கட்டுரை 21 (01.07.2017)

ஒரு யோசனை !
------------------------------


தமிழ் உழவன் மாட்டிறைச்சி உண்பதில்லை, அதை வெட்ட அனுப்பவும் அவனுக்கு மனமில்லை. வேறு வழி இல்லாமல் விற்கிறான்.

தமிழர்களை பொருளாதாரத்தில் சிக்க வைத்து கை தட்டி வேடிக்கை பார்க்கிறது அரசுகள்.

மாடு வளர்க்கும் விவசாயிகள் ஒரு கட்டத்தில் மாடுகளை விற்றாகத்தான் வேண்டும் அல்லது வேறு ஒருவருக்கு கொடுத்தாக வேண்டும்.

பொது மக்களும் அரசும் இணைந்து, மாடுகள் பாதுகாப்பு மையம் உருவாக்கலாம்.

விவசாயிகள் தங்கள் மாடுகளை விற்க வேண்டிய நிலை வரும் போது, இங்கு விற்கலாம்.

அந்த பாதுகாப்பு மையத்தில் உள்ள மாடுகளுக்கு நம் வீட்டு உணவுக்கழிவுகளை உணவாக கொடுக்கலாம்.

இதன் மூலம் அரசு, மட்கும் குப்பையை அழகாக மேலாண்மை செய்து தரமான உரம் தயாரிக்க முடியும்.

இந்த மாடுகளில் இருந்து கிடைக்கும் சானம் மற்றும் கோமியத்தை வைத்து எண்ணிலடங்கா பொருட்களை உருவாக்க முடியும்.

பொருட்களின் பட்டியலுக்கு இந்த பதிவு பற்றாது. இதை அரசே விற்பனை செய்யலாம்.

இதன் மூலம் அரசிற்கு வருவாய் கிடைப்பதோடு பல லட்சம் பேருக்கு வேலை வாய்புகளை உருவாக்க முடியும்.

இயற்கை வழி வேளாண்மை செய்ய மாடு அல்லது எரு தேவைப்படுவோறுக்கு, அரசு இதை கொடுக்கலாம்.

இதனால் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து இயற்கை வழி வேளாண்மை பெருகி அனைவருக்கும் நஞ்சில்லா இயற்கை உணவு கிடைக்க வாய்புள்ளது.

அனைத்திற்கும் மேலாக இதன் சானங்களை வைத்து Bio Gas தயாரித்து, வீடுகளுக்கு விநியோகம் செய்யலாம்.

மற்றும் இந்த bio gas ல் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும். இதையும் மக்களுக்கு விநியோகம் செய்யலாம்.

இதன் மூலம் Hydro Carbon, Methane, Shale gas, அனு உலை போன்ற அழிவு திட்டங்களில் இருந்து நாம் தப்பிக்க முடியும்.

இன்னும் பல எண்ணிலடங்கா நன்மைகள் உள்ளன.

இது அரசின் செவிக்கு எட்டுமா ? என்ற ஏக்கத்துடன்.

நன்றி

வெளியிட்ட தேதி : 01.07.2017

(அடுத்த தலைப்பு : வேலை தேடாதே உருவாக்கு)

- இரா.மதிவாணன்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Comments

Popular posts from this blog

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

தற்சார்பு தடுப்பூசி !