை அனைத்து நச்சால் ஆனது. இவற்றிற்கு மாற்றாக
பல்பொடி, குளியல் பொடி, சிகைக்காய் பொடி, தேனீர் பொடி, காபி தூள், மசாலா பொடிகள், சத்து மாவுகள், மரச்செக்கு எண்ணெய்கள், கல் உப்பு, பாறை உப்பு, பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, வெல்லம், கரும்பு சர்க்கரை, மலைத்தேன், கொசு விடட்டி, போன்ற பல அன்றாட பொருட்கள் அடங்கிய அங்காடி திறக்கலாம்.
2 - வீட்டில் இருந்தபடியே மேல் கூறப்பட்ட பொருட்களை ஒன்றை தேர்வு செய்து, தரமான பொருள் தயாரித்து அங்காடிகளுக்கு கொடுக்கலாம்.
இதன் மூலம் ஏற்படும் நண்மைகள் எண்ணிலடங்காதது சிந்தித்து பாருங்கள்.
3 - நல்லுணவை தயாரிக்க நல்ல பாத்திரங்கள் தேவை உள்ளது, மண் பாண்டங்கள், கல், இரும்பு, செம்பு, பித்தளை பாத்திரங்கள் வியாபாரம் செய்யலாம்.
4 - நெகிழிப்பைக்கு மாற்றாக காகித பை மற்றும் துணிப்பை தயாரித்து கடைகளுக்கு விநியோகம் செய்யலாம்.
குருகுல கல்வி !
---------------------------
1 - தற்போதைய கல்விமுறை சுயமாக சிந்திக்கதெரியாத அடிமைகளை உருவாக்கி வருகிறது.
அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க சிறந்த ஆசான்களை கொண்டு குருகுல கல்வி நிலையங்கள் துவங்கலாம்.
இதில் இயற்கை விவசாயம், மரபு மருத்துவம், பாரம்பரிய விளையாட்டுகள், இயல், இசை, நாடகம் என அனைத்து துறைகளையும் சேர்க்கலாம். யாருக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதை படிக்கட்டும்.
மரபு மருத்துவம் !
-------------------------------
1 - மருத்துவத்துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் அக்குபங்சர், வர்மா, சித்தா, போன்ற மரபு மருந்துவங்களை கற்று மருத்துவ மையங்கள் துவங்கலாம்.
(அலோபதியால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது)
குப்பை மேலாண்மை !
---------------------------------------
1 - தமிழக வீடுகளில் சேரும் குப்பைகளை தரம் பிரித்து மக்காத குப்பைகளை மறுசுழற்சிக்கும், மக்கும் குப்பைகளை உரமாகவும் தயாரித்து விற்பனை செய்யலாம்.
இதன் மூலம் நாடு தூய்மையாகும், பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
2 - கால்நடை மற்றும் மனித கழிவுகளை கொண்டு மீத்தேன் எரிவாயு தயாரிக்கலாம்.
மரபுசாரா எரிசக்தி !
-----------------------------------
1 - மீத்தேன் போன்ற அரக்கனிடம் இருந்து தப்பிக்க மரபுசாரா எரிசக்திக்கு திரும்பியாக வேண்டும். எளிய மக்களும் பயன்படுத்தும் வகையில் Bio Gas Plant தயாரித்து வியாபாரம் செய்யலாம்.
2 - சூரியசக்தி தகடுகள், இதில் இயங்கும் மின்சாதன பொருட்களை தயாரித்து விநியோகம் செய்யலாம்.
3 - Petrol diesel க்கு மாற்றாக எரிபொருள் கண்டுபிடித்து விற்பனை செய்யலாம்.
4 - Bio Gas, சூரிய ஒளி, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை வடிவமைத்து வியாபாரம் செய்யலாம்.
5 - Bio gas ல் இருந்து மின்சாரம் தயாரிக்கும் இயந்திரம் உருவாக்கி வணிகம் செய்யலாம்.
குல தொழில் !
-------------------------
நாம் நம்முடைய குல தொழிலை கைவிட்டதால் இன்று அது Corporate இடம் சென்றது. ஒரு காலத்தில் இந்த தொழிலுக்கு முதலாலியாக இருந்த நாம் இன்று அதே தொழிலில் கூலிக்கு வேலை செய்கிறோம். நாம் செய்த நல்ல பொருட்களும் மக்களுக்கு கிடைப்பதில்லை.
குல தொழில்களை மீட்டெடுத்து செய்யலாம்.
தொழில்நுட்பங்கள் !
---------------------------------------
1 - அனைத்து துறைகளிலும் இயற்கை பாதிக்காக வண்ணம் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி விற்பனை செய்யலாம்.
2 - தகவல் தொழில்நுட்பத்தில் நமது கண்டுபிடிப்புகளை புகுத்தலாம்.
புதிய கண்டுபிடிப்புகள் !
-------------------------------------------
1 - எத்தனையோ கண்டுபிடிப்புகள் முடங்கி கிடக்கிறது அதை மீட்டெடுத்து மக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைத்து சந்தைப்டுத்தலாம்.
ஊடகம் !
---------------
1 - நல்லதை சொல்லித்தர நமக்கென்று ஊடகம் இல்லை. நமக்கென்று தனி தொலைக்காட்சி துவங்கலாம்.
2 - நல்ல செய்தி அச்சிட செய்தித்தாள் இல்லை, செய்தித்தாள், மாத இதழ்களை துவங்கலாம்.
3 - நல்ல விடையங்களை பேச FM radio துவங்கலாம்.
தொலை தொடர்பு !
---------------------------------
1 - இந்திய தயாரிப்பு தொலைதொடர்பு சாதனங்கள் அடங்கிய அங்காடி துவங்கலாம்.
2 - தொலைதொடர்பு Network துவங்கலாம்.
3 - தொலைதொடர்பு வசதிக்காக ISRO மூலம் நமக்கென்று தனி Satilite அனுப்பலாம்.
புத்தகம் மற்றும் குருந்தகடு நிலையம் !
-------------------------------------------------------------------
1 - நல்ல நல்ல கருத்துக்கள் உண்மைகள் அடங்கிய புத்தகங்கள் பல உள்ளன, நல்ல விடையங்களை அடங்கிய குருந்தகடுகளும் வரத்துவங்கி உள்ளன. இவைகளை கொண்டு ஒரு புத்தக நிலையம் துவங்கலாம்.
ஆலோசனை மையம் !
------------------------------------------
1 - இது போல் அனைத்து தகவல்களையும் சேகரித்து மக்களுக்கு கொண்டு செல்ல ஆலோசனை மையங்கள் துவங்கலாம்.
ஆண்டாண்டாக வேலை செய்கிறோம் நாமும் முன்னேறவில்லை நம் நாடும் முன்னேறவில்லை. மாறாக அழிந்து வருகிறோம், காரணம் நாம் வேலை செய்வது யாருக்கோ.
இனி நமது நேரம், உழைப்பு, செல்வங்களை நம் நாட்டிற்கு செலவளிப்போம்.
அறிவார்ந்த ஆரோக்கிய சமூகத்தையும் வளமான நாட்டையும் உருவாக்குவோம்.
நன்றி
வெளியிட்ட தேதி : 04.07.2017
(அடுத்த தலைப்பு : நோய்கள் உருவாகும் இடங்கள்)
இரா.மதிவாணன்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

மிக அருமை
ReplyDelete