கட்டுரை 11(24.06.2016)

பாரம்பரிய உணவு மற்றும் மருத்துவ திருவிழா !
----------------------------------------------------------------------------------------


                     இன்றில் இருந்து சராசரியாக 186 வருடங்களுக்கு முன் British நாட்டைச் சேர்ந்த Lord Macaulay யின் தலைமையிலான ஒரு குழு நம் நாட்டை சுற்றிப்பார்த்தது.
5 வருடங்கள் குமரி முதல் இமயம் வரை சுற்றிப்பார்த்துவிட்டு, British நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்பித்தது. 

இதோ அந்த அறிக்கை

இந்திய நாட்டின் நீள அகலங்களை சுற்றிப்பார்தோம்.
ஒரு பிச்சைக்காரர் இல்லை
ஒரு திருடன் இல்லை
அந்த அளவிற்கு செல்வச் செழிப்புடன் மதிப்புமிக்க நாடாக திகழ்கிறது.

இந்த நாட்டின் முதுகெலும்பாக திகழும் இவர்களின் ஆன்மீகம் மற்றும் தொன்மையான பாரம்பரியத்தை உடைத்தெரிந்தால் ஒழிய நாம் இவர்களை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

ஆதலால் நான் தெரிவிப்பது என்னவென்றால், இவர்களின் தொன்மையான பண்டைய குருகுல கல்விமுறையை மாற்றி, அவர்களை சொந்தநாடு, மொழி, கலாச்சாரத்தை விட, வெளிநாடு தான் சிறந்தது, ஆங்கில மொழி தான் நல்லது உயர்ந்தது என்று அவர்களாகவே நினைக்கும் அளவிற்கு நாம் மாற்றினால் இவர்கள் தங்கள் சுயமரியாதையை மற்றும் சொந்த கலாச்சாரத்தை இழப்பார்கள்.

பின் நமக்கு எப்படி தேவைப்படுவார்களோ அது போல் மாறுவார்கள். நம் ஆதிக்கம் நிறைந்த உண்மையான அடிமைநாடாக திகழும்.

இதுவே அந்த அறிக்கை

பின் இவர்கள் திட்டத்தின் படி ஆங்கில கல்விமுறை அரங்கேறியது. "காலத்தே பயிர் செய்" என்பது இவனுக்கு தெரிந்திருக்கிறது போல. வெறும் அடிமை வேலை மட்டுமே செய்யக்கூடிய வகையிலும், சுய சிந்தனையை அறவே உதயமாகாத வகையிலும் இந்த கல்விமுறை வடிவமைக்கப்பட்டு வெற்றிகரமாக இந்த நொடிவரை சுயமாக சிந்திக்க தெரியாத, சுய அறிவில்லாத அடிமைகளை இந்த தொழிற்ச்சாலை உருவாக்கி வருகிறது.

சரி இதனால் நாம் இழந்தது என்ன ?

சுயமரியாதை
பாரம்பரிய விவசாயம்
மரபு மருத்துவம்
நல்லுணவு
பாரம்பரிய கலைகள்
பாரம்பரிய விளையாட்டுகள்
சொந்த நிலம்
ஆரோக்கியம்
சுற்றுச்சூழல்
நிம்மதியான வாழ்க்கை

என ஒன்றுவிடாமல் ஒட்டு மொத்தமாக நம் சொந்த தாய்வழியான, பாரம்பரிய கலாச்சாரங்கள் அனைத்தையும் இழந்து வெறும் உணர்ச்சியற்ற நோய் பிண்டங்களாக பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறோம்.

எது வளர்ச்சி என்று தெரியாமல், நம்மை உருவாக்கிய, உயிரின் ஆதாரமாய் திகழக்கூடிய இயற்கை அன்னையை அழித்து வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் ஏதேதோ கூத்து நடந்து வருகிறது. 

நாமும் இதற்கெல்லாம் துணை போகிறோம் (நம்மை அப்படி வடிவமைத்துள்ளான்). இது நம் கழுத்தை நாமே அறுத்துவிட்டு நான் வளர்ச்சியடையப் போகிறேன் என்று சொல்வது போல் உள்ளது.

நமக்கு வளர்ச்சியான வாழ்கை தேவையல்ல
வளமான வாழ்க்கை தேவை
வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் உள்ளமும் உடலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

உண்மையான நிரந்திர சொத்தான நம் பாரம்பரிய உணவு, மருத்துவம் மற்றும் கலாச்சாரங்கள் அனைத்தையும் இழந்து பொய்யான தற்காலிக சொத்தான பணத்தை தேடி அலைகிறோம். 

