கட்டுரை 15 (05.04.2017)

 மண் முதல், நாடு வரை !
----------------------------------------------


நல்ல மண், நல்ல உணவாகிறது.

நல்ல உணவு, நல்ல உடலாகிறது.

நல்ல உடல், நல்ல எண்ணங்களாகிறது.

நல்ல எண்ணங்கள், நல்ல சமூகமாகிறது.

நல்ல சமூகம், வளமான நாட்டை உருவாக்கிறது.

நாம் என்ன செய்கிறோம் ?

அந்த மண்ணில் தான், உரம் என்ற பெயரில் நச்சு இரசாயணங்களை கொட்டி மண்ணை மலடாக்கிறோம்.

அந்த மண்ணில் தான், களை கொல்லி அடித்து, நமக்கு நாமே கொல்லி வைக்கிறோம்.

அந்த மண்ணில் தான், பூச்சிக்கொல்லி அடித்து, பூவுலகின் உயிர்களை அழிக்கிறோம்.

அந்த மண்ணில் தான், சாயக்கழிவை கொட்டி, சந்ததியை இழக்கிறோம்.

அந்த மண்ணில் தான், தோல் தொழிற்சாலையின் நச்சை கொட்டி, துரோகத்தை செய்கிறோம்.

அந்த மண்ணில் தான், வீட்டு விசக்கழிவை கொட்டி, வீண் விவாதம் செய்கிறோம்.

ஆண்டவா ! இன்னும் எத்தனை எத்தனை !

மண்ணை மலடாக்கிவிட்டு, நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்று நினைப்பது

குழந்தையை சிசுவில் கொன்றுவிட்டு, பிறசவம் நடைபெற காத்திருக்க சமம்.

தமிழக மக்கள் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும்.

நிச்சயம் அரசாங்கம் மக்களுக்கானதல்ல

வளர்ச்சி என்ற பெயரில், நாட்டின் வளத்தையும், நாட்டு மக்களையும் வெளிநாட்டிடம் அடகு வைத்து, அதில் லாபம் பார்ப்பதே இவர்களுக்கு தெரிந்த ஒரே வேலை.

அரசாங்கத்தை நம்புவது தற்கொலை செய்வதற்கு சமம்.

நம்மை, நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

நல்ல மண் இல்லையேல்
நல்ல உணவு இல்லை.

நல்ல உணவு இல்லையேல்
நல்ல உடல் இல்லை.

நல்ல உடல் இல்லையேல்
நல்ல எண்ணம் இல்லை.

நல்ல எண்ணம் இல்லையேல்
நல்ல சமூகம் இல்லை.

நல்ல சமூகம் இல்லையேல்
நல்ல நாடு இல்லை.

எனவே

நல்ல வளமான நாடு உருவாக, வளமான மண் வேண்டும்.

வளமான மண் உருவாக தமிழக விவசாயிகள் அனைவரும் உடனடியாக இயற்கை வழி விவசாயத்திற்கு திரும்பியாக வேண்டும்.

தமிழக மக்கள் இயற்கை வழி விவசாயிகளுக்கு முழு ஆதரவு தந்து, ஊக்கம் அளிக்க வேண்டும்.

தமிழ்நாடு இயற்கை வழி விவசாயத்தின் சொர்கபூமியாக மாற, நாம் அனைவரும் இனைந்து என்னென்ன செய்ய வேண்டும் என்ற செயல் திட்டம் தீட்டி, உடனடியாக பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

இது நடந்தால் மட்டுமே நாடு உண்மையான வளர்ச்சி அடையும்.

நன்றி

வெளியிட்ட தேதி : 05.04.2017

(அடுத்த தலைப்பு : அரசின் முதல் மூன்று முக்கிய வேலை)

இரா.மதிவாணன்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Comments

Popular posts from this blog

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

தற்சார்பு தடுப்பூசி !