கட்டுரை 19 (04.06.2017)

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எனது அன்பு வேண்டுகோள் !
----------------------------------------------------------------------------------


உங்களில் ஒருவனாக உங்களின் தற்போதைய நிலையை நன்கு உணர்வேன்.

தனக்கு எந்த துறையில் ஆர்வம் இருக்கிறது என்று அறிவதற்குள் கல்லூரி படிப்பு முடிந்துவிடுகிறது.

பிடிக்காத படிப்பாக இருந்தாலும், சமூக அழுத்தத்தினால் படித்து முடித்துவிட்டோம்.

படித்த வேலை
பலருக்கு இல்லை

கிடைத்த வேலை
கடமைக்கு செய்கிறோம்

விரும்பாத கல்விக்கடன்
செலுத்துவதில் போராட்டம்

வீட்டில் பிரச்சனை
சமாளிக்க பல யோசனை

இன்று சம்பலம்
நாளை காலியாகும் அவலம்

IT வேலை
துரத்துவான் மாலை

பிடித்த வேலை
போதிய வருவாய் இல்லை

பொருளாதார பிரச்சனை
மீள பல யோசனை

எதிர்கால வாழ்க்கை
என்னவாகும் நாளை

உடல் உபாதை
தீராத பிரச்சனை

என்றே செல்கிறது தமிழக இளைஞர்களின் வாழ்க்கை.

பலர் சினிமா, கிரிக்கெட், காதல் மோகத்தில் வீழ்கிறார்கள்.

சிலர் குடி, புகை போன்ற தீய பழக்கத்தில் வீழ்கிறார்கள்.

இதில் பட்டும் படாமல் தப்பி பிழைக்கும் சிலர் மட்டுமே சமூக பிரச்சனைகளை பற்றி சிந்திக்கிறார்கள்.

உனக்கு உயிர் கொடுத்து,
ஊட்டி வளர்த்த
உன் தமிழ் அன்னையின்
உயிர் ஊசலாடுகிறது.

பார்

Hydro Carbon
Methane
Shale gas
Neutrino
Gail pipe line
மதுக்கடை
அனு உலை
கழிவு மேலாண்மை
மேசமான நீர் மேலாண்மை
தாது மணல் கொள்ளை
கிரானைட் கொள்ளை
மணல் கொள்ளை
மலை சுரண்டல்
குளிர்பான ஆலை
சாயப் பட்டறை
தோல் தொழிர்ச்சாலை
மரபனு மாற்று பயிர்
நீரை நச்சாக்கும் ஆலை
காற்றை கரியாக்கும் ஆலை
மண்ணை மலடாக்கும் ஆலை
இரசாயண விவசாயம்
போலி மருத்துவம்
அறிவை நசுக்கும் கல்வி
கலப்பட உணவு
போலி உணவு
ஆக்கிரமிப்பு
நெகிழிக் காடு
போராடும் ஆறு

இப்படி உன் தாய் உயிருக்கு ஊசலாடும் போது, நாம் வேடிக்கை பார்ப்பது ஞாயமா நண்பா.

அரசு செய்யும் என நீ நினைத்தால் உலகத்தில் உன்னைவிட முட்டாள் வேறு யாரும் இருக்கமாட்டார்கள்.

அரசும் கார்ப்பரேட்டும் கூட்டுக்கலவானிகள். இவர்கள் இணைந்தே மண்ணையும் மக்களையும் சுரண்டி வருகிறார்கள்.

ஊடகம் இவர்களின் பேராயுதம்.

ஒரு செயலை வெற்றிகரமாக முடிப்பதற்கு தகவல் தொடர்பு முக்கியம். தமிழ்நாட்டு ஊடகங்களும் அரசும், மக்களுக்கானது அல்ல.

நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஊரை சுற்றி பார்ப்போம். நல்லதோ கெட்டதோ, என்ன நடந்தாலும் நம் கைப்பேசியில் பதிவு செய்து வலைதளங்களில் பதிவிடுவோம்.

நல்லவை நமக்கு ஊக்கம் அளிக்கும்
தீயவை நம்மை விழிப்படைய செய்யும்

இனி நாம் ஒவ்வொறுவரும் ஊடகமே !

நாம் குழுக்களாக செயல்பட வேண்டும்.

அழிவு திட்டம் ஆறாயும் குழு !
-------------------------------------------------

இந்த குழு ஏற்கனவே உள்ள அழிவு திட்டங்களை பட்டியலிட்டு அரசை உற்று நோக்க வேண்டும். அழிவு திட்டங்கள் நுழைய முற்பட்டால் உடனடியாக அதை பட்டியலிடலாம்.

ஊடகக்க குழு !
---------------------------

ஊரை சுற்றி பார்த்து என்ன நடக்கிறதென்று உண்மையை கண்டரிந்து , பொது இடங்களில், வீடுகளில், சமூக வளைதலங்களில் பதிவிடலாம்.

விழிப்புணர்வு குழு !
----------------------------------

அழிவு திட்டங்களை பற்றி பாமர மக்களுக்கு வெவ்வேறு வடிவில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

இசை வடிவில்
குறும் பட வடிவில்
நாடக வடிவில்
தோல் பாவை கூத்து வடிவில்
எழுத்து வடிவில்
ஆட்ட வடிவில்
புகைப்பட வடிவில்
பாக்கெட் அளவு புத்தக வடிவில்

போன்ற எண்ணற்ற வடிவங்களில், உண்மை மக்களை சென்றடைய வழிவகை செய்யலாம்.

களப் பணி குழு !
-----------------------------

இந்த குழு தன்னால் முடிந்த பிரச்சனைகளை களமிரங்கி தீர்க்கலாம். பிற பிரச்சனைகளை தீர்க்க அனைவரிடமும் ஆலோசனை பெற்று முடிவு செய்யயலாம்.

கண்டுபிடிப்பு குழு !
---------------------------------

அழிவு திட்டங்கள் மூலம் கிடைக்கும் பொருளை மாற்று வழியில் பெற, இந்த குழு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கலாம்.

செயலாக்க குழு !
------------------------------

இந்த குழு புதிய கண்டுபிடிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கலாம்.

-  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  - 

இதற்கு தனி அமைப்போ, சந்திப்போ தேவை கிடையாது.

அவரவர் இருந்த இடத்தில் இருந்து கொண்டே, பார்க்கும் வேலையில் இருந்து கொண்டே, நேரம் கிடைக்கும் போதெல்லாம், இதில் பிடித்த வேலையை செய்து சமூக வளைதலங்களில் பதிவிடலாம்.

இனியும் உறங்கினால்
விழிக்க உயிர் இருக்காது

நம் அழகிய தமிழகத்தை காக்க
நாம் எதாவது செய்தாகத்தான் வேண்டும்.

பேரழிவுப் பாதையில் இருந்து தமிழகத்தை
மீட்க
எழுவாய் தமிழா நெருப்பாய் !

நன்றி

வெளியிட்ட தேதி : 04.06.2017

(அடுத்த தலைப்பு : மாற்றம் வேண்டுமா)

- இரா.மதிவாணன்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Comments

Popular posts from this blog

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

தற்சார்பு தடுப்பூசி !