கட்டுரை 2 (3.06.2015)

எப்பொழுது சாப்பிட வோண்டும் ?
--------------------------------------------------------------

யாரெல்லாம் நேரத்தை பார்து சரியாக வேளா வேளைக்கு சாப்பிடுகிறார்களோ அவர்கள் வேளா வேளைக்கு மருந்து மாத்திரை சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்படும். உங்களுக்கு உணவு தேவையா இல்லையா என்பது உங்கள் உடலுக்கு தான் தெரியுமே தவிர உங்கள் வீட்டு கடிகாரத்திற்கு அல்ல. பின் எப்பொழுது சாப்பிட வேண்டும் என்று கேற்கிரீர்களா?, எப்பொழுது உங்களுக்கு பசி ஏற்படுகிறதோ அப்பொழுதுதான் சாப்பிட வேண்டும். ஆம், பசி எடுத்தால் மட்டும் தான் சாப்பிட வேண்டும், பல பேருக்கு பசி என்றால் என்னவென்றே தெரிவதில்லை.

நேயாளிகளுக்கு டாக்டர்கள் பரிந்துரைப்பது 2 மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிடுங்கள் என்று. இது முற்றிலும் தவறு. நமது வயறு என்ன இயந்திரமா, எப்பொழுதும் இயங்கிக்கொண்டே இருப்பதற்கு, இதற்கும் ஓய்வு தேவை. உங்கள் உடலுக்கு நீங்கள் யார், என்ன வேலை செய்கிறீர்கள், எப்பேர்பட்ட பதவியில் இருக்கிறீர்கள், உங்களுக்கு கீழ் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் என்றெல்லாம் தெரியாது, அதற்கு உணவு தேவைப்படும் பொழுது பசி என்கிற மொழி மூலம் நம்மிடம் தெரிவிக்கும். அப்பொழுது சாப்பிட்டால் போதும்.

சரி நேரம் முக்கியமில்லையா என்று பல பேர் கேற்பது புறிகிரது, நேரத்திற்கு முக்கியத்துவம் தர தேவையில்லை, நேரம் எல்லாம் பின்பு தான், இருந்தாலும் சாப்பிட வேண்டிய நேரம் குறிப்பிட வேண்டும் என்றால்,

காலை  : 7 - 9
மதியம் : 12 - 2
இரவு    : 7 - 7:30

இந்த நேரங்களில் பசி எடுத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. இந்த நேரத்தில் பசிக்கவில்லை என்றால், அடுத்த வேளையில் உண்னலாம், இடையில் பசி ஏற்பட்டால் எதாவது ஒரு பழங்களை சாப்பிட்டு விட்டு, அடுத்த வேளையில் உணவை உண்னலாம்.

இதை தான் 2000 ஆண்டுகளுக்கு முன் நம் முப்பாட்டனார் திருவள்ளுவர் தனது பொண் எழுத்துக்கள் மூலம் சொல்லிருக்கிறார். இதோ

"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்"

இதில் எப்பொழுது சாப்பிட வேண்டு என்று மட்டுமல்ல, அப்படி சாப்பிட்டால் என்ன பயன் என்றும் கூறிருக்கிறார்.

மருந்தென - மருந்து
வேண்டாவாம் - வேண்டாம்
யாக்கைக்கு - உடலுக்கு
அருந்தியது - சாப்பிட்டது
அற்றது - செரிமானம் ஆன பின்
போற்றி - பசித்து
உணின் - சாப்பிடு

நாம் உண்ட உணவு செரிமானம் ஆன பின்பு பசி எடுத்து சாப்பிட்டால் இந்த உடலுக்கு எந்த மருந்தும் தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.

இந்த இரண்டு வரியை இந்த தலைமுறைக்கு நீங்கள் கற்று கொடுத்திருந்தால் யாரும் நோய் என்கிற சிலந்தி வளைக்குள் சிக்கி இருக்க மாட்டார்கள்.

எது எப்படியோ இனிமேலாவது நாம் பின்பற்றுவோம், இளைய தலைமுறைக்கு கற்றுக்கொடுப்போம்.

வெளியிட்ட தேதி : 3.06.2015

நன்றி

இரா.மதிவாணன்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹




Comments

  1. Thanks for your advice...
    I follow this in my life...
    And every day.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

தற்சார்பு தடுப்பூசி !