இது கண்ணை விற்று கண்ணாடி வாங்கும் செயல்.
சரி இதற்கெல்லாம் தீர்வு என்ன ?
மீள முடியாதா ?
முடியும்
எப்படி ?
தமிழகமே திரும்பி பார்க்கும் வகையில் வரும் ஆடி மாதம் 19ஆம் நாள் பஞ்சமி திதியில் சித்த - அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், ஆயில்யம், மகம் நட்சத்திரத்தில் ( ஜீலை 24 ) பாரம்பரிய உணவு மற்றும் மருத்துவ திருவிழா நம் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. இதை பாரம்பரிய மீட்புப்போர் என்று கூட சொல்லலாம்.

இங்கு நம் பாரம்பரிய உணவு மற்றும் மருத்துவத்தின் தொன்மையையும், அருமையையும் நாம் உணர மருத்துவத் துறையில் பல சிறப்பு பேச்சாளர்கள் வருகை தர உள்ளனர்.
வாழப்பழகுவோம் வாருங்கள்

நிகழ்ச்சி நிரல்
---------------------------
தேதி : 24.07.2016
நாள் : ஞாயிற்றுக்கிழமை
நேரம் : 8:30Am to 7Pm
இடம் : CD Foundation, போத்தனுர், கோயம்புத்தூர்.
சிறப்பு அழைப்பாளர்கள்
திரு. ஹீலர் ரங்கராஜ் அவர்கள்
                                          - நிறுவனர்
  ஆச்சாரம் ஆரோக்கியம்
திரு. சிவகாசி மாறன் ஜீ அவர்கள்
                                          - நிறுவனர்
தாய்வழி இயற்கை உணவகம்
திரு. நா. பார்த்திபன் அவர்கள்
- தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்கம் பயிற்சி முகாம் ஆசிரியர்
மதியம் பாரம்பரிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

                           விழாவிற்கு மகுடம் வைத்தது போல் மதியத்திற்கு பிறகு
"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்"
என்ற வள்ளுவன் வாக்கை மனதில் ஏற்றி மருத்துவம் பார்க்கும் சிறந்த மருத்துவ குழுவால்.
மரபுமுறை முழு உடல் பரிசோதனை நிகழ்வு நடைபெற உள்ளது என்பது கூடுதல் மகிழ்ச்சியான செய்தி.
முன்பதிவு செய்வோருக்கு மட்டுமே அனுமதி

என்ற இந்த எண்ணிற்கு அழைத்து முன்பதிவு செய்யலாம்.
அனுமதி இலவசம்
முன்பதிவு ஆரம்பம்
இது நம் வீட்டுத் திருவிழா. தங்கள் சொந்த பந்தம், உற்றார் உறவினர், நண்பர்கள் என அனைவரும் இந்த திருவிழாவில் கலந்துகொண்டு பயனடைய வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த திருவிழாவில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் மருந்து மாத்திரைகளில் இருந்து விடு பெற்று, இறுதி வரை எந்த மருத்துவமனைக்கும் செல்லாமல் ஆரோக்கிய வாழ்க்கை வாழ்வார்கள் என்பது உறுதி.
நிகழ்ச்சி முடிந்தவுடன் நீங்கள் ஏதேனும் நன்கொடை வழங்க விரும்பினால் ஏற்றுக்கொள்வோம். இது நிகழ்ச்சி ஏற்பாடு செலவுகளை சமாளிக்க எங்களுக்கு பெரிதும் உதவியாய் இருக்கும்.

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அதனினும் அரிது கூண், குருடு செவிடு நீங்கி பிறத்தல் அரிது என்றாள்அவ்வை.
இப்பேர்ப்பட்ட அரிய பிறப்பை நமக்கு இறைவன் கொடுத்துள்ளான் என்றால், நாம் எப்படி நம் உடலை போற்றி பாதுகாத்திருக்க வேண்டும்.
"உள்ளமே பெருங்கோவில்
ஊனுடலே ஆலயமாம்"
ஆலயத்தின் ஆரோக்கியத்தை அரிய
நம்மை நாம் உணர
படைதிரண்டு வருவோம்
பாரம்பரியத்தை மீட்போம்

வெளியிட்ட தேதி : 24.06.2016

(அடுத்த தலைப்பு : அலோபதியின் அறுவடை)


நன்றி

இரா.மதிவாணன்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Comments

Popular posts from this blog

112 நண்பர்களின் உண்ணா நோன்பு அனுபவம் (18.11.2018)

உயிர் காக்கும் சித்த மருந்துகள்

தற்சார்பு தடுப்பூசி